Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 06 (இறுதிப்பாகம்)

இடதுசாரிகளின் தாக்குதலா?

இடதுசாரிகளின் பலம் ஐரோப்பாவில் ஒங்கியுள்ளதாக கொள்ளப்படுகின்றது. குறிப்பாக மாகிரட் தட்சர் சிலி நாட்டின் சர்வாதிகாரியான பினோச்சே மீதான கைதைத் தொடர்ந்து தட்சர் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்தார். இவர் இடதுசாரிகளின் தாக்குதலாக கணித்தார். அத்துடன் பினோச்சேவிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை தெரிவித்துக் கொண்டார். யூக்கோ மீதான தாக்குதலை இடதுசாரிகளின் தாக்குதலாக கணித்திருந்தனர். இந்தக் கட்சியில் 1989 பின்னால் இருந்த பிரதமர், நிதி மந்திரிகள் இடம் பெறுகின்றனர்.

சமூக ஜனநாயகக் கட்சிகளின் ஆட்சி, உண்மையான தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ள முடியாது. இவர்கள் தொழிலாளர் வர்க்கத்திற்கு சலுகைகளை மாத்திரம் கொடுப்பதில் நின்றுவிடுகின்றதுடன், தேர்தலே பிரதான வேலைப்பாடாகக் கொண்டுள்ளனர். இவர்கள் சுரண்டும் வர்க்கச் சமுதாயத்தை இல்லாது போக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னரே பாதை தவறிவிட்டனர். ஆனால் கடந்த காலத்தில் இவர்கள் இருந்த சமூக முரண்பாடுகளை பயன்படுத்தி இன்று முன்னுக்கு வந்திருக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்லாம். ஆனால் இவர்கள் இடதுபாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கின்றனர் எனக் கொள்ள முடியாது.

சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் ஏகாதிபத்திய தேசங்களாகையால் மற்றைய தேசங்களை கைப்பற்றி சந்தையையும், மூலவளங்களையும் சுரண்டிக் கொள்வதை நிறுத்துவதில்லை. மனிதகுலத்திற்கு விரோதம் விழைவித்த குற்றவாளிகளை பணம்படைத்த தேசங்களில் தண்டணை வழங்க வேண்டும் என்று முயற்சிப்பது கூட ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை ஆதரித்து நிற்கும் நிலைப்பாடாகும். சமூக ஜனநாயகக் கட்சிகளின் வெளியுறவுக் கொள்கை மாற்றம் கொள்வதில்லை. எனவே இடதுசாரிகளின் அலை என்றோ இடதுசாரிய சதி என்று ஏகாதிபத்திய காலகட்டத்திலும், ஏகாதிபத்திய தேசங்களின் சமூக ஜனநாயகக் கட்சிகளின் கொள்கையை வரையறுத்துக் கொள்ள முடியாது.

நேட்டோ நாடுளை ஐ.நா நீதிமன்றத்தில் நிறுத்துவது!

சர்வதேச நீதிமன்றத்தில் நேட்டோ நாடுகளை நிறுத்த வேண்டும் என கனடாவில் இருக்கின்ற சட்ட அறிஞ்ர் பலர் கோரிக்கை விட்டனர். இவர்கள் சுதந்திர நாட்டின் உள்நாட்டு விடயத்தில், எல்லைக்குள் தாம் நினைத்தபடி ஐ.நாவின் ஒப்புதல் இன்றி செயற்பட்டு மக்கள் துன்புறுத்தினர் என குற்றம் சாட்டினர். இதே வேளை யூக்கோஸ்லாவிய அரசும் காக்கில் வழக்குத் தொடுத்திருந்தது. எனினும் வழக்கை எடுத்துக் கொள்ள நெதர்லாந்தில் இருக்கின்ற நீதிமன்றம் யூக்கோஸ்லாவியா சமர்ப்பித்திருந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இங்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க முடியும். குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பது என்றால் அரசியல் செல்லாக்குப் பெறவேண்டும். குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள்ளக் கூடிய பின்புலம் உள்ள நாடுகளின் ஆதரவு இருக்க வேண்டும். இன்றைய உலகின் அதிகார மையத்துவம் என்பது பலம் பொருந்திய நாடுகளில் தான் மையமாகக் கொண்டு இருக்கின்றது. இந்த அதிகார மையத்துவத்தை நோக்கித் தான் எம்மவர்களும் கடைக்கண் காட்டும் படி இரங்கிக் கேட்கின்றனர். இங்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பதற்கு குறிப்பிட்ட அரசியல் பலம் இருக்க வேண்டும். அப்படியான நிலையில் வறிய நாட்டவர் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்தால் அது ஏற்றுக் கொள்ளப்டும் என்பது சந்தேகமே. ஏனெனில் வறியவர்களின் பலம் என்பது குன்றித்தான் இருக்கின்றது. அவர்கள் பணபலத்தில் பின்தங்கியிருப்பதால் பணம் படைத்த நாடுகளின் வங்கிகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றில் கடன் வாங்குவதற்கு கைநீட்டிக் கொண்டிருப்பதால் கடந்த காலத்தைப் போல உறுதியான நிலைப்பாடு எடுத்து நடந்து கொள்ள முடியாது.

நேட்டோ நாடுகளும் இன்று செர்ச்செனியா மீதான தாக்குதலையும் ஐரோப்பிய ஒன்றியம் அதிக ஈடுபாடு கொண்டு எதிர்க்கவில்லை. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முதலிட்டுள்ளது. விமர்சனம் கொள்ளவதில் நிலையானது ஒரு நாடு கொண்டுள்ள நிதிமூலதனத்தின் அளவும், சந்தையின் பரப்பின் வீதமும் நிர்ணயிக்கின்றன. அத்துடன் தொடர்ந்தும் நிதி மூலதனத்தினை விஸ்தரிக்கும் முகமாக மோதலுக்குச் செல்லாமல் கொள்கின்ற தந்திரோபாயத்தை மேற்கொள்ளும். இன்றைய செர்ச்சேனியா மீதான ரஸ்யத் தாக்குதல்களின்பால் மேற்கொள்ளும் எதிர்ப்புக்களும் வரையறுக்கப்பட்டதாக இருக்கின்றது. இதில் இருந்து இவர்களின் மனித உரிமை மீதான அக்கறையை மீண்டும் ஒரு முறை முகக்திரையை கிழித்துக் காட்டுகின்றது.

முன்னர் கூறப்பட்ட சர்வாதிகாரிகள், ஆக்கிரமிப்பில் பங்குபற்றியவர்கள், இறைமை உள்ள நாட்டின் மீது வரலாற்றில் சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை. மாறாக இவைகள் எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. சர்வாதிகாரிகளுக்கு பாதுகாப்புக் கொடுத்துள்ளனர். ஸ்பானியாவில் பிராங்கோவின் ஆட்சியில் மந்திரியாக இருந்து சமராங் என்பவர் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக பல வருடங்களாக இருக்கின்றார். இப்படியானவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தது பணம் படைத்த நாடுகளே. இன்று யூக்கோவின் ஆட்சியாளர்கள் ஐவர் ஐ.நா நீதி மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

மேற்கு நாடுகளின் கூட்டமைப்பை ஐ.நா நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பல பொதுவுடமைக் கட்சிகளின் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன (The signatories include 39 parties and organisations from Argentina, Austria, Bangladesh, Belgium, pazil, Bulgaria, Dominican Republic, France, Georgia, Germany, Greece, India, Iraq, Italy, Korea, Latvia, Laos, Mali, Nepal, Netherlands, Palestine, Philippines, Poland, Russia, Senegal, Slovakia, Spain, Sweden, Turkey, Ukraine, Yugoslavia, Zimbabwe, etc.) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உட்கட்டுமானங்களை சிதைப்பது

யூகோ, ஈராக் போன்ற இறைமைள்ள தேசத்தின் மீது குண்டு வீசி இயற்கையை அழித்தவர்கள், மக்கள், தனியார், அரச தொழிற்சாலைகள், சொத்தை அழித்தவர்கள் உட்கட்டுமானங்கள் உட்பட பாலங்ளை அழித்தவர்கள் தூதரகங்கள் (சீன, இத்தாலி, பாக்கிஸ்தான், சுவீடன்) மீது குண்டு போட்டவர்கள், பொதுமக்கள் அகதிகள் சென்ற வாகனங்கள் மீது குண்டு போட்டுக் கொன்றவர்கள் இவர்கள் அல்லவா ஐ.நாவின் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆவர். எந்தக் காரியத்தையும் ஐ.நாவின் மூலம் காரியத்தைச் செயற்படுத்தும் அமெரிக்கா ஐ.நாவிற்கு பல மில்லியன் டொலர்கள் கடன் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னர் ஐநாவில் தீர்மானம் இயற்றி மற்றைய நாடுகளை தலையிட்டவர்கள் பின்னர் ஐநாவின் ஒப்புதல் இல்லாமலே தலையிட்டுக் கொண்டனர். லிபியா, சிரியா, மாலி என்று தலையிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற தேசங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதான உட்கட்டுமானங்களை தகர்த்தெறிந்துள்ள ஏகாதிபத்தியங்கள். அந்த நாடுகளை பல பத்தாண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கியதாக அழித்துள்ளது.

ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டதாக தலையீடுகள் இருந்திருக்கின்றது. ஆனால் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உணர்ச்சி பொங்கும் பேச்சின் மூலம் கடந்த கால அனுபவத்தை காட்டி பிரச்சனைகளுக்கு குறுக்கு வழியில் பிரச்சனைக்கு தீர்வு காணும் படியும் கோரிக்கை விடுகின்றனர். இந்த வகையான கோரிக்கை புத்தியீவிகளிடமும் இருந்த வருகின்றது. அதாவது அமெரிக்க கடைக் கண் காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடப்படுகின்றது. இந்த நிலை ஆபத்தானது என்பதை அறியாத நிலையில் தோன்றுகின்ற கருத்துக்கள் மக்களிடையே தம்மை மீட்க மீட்பர்களான அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் வரும் என்ற கருத்தை விதைக்கவும் காரணமாகின்றது.

வல்லரசுகள் தமது நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இருக்கும் நரித்தனங்களை விளங்கிக் கொள்ளாமல் இலங்கை உட்பட வறிய நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடவேண்டும் எனக் கோருகின்ற அறியாமையை எதிர்க்க வேண்டியிருக்கின்றது. அத்துடன் அரசியல் வாதிகள் தமது பேச்சில் கவர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காட்டி அவ்வாறு இலங்கை போன்ற நாடுகளில் பின்பற்றக் கோருவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவர்கள் தேசிய, வர்க்க விடுதலைக்கான போராளிகள் மீது ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தத்தை அறியாதவர்களாகவும், தமிழ் மக்களின் மட்டுமல்ல வறிய நாடுகளில் போராடும் மக்களின் போராட்டத்தை சிதைப்பதை நோக்கமாகக் கொண்டே பணம் படைத்த நாடுகள் செயற்படுகின்றனர் என்பதை மறைத்த நிலையில் இருந்து கொண்டு தமது அரசியல் நலனைப் பாதுகாப்பதற்காக உணர்ச்சிகர பேச்சுக்களை உரையாற்றுகின்றனர்.

இவர்களுக்கு சர்வதேசிய அரசியல் நிலை தெரியாததைத் தான் காட்டுகின்றது. இவர்கள் ஒவ்வொருவரும் தமது நாடுகளில் மிகச் சிறந்த அறிவாளிகள், பேச்சாளர்கள், தலைவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் இவர்களின் அரசியல் வறுமையானது வல்லரசுகளின் நலனை எவ்விதத்திலும் பாதித்துக் கொள்ளாத வகையில் அரசியல் நடவடிக்கைகளை மக்கள் மீது திணிக்கின்றனர். நாம் தொடர வேண்டிய போராட்டங்கள் மேற்கொள்ளும் போது வறிய நாடுகளின் நலத்தின் மீது அடங்குவது அவசிய காரியமாகும்.

இறுதியாக இன்றைய நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை எந்த நிறுவன அமைப்புக் கொண்டு தண்டிப்பது பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருந்து வருகின்றது.

1. நூரண்பேர்க் மாதிரி

2. ஐ.நாவின் நீதிமன்றம்

இந்த இரண்டும் எவ்வகையில் தேசங்களின் இறைமையை நிலைநிறுத்துகின்றது என்பது மாத்திரம் இல்லை. இலங்கை உழைக்கும் மக்களின் ஐக்கியமும், ஒருங்கிணைந்த போராட்டத் தந்திரோபாயத்தில் இருந்து அணுக வேண்டியிருக்கின்றது.

ஆனால் தமிழகத்தில் போராடும் மாணவர்களின் அரசியல் புரிதல் என்பது முழுமையான தமிழ் தேசிய உணர்வு கொண்டிருப்பதும், கோரிக்கைகள் யதார்த்தத்தினை மீறிய ஒன்றாக இருக்கின்றது. ஆனாலும் மாணவர்களின் போராட்டத்தை தவறென்பதோ அல்லது கொச்சைப்படுத்துவது என்பதோ இல்லை. மாறான மாணவர்களின் போராட்டம் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். மக்கள் மத்தில் இருந்து எழுகின்ற கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும். மாணவர்களின் போராட்டம் சிறப்புமுகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை விடுதலை கோரியும், கடல்தொழிலாளர்களின் மீதான கொலைகள், சமூகப் பிரச்சனைகைள், நவதாராளவாதத்தினால் கல்விக்கு ஏற்படும் தடைகளை இணைத்துக் கொள்ளல் வேண்டும். சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை கண்டறியும் படியான வேலைமுறைகளை புரட்சிகர சக்திகள் மாணவர்களுக்கு அறிவுறுத்தவேண்டிய கடமை இருக்கின்றது.

நாம் மாணவர்களின் போராட்டத்தினை பார்க்கின்ற போது இந்தியாவில் தமிழ்நாட்டு மாநிலத்தில் அரசியல் பொருளாதார அமைப்பின் இருந்து வெளிப்படும் அரசியல் கருத்துக்களின் முதிர்ச்சி நிலையைக் கவனத்தில் எடுக்க வேண்டும். தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களிடையே புரட்சிகரக் கருத்தை ம.க.இ.க முன்வைத்துள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைநிலபிரபுத்துவ, குறைமுதலாளித்துவ உற்பத்தி உறவில் அமைந்து சிந்தனையும், அதனால் வெளிப்படும் பாசீச ஒடுக்குமுறைகளை மாணவர்கள் இன்று அனுபவ ரீதியாதிக உணரத் தொடங்கியுள்ளார்கள். அரசியல் கருத்தை தெரிவித்துக் கொள்வதற்கும், கருத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் வயது, அந்தஸ்து தேவை என்ற பிற்போக்குச் சூழலில் இருந்து மாணவர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சமூக அமைப்பில் இருந்து உருவாகும் கருத்துக்கள் கூட பிற்போக்கு சமூக அம்சங்கள் நிறைந்திருப்பதும் இயல்பானதே.

இதேவேளை அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விஸ்தரிப்புவாத அரசியலை அம்பலப்படுத்தியிருப்பதும் ஒரு சாதகமான அம்சம். ஏகாதிபத்திய, பிராந்திய வல்லரசுகள் எவ்வாறு தேசியங்களின் ஜனநாயக உரிமைமையை மறுதலிக்கின்றது என்பதை புரட்சிகர சக்திகளின் மாணவர்களுக்கு வெளிப்படுத்தி முதற்கட்டமாக மாணவர்களை முதலாளித்துவ ஜனநாயக் கோரிய போராட்டத்திற்கு தயார்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் மொத்தத்தில் தமிழக மாணவர்களின் போராட்டம் அந்த நாட்டுக்குரிய பிரத்தியோகமான அரசியல் பாங்கின் ஒரு அம்சமாகவும் பார்க்கப்பட வேண்டும்.

முற்றும்

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 01

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 02

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 03

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 04

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 05