Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வரலாற்று ஆவணப்படம் "தி அட்வோகேட்"

இந்தியாவின் மிகச்சிறந்த மனித உரிமைப்போராளி மறைந்த வழக்குறைஞர் திரு.ஜி.கண்ணபிரான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் "தி அட்வோகேட் ("The Advocate") எதிர்வரும் அக்டோபர் மாதம் 23ந் திகதி (புதன் கிழமை மாலை 6.30 தொடக்கம் 9.00 வரை) லண்டனில் திரையிடப்படுகிறது. அந்த மாமனிதரின் வாழ்வை நினைவு கூறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் வேண்டி அழைக்கிறோம்.

அனுமதி இலவசம் !!

இடம்: தி பெவிலியன், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைகழகம், 115 கேவண்டிஷ் தெரு, லண்டன், W1W 6UW

Venue: ‘The Pavilion’ University of Westminster, Cavendish Building, 115 New Cavendish Street, London, W1W 6UW

படம் குறித்த குறிப்பு:

இந்த ஆவணப்படம் கண்ணபிரான் அவர்களின் வாழ்க்கை குறித்தது. மனித உரிமைகளுக்காக அயராது உழைத்த இந்த மாமனிதர் தம் வாழ்நாள் முழுதும் இந்திய அரச படைகள், போலீசு நடத்தி வரும் ஒடுக்குமுறைகள், படுகொலைகள், சித்திரவதைகள் போன்ற நீதியற்ற செயல்களை எதிர் கொண்டு நீதிமன்றங்களிலும் வெளியிலும் போராடி வந்தவர். குறிப்பாக மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட பல புரட்சிகர இயக்கங்களின் ஊழியர்களை அரசு திட்டமிட்டு படுகொலை செய்து வருவதை எதிர்த்து வந்தவர். இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளின் செயல்களை வெளி உலகுக்கும் இந்திய நீதிமன்றங்களுக்கும் எடுத்து சென்று பல நூறு படுகொலைகளை வெளிக் கொண்டு வந்தவர். அரசின் இத்தகைய ஒடுக்குமுறைகள் இந்தியத் துணைக் கண்டம் முழுதும் நடந்து வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் செயல்களில் ஒரு பகுதியென்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணப்படம் வெளிவரும் இந்த நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் போராடும் மக்கள் இயக்கங்களை இந்திய அரசு ஒடுக்குவருவது, அரசியல் கைதிகளுக்கு தூக்கு தண்டனைகள் வழங்குவது போன்ற கொடும் செயல்களை நடத்தி வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்திய சிறைகளில் அரசியல் கைதிகள், பெண்கள், பழங்குடியினர், அகதிகள் நிரம்பி வழிகின்றனர். விசாரணை எதுவும் இன்றி அரசியல் கைதிகள் நூற்றுக் கணக்கில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் ராணுவம் நிறுத்தப்பட்டு போராடும் மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்கள் முறையான விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் அரசியல் ஆர்வலர்களை தண்டித்து வருகின்றன. அன்னாரது வாழ்வு குறித்த இந்தபடம் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை சிறந்த முறையில் வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஏவப்படும் அரசியல் ஒடுக்குமுறைகள், சர்வாதிகார நடைமுறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு மீள் பார்வையை இந்தப படம் நமக்கு அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அனைவரும் வருக ! அனுமதி இலவசம்!

படத்தின் நிறைவில் உலகெங்கும் இன்றைய மனித உரிமைகள் நிலவரம் குறித்த விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கு பெறுவோர் (Panelists):

Dr Radha D’Souza, University of Westminster, School of Law

Saleh Mamon, Campaign Against Criminalising Communities (CAMPACC)

John Hutnyk, Professor of Cultural Studies, Centre for Cultural Studies at Goldsmiths University of London

நிகழ்ச்சி ஏற்பாடு: CAMPACC; Development & Conflict group, School of Law, University of Westminster; International State Crime Initiative; Haldane Society of Socialist Lawyers.

CAMPACC: Estella Schmid e-mail: <This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.>