Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களது உண்ணா விரதபோராட்டம் இன்றும் தொடர்கிறது!

 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சப்ரகமுவ பல்கலைக்கழக நான்கு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இம் மாணவர்கள் நேற்று (28) மாலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இதுவரையில் பல்கலைக்கழகத்தின் பொறுப்புவாய்ந்தவர்கள் எவரும் மாணவர்களது உண்ணாவிரதம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மாணவ சங்கங்களுக்கு தடை விதித்தல்

மாணவ தலைவர்கள் மற்றும் மாணவர்களை கைது செய்வதற்கு இடமளித்தல்

மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதித்தல்

பரீட்சை எழுதுவதற்கான உரிமையை வழங்காமை

உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் இவ் உண்ணாவிரதம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாகவும், தமக்கான தீர்வினை உடனடியாக முன்வைக்காவிடின் இவ் உண்ணாவிரதம் சாகும்வரையான உண்ணாவிரதமாக தொடரும் என அம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக மாணவர்களது உயிரோடு விளையாடாது, மாணவர்களது சாதாரண கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு பல்கலைக்கழகத்திடம் கோருவதாக உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.

 -லங்கா விவ்ஸ