Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

முள்ளிவாய்க்காலும் ஐ.நாவும்

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 04

முள்ளிவாய்க்காலும் ஐ.நாவும்

தமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய, அமெரிக்க, சீன அரசுகளின் செயல்பாட்டினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச் சமூகமாய் விரிந்து நிற்கிற ஐ. நாவின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையில் மௌனமாகவும், நேரடியாகவும் பங்கெடுத்த நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டும்.

நீதியை பெறும் வரை தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் இந்த சர்வதேச அரங்கம் இலங்கை அரசுடன் கூட்டிணைந்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஐ. நா நேர்மையற்று நடந்து கொண்டதை சர்வதேச மக்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமும், வரலாற்று கடமையும் நமக்கு இருக்கிறது. இதன் மூலமே நமக்கு நிகழ்ந்த அநீதியின் முழு பரிமாணத்தினை உணர்த்த இயலும். இதுவே நமக்கு இதுகாரும் மறுக்கப்பட்டு வந்துள்ள சர்வதேச அங்கீகரம் மீளப்பெருவதற்கான வாதத்தினை தமிழ்ச் சமூகம் முன்வைக்க இயலும்.

இன்றையப் போராட்டங்கள் ஐ. நா அதிகாரிகளுக்கு எதிரான போராட்டமாய், அந்த அதிகாரிகளை விசாரிக்கவும், அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையும் திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருக்கின்றது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் இனப்படுகொலையில் ஐ. நாவின் பங்கேற்பினை அறிந்து கொள்வதும், ஐ. நா திட்டமிட்டு போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்கிற பழியை தமிழர்கள் மீது சுமத்தியதை அம்பலப்படுத்த முடியும்.

வன்னிப் படுகொலைகள் காலத்தின் போது ஐ.நா இன் செயற்பாடுகளை ஆராய்வதற்காக ஒருவரை ஐ.நா நியமித்தது. ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை கூட ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.

கடந்த ஆண்டு புரட்டாசி மாதம் இவருக்கு பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். எனினும், அவர் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டு அறிக்கை வெளிவந்தது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்ட யுத்தத்திற்கு முன்னர் ஐ.நா தனது ஊழியர்களை விலக்குவதாக கூறிக் கொண்டது. இரண்டு பக்கம் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தனது ஊழியர்களை பாதுகாக்கவென உலகிற்கும் தமிழ் மக்களுக்கும் கூறிக் கொண்டது. ஆனால் வல்லமையும், ஆழுமையும் கொண்ட ஒரு அமைப்பு சண்டை பிடிப்பவர்களை நிறுத்த முயற்சிக்காது தனது ஊழியர்களை நொண்டிச் சாட்டுச் சொல்லி விலக்கிக் கொண்டது. இப்போ நான் அடிக்கிறமாதரி அடிப்பேன் நீ அழுவது போல் அழு என்பது போல தன்மீது ஒரு ஆணைக்குழுவை நியமித்து இனிவரும் காலத்தில் இவ்வாறான தவறுகளை எவ்வாறு களைவது என பாடம் கற்றுக் கொள்வதாக உலகிற்கு படம்காட்டினார்கள் ஐ.நாவும், அதன் செயலாளரும், மற்றைய ஊழியர்களும் போர்க்குற்றவாளிகளே.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு

இரண்டாம் யுத்த காலத்தில் குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் முகமாக (Nurnberg) நூரன்பேக் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இந்த நீதிமன்றம் இன்னும் எத்தனையோ வழக்குகளை விசாரித்து முடிப்பதில் போதிய வளம் இன்றி கிடப்பில் இருக்கின்றன. ஆனாலும் தொடர்ச்சியாக நாடுகள் நாசிச படையைச் சேர்ந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பணி நூற்றுக்குநூறு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது எனக் கூறிக் கொள்ள முடியாது. தற்பொழுது ஐ.நாவின் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டும் வருகின்றனர்.

யுத்தங்கள் பல நடந்துள்ளன. ஆனாலும் நாசிமானது மற்றையை நாடுகளை ஆக்கிரமித்து நாடோடி இனத்தவர்களான சிந்து, ரோமா மற்றும் யூத இனத்தையும் கம்யூனிஸ்டுக்களையும், தேச பக்தர்களையும் அழித்து ஒழித்தனர். இவர்களை யேர்மன் தமது நாட்டு நீதி மன்றமே தண்டித்திருந்தது. அதேவேளை வெவ்வேறுநாடுகள் இரண்டாம் யுத்தத்தில் நாசிசப் படைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்ட்டு அந்த நாட்டு நீதி மன்றங்கள் தண்டனை கொடுத்தன. இந்த ஆண்டு பிரான்ஸ் ஒரு நாசிக் குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தது. (இவர் தப்பிச் சென்று பின்னர் சுவிஸ் இல் கைது செய்யப்பட்டார். எத்தனையே குற்றவாளிகள் ஆர்யெந்தீனாவிலும் தஞ்சம் அடைந்தனர்.)

ஐ.நாவின் தலைமையில் மனித உரிமைகள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்ற நாடுகளில் மனித உரிமைகளின் மீறல்களை விசாரித்து வருகின்றனர். இவ்வாறான ஆணைக்குழு கௌத்தமாலா, கொசவோ, பழைய யூக்கோஸ்லாவியா போன்ற நாடுகளில் இருக்கின்றன. தற்பொழுது கிழக்கு தீமோருக்கான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நியமிப்பதில் சீனா உட்பட பல ஆசிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இருந்தும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆணைக்குழுவில் விதிகளின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் பிரித்தானியா முன்மொழிந்திருந்தது. 8900 துருப்புக்கள், 200 இராணுவக் கண்காணிப்பாளர்கள், 1640 பொலிசார் இடம்பெறவேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டது.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 01

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 02

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 03