Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

"இணங்கும் அரசியலாளரின்" முன் எச்சரிக்கை!

தயா மாஸ்ரர் சொன்னது உண்மையா? உண்மையெனில் இது அரசின் படுபாதகத் துரோகம் தான்.

"காணாமல் போனவர்களின் கதை முடிந்தது முடிந்தது தான்" என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பாக எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாதா" என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது "காணாமல் போனவர்களின் கதை முடிந்தது முடிந்தது தான்" என தயா மாஸ்டர் பதிலளித்தார்.

காணாமல் போனவர்கள் விவகாரத்தில் அரசு கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக கள்ள மௌனமும் கள்ள சாக்குப் போக்குகள் கொண்ட காரணங்களையும் தான் சொல்லி வந்தது. கடைசியில் நம்பிக்கைக்கு பாத்திரமான எம் மக்களின் மன ஆதங்கங்களுக்கு கறைபடிந்த கொலைவெறித் துரோகத்தையே செய்துள்ளது.

நேற்றையை இச் செய்தியானது காணாமல் போனவர்களின் சொந்த, பந்த உறவுகளின் மனதில் எப்படியான சோக ஆதங்கங்களை, மனப் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கும்.

ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டார் என்பதை அறியும் மன ஆதங்கத்திற்கும், இருக்கின்றார்கள் எனச் சொல்லி நம்பவைத்துக் கொண்டிருக்கும் மனங்களிற்கு "காணாமல் போனவர்களின் கதை முடிந்ததது தான்" எனச் சொல்லும்போது மக்களிற்கு ஏற்படும் மன ஆதங்கங்களை ஆற்றொனாத் துயர்களை எப்படி எழுத்தில் சொல்லலாம்.

நடைபெற இருப்பது தமிழ் மக்களிடம் வாக்குகளை வாங்குவதற்கான ஓர் தேர்தல். இந்நேரத்தில் காணாமல் போனவர்களின் கதை இதுதானென எவ்வித குற்ற உணர்வுகளும் இன்றிச் சொல்வது.. அம்மக்களை வெருட்டி வாக்குகள் வாங்குவதற்காகவா? அரசை வெல்ல வைக்கா விட்டால் எதிர்காலமும் (கொலைவெறி கொண்ட) இதுதானென்ற "இணங்கும் அரசியலாளரின்" முன் எச்சரிக்கையா?

இதுதான் மெத்தப் படித்த சகட்டு வாத்தியாருக்கு முதலமைச்சர் கனவில் வந்த புத்திசாலித்தனமோ?

இதில் இவ்வாத்தியார் போன்றவர்களை குற்றம் சொல்வதில் என்ன பயன்?.....

இவர்களை வளர்த்தெடுத்த தவைரும் அத்தலைவரின் அதே புலிக்குணத்தைக் கொண்ட எம் சர்வவல்லமை படைத்தவரின் பாசறையின் இருத்தல்களில இருந்தல்லவா "றெயினிங்" எடுத்து வருகின்றார்கள் இந்தப் பேராசான்கள்.

தவிரவும் காணாமல் போனவர்களின் உறவுகள தங்கள் சொந்த-பந்தங்களை கண்டு பிடித்துத் தாருங்கள் என… வடபகுதிக்கு வருகின்ற…. காலில் விழக்கூடாத சிங்களப் பேரிவாதிகளின் கால்களில் எல்லாம் விழுந்து அழுகின்றார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழினத்தை தோற்கடிக்கப்பட்ட இனமாக (சொல்லாமல் சொல்லி) காட்டுகின்றது. இதில் தான் நம்பிய இலட்சியத்திற்காகப் போராட வந்த போராளிகளை நட்டாற்றில் தள்ளிவிட்டதில் அவர்கள் படும் அவலப்பெரும்பாட்டை எம் சமூகம் எள்ளி நகையாடி தீண்டத்தகாவர்களாக ஆக்கியுள்ளது.

இன்று அவர்க்ளின் செய் நடவடிக்கைகள் எல்லாம் ஏதோ சுயம் கொண்ட தன்னிச்சையான அரச சார்பு நடவடிக்கைள் என எம்மில் பலர் சிந்தித்து செயலாற்றுகின்றனர். இது அப்போராளிகளின் குடும்பங்களை இல்லாதாக்குவோம் எனும் "பயங்கர அரசனாரின்" கொலை வெருட்டு நிர்ப்பந்தங்களுக் கூடாகத்தான். இவைகள எல்லாம் நடைபெறுகின்றன என்பதை எம் "புல(ன்)ம் பெயர் சமூகத்தின் "ஏகபோகங்களும்" கணக்கில் எடுப்பதில்லை.

எனவே இன்றுள்ள இவ்அவமானம், அவலநிலை எம்மக்களுக்கும் அம்மக்களின் விடுதலைக்கெனப் போராட முன்வந்த இப்போராளிகளுக்கும் யாரால்? எதனால் ஏன் வந்தது? .

அரசை விட, தமிழர் தரப்பின் தமிழ்த் தேசியத்திற்கும், அதன் அண்ணன் தம்பிகளுக்கும் இல்லையா? வட்டுக்கோட்டையில் தொடங்கி முள்ளிவாய்க்கால்வரை வந்தவர்களுக்கு இல்லையா? அமெரிக்க கப்பல் அல்லது கே.பியின் நீர்மூழ்கிக் கப்பல் வருமென… முள்ளிவாய்க்காலில் முன்னூறு மீற்றருக்குள் முடங்கியவர்கள் - முடக்கியவர்களுக்கு இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக புலம்பயர் தமிழ் ஈழக்காரர்களுக்கு இல்லையா?