Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சின்னங்களால் ஏற்படும் சமூகப் பதட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போர் காலத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் முகாமிட்டிருந்த இடங்களில் அவர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட சிறுசிறு புத்தர் சிலைகளை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புதிதாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வைத்து அந்த இடத்தில் விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மாவட்டத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் என்னிடம் முறையிடுகின்றனர்.

அதற்கு ஒருசில பாதுகாப்புப் படையினரும் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் நல்லிணக்க மேம்பாட்டைச் சீர்குலைப்பதாக அமையும்.

மதங்கள் மக்கள் மத்தியில் மனிதத்துவத்தை மேம்படுத்தி நல்வழிப்படுத்துவதற்கும், சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத் துவதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

மதங்கள் இனங்களுக்கிடையில் குழப்பங்களையும் சந்தேகங்களையும் வளர்ப்பவையாக அவை மாறி விடக் கூடாது. தமிழ் மக்களைக் பொறுத்த வரையில் அவர்கள் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல.

எனவே இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவோர் அவற்றை நிறுத்தி மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடு படவேண்டும். மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் செற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் குறித்து அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும்.

தமிழரின் பாரம்பரிய விழுமியங்களையும், பாரம்பரியங்களையும் விட்டுக்கொடுப்பதற்கோஇ அதன் ஊடாக பிரதேசங்களை துண்டாடுவதற்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்க மாட்டாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நிற்க!!!

இலங்கை சமுதாயம் மதச் சிந்தனையிலும், கடவுளின் பால் கொண்ட உளவியல்பயத்திற்கும் ஆளாகிய மக்கள் கூட்டமாகும். இந்த மக்கள் கூட்டத்தவர்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உணர்வுகளை மற்றவர்கள் மேல் திணிப்பதில் கவனமாக உள்ளனர். இந்தச் சமூகத்தின் உற்பத்தி என்பது மற்றைய மனிதர்களை உளவியல் ரீதியான மேலான்மை கொள்வதாக உள்ளது. கருத்தியல் மேலான்மை கொண்ட உளவியல் என்பது இல்லாத ஒரு பரிமாணத்திற்கு கருத்துருவம் கொடுக்கும்.

பௌத்தமதம் இந்தியாவில் இருந்து பரவி கிழக்கு ஆசியாவெங்கும் பரவியிருக்கின்றது. சமணம், பௌத்தம் என்ற இரண்டு மதங்களே தத்துவவிசாரணையை கொண்ட மதங்களாக இருந்திருக்கின்றன. பிராமணியத்தின் சிந்தனைக் கூறுகளையும், வர்ணக்கோட்பாhட்டை எதிர்த்திருக்கின்றன.

தமிழர் வரலாற்றில் தத்துவவிசாரணை உள்ளாக்கப்படக் கூடிய காலத்தில் தமிழர்கள் இம்மதங்களை பின்பற்றி வந்துள்ளனர். முன்னர் ஐந்திணைக்களைக் கொண்ட சமூகத்தில் இருந்து கடவுளின் நம்பிக்கைகள் மாற்றமடைந்து தந்துவவிசாரணைக்காலத்திற்கு உட்படுகின்ற போது முதலில் உயர்வர்க்கத்தவர்கள் இவ்வாறான புதிய மதங்களை பின்பற்றி வந்திருக்கின்றனர். உயர்வர்க்கம் தத்துவவிசாரணை உயர்ந்தும் மதங்கள் சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களே முதலில் பிற்பற்றிவந்திருக்கின்றார்கள்.

வணிக வர்த்தகத்தின் வீழ்ச்சியென்பது தமிழர்களின் புதிய வரலாற்றுக் கட்டமாகிய வள்ளுவர் பின் 600களில் பின்னரான காலத்தில் வயல்சார்ந்த உற்பத்தியின் விவசாயப் புரட்சியென்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தக் காலத்தினை வரலாற்றாசிரியர்கள் பக்தி இலக்கியகாலம் என்று வரையறுத்துக் கொள்கின்றார்கள். இந்த பக்தி இலக்கியகாலத்தில் சைவசமய மறுமலர்ச்சிக் காலத்தில் தத்துவ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மக்களுக்கான பொதுக்கடவுகள் உருவாக்கப்பட்ட காலமாகும். சிறுதெய்வங்கள் உள்வாங்கப்பட்டு பெரும் தெய்வங்களான சிவன், பார்வதி, திருமாள் போன்றவர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றார்கள.

தமிழ் இலக்கியத்தில் உயர்ந்த பல இலக்கியங்கள் சைவசமயத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றது. இந்த இலங்கியங்களின் தரத்தினை சைவசமயத்தைப் போற்றுகின்றது என்பதற்காக ஒதுக்கிவிட முடியாது. ஆனால் சைவமும் தமிழும் ஒன்று என்கின்ற மேலாண்மை கருத்தியலை இது ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் இலக்கியத்தில் மதத்தினை பிரித்தெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.

பக்தி இலக்கிய காலத்தினை வணிக வர்க்கம்திற்கும் விவசாய வர்க்க்திற்கும் இடையேயான மோதல் என்று மார்க்சீயர்கள் கருதுகின்றனர், இந்த பக்தி இலக்கியத்தின் சமணக் பௌத்த சமயத்திற்கு எதிரான மூர்க்கமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பௌத்தர்கள், சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டனர்; பௌத்த, சமய ஆலங்கள் இடிக்கப்பட்டன, சைவ, வைணவ கோவிகளாக்கப்பட்டன. பக்தி இலக்கியத்தின் கோரப்பற்றகள் இலங்கையிலும் தனது அதிர்வை ஏற்படுத்த தவறவில்லை. வள்ளுவர் பின்னர் 600களில் எழுதப்பட்ட மகாவம்சத்திலும் தமிழர் விரோதப் போக்கு கொண்டிருப்பதற்கு பக்தி இலக்கியமும் ஒரு காரணமாகும். இலங்கையின் பௌத்தர்கள் கடற்கரை பிரதேசம் உள்நாட்டில் தங்களின் இருப்பை தங்கவைத்திருந்ததிற்கான காரணமாக விவசாய, ஏற்றுமதி சார் பொருள் உற்பத்தி இருந்ததே காரணமாகும். வடக்கு கிழக்கு கரைகள் வரலாற்று ரீதியாக வணிகத்துடனும்;, சங்கு, முத்து, கடல்சார் உற்பத்தியுடன் சார்ந்திருந்ததும் ஆகும். கடல்சார் உற்பத்தி காரணமாக தமிழக தொடர்பும் வரலாற்று ரீதியாக இருந்துள்ளது.

தமிழகத்துடன் தன்னை துண்டித்திருந்த பௌத்தம் தன்னை பாதுகாக்கும் சுவராகவும் தமிழர்களை எதிரியாகவும் காட்டி வந்திருக்கின்றது. தமிழர்கள் மீதான சந்தேகம், கசப்புணர்வு வரலாற்று ரீதியாக பகையாக வளர்ந்துள்ளதை நாம் கவனித்தாகவேண்டும். இவ்வாறான சந்தேகம், கசப்புணர்வினை போக்குவதற்கு இடைய+றாக அரசியல்வாதிகளின் நிறுவனமயப்பட்ட இனவாதப் போக்கும் காரணமாகின்றது.

இன்று சர்ச்சைக்குரியதாக இருக்கின்ற புத்தசிலை விவகாரம் வரலாற்றில் புதுமையானது ஒன்றல்ல. எனினும் அவை முக்கிய விடயமாக மக்கள் மத்தியில் தோன்றுகின்றது. இவைகள் அரசியல் விடயமாகவும் தோன்றுகின்ற போது மத விடயமாகவும் இருக்கின்றது. இவற்றிற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுவது அவசியமாகும்.

பொதுவாகவே அனைத்து மதப்பிரிவினர்களும் சந்திக்குச் சந்தி புதிய புதிய கடவுள் சிலைகளை சனநெருக்கடி உள்ள இடம், ஏதாவது வெளி, அல்லது முக்கிய இடங்கள், அவர்களின் கனவில் தோன்றும் இடங்கள் என்று சிலைகளை வைக்கின்றனர். (பிரமுகர்களின் சிலைகளும் இவ்வாறுதான் முளைக்கின்றது.) இது முழு நாட்டிற்குமான ஒரு பிரச்சனை, ஏனெனில் ஒரு நகரில் எவ்வாறு குடியிருப்பு அமைவது, எங்கு கழிவுநீர் திட்டம் கொண்டுவருவது, வீதித்திட்டமிடல் இவ்வாறு நிர்வாகம் செய்வதற்கு இலகுவாக நகராட்சி, அல்லது மாநகராட்சியில் செயற்திட்டங்களுக்கு இடைய+றாக இவ்வாறான புதிய புதிய கடவுள்கள் இடைய+றாக அமைந்து விடுகின்றனர். இந்த நிலை மாற்றம் கொள்வதற்கு முழுமக்களுக்குமான ஒரு விழிப்புணர்பு ஏற்படுத்துவது அவசியமாகும்.

மதங்களைக் கொண்டு எவ்வாறு மனிதர்களிடையே பிரிவினைகள் ஏற்படுத்தப் படுகின்றது. மதம் ஒடுக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இது தனிமனிதர்களிடையே எற்படுகின்ற ஆணவம், அகம்பாவம், வக்கிர, குரூர சிந்தனை (ளுயனளைஅ) உணர்வை மற்றவர்கள் மீது செலுத்தும் முகமாக வேண்டுமென்றே செய்யும் செயலாக அமைய இடமிருக்கின்றது.

இதற்கு ஒரு உதாரணம் படையினர் அல்லது ஒரு சிங்களப் பொதுமகனுடன் சச்சரவுக்கு உள்ளாக நேரும் இடத்தில் அந்த நிலையில் நியாயம் எமது பக்கம் இருந்தாலும் அவரிடம் இருந்து திமிராக பதில் தரப்படும். இவ்வகையான அனுபவங்களை நாம் தினமும் கொழும்பில் அல்லது வேறுபகுதியில் இவ்வாறான நிலையை அனுபவித்திருக்க முடியும், அனுபவப் பட்டிருக்க முடியும். ஒரு ஆதிக்க நிலையில் இருப்பவர்களின் மனநிலை என்பது வக்கிரம் உடையதாக வளர்கின்றது.

இவைமாத்திரம் இல்லை சாதிய, மதவுணர்வுடன் வாழும் அனைத்து இடங்களிலும் இனவாத, மதவாத, சாதியப் பெருமிதச் சிந்தனைகள் புரையோடிப்போயிள்ளன. புரையோடிப் போயுள்ள பழைய சிந்தனை சிந்தனை முறைகளினால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் ஏராளம்.

இந்த சிலைவைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்க முடியும். இவர்கள் இனத்துவ பெருமை, மதப் பெருமைகள் கொண்ட மக்கள் கூட்டம் தான் தற்பொழுது அனைத்துப் பகுதியிலும் இருக்கின்றனர். இவ்வாறானவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது இயல்பானதொன்றே. இதில் உள்ள நிலை என்னவெனில் பெரும்பான்மையான மதங்கள் தமது சிலைகளை வைப்பதில் எவ்வித சுயகட்டுப்பாடும் இன்றிச் செயற்படுகின்றனர். இங்கு கடவுள் என்ற ஒரு பயத்தைக் காட்டி நிர்வாக, அல்லது நியாயப்பாடுகளுக்கு எதிராக இவைகள் அமைந்து விடுகின்றன. இது ஒரு இனத்துக்குமான பிரச்சனையல்ல. முழுச்சமூகத்திலும் உள்ள பிரச்சனையாகும்.

இங்கு காலம் காலமாக இருக்கும் முரண்பாடுகள் தான் ஒரு பிரச்சனையை பூதாகாரப்படுத்துகின்றது. இது கூட ஒரு முழுச்சமூகத்தின் மனநிலையின் வெளிப்பாடாகவும் அமைந்து விடுகின்றது. இதனால் இதற்கு அரசியல் முலாம் பூசப்படுகின்றது. இவ்வாறான நிகழ்வுகளை தத்தம் அரசியல் சக்திகளின் பின்புலங்கள் தூண்டுதலையை கொடுப்பதனால் மோதல்கள் பெரிதாக வடிவம் எடுக்கின்றது. இவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இதில் ஒரு மதத்தவர்கள் மற்றைய மதத்தவர்கள் மீது சகிப்புத் தன்மையை இல்லாது போக்க சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் புதிய சூழலுக்கான கருத்தியலை படைக்க வேண்டும். இவைகள் போராடிக் கொண்டிருக்கின்ற தேசத்தில் இவ்வகையான செயற்பாடுகள் நடைபெறவில்லை. இன்றும் தமிழ் பகுதியில் சந்திக்குச் சந்தி புதிய சிலைகள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனை அனைத்து இனங்களிடையேயும், மதங்களிடையேயும் இருக்கின்றன. இவைமாத்திரம் அல்ல, பெரும் சத்தமாக போட்டிக்கு ஒலிபெருக்கி பாவிப்பது, சந்திக்குச் சந்தி மதத்தைப் பரப்புவதற்கான கூடி மதப்பிரசங்கம் செய்வது, மற்றைய மதங்களை இழிவாக கருதுவது, மற்றைய மதங்களின் வழிபாட்டு தலங்களில் மீது தாக்குதல் நடத்துவது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இவற்றைப் போக்க சமூக நலன் கருதிய செயற்பாடுகள் அவசியமாகும்.

இன்று புத்தர் சிலையை எதிர்க்கும் தமிழ் மக்கள் தம்மிடையே மதப் பிற்போக்குத் தனங்களைக் கொண்டு இருக்கின்றனர். இவைகளும் சமூக ஐக்கியத்திற்கு பாதகமான விடயம் தான் இவற்றையும் போக்க வேண்டியது சுதந்திரத்திற்காக போராடும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு அவசியமாகும்.

இதேபோல கல்வியிலும் மற்றைய மதங்களைப் பற்றிக் பயிலக்கூடிய ஒரு கல்வித் திட்டம் என்பது அவசியமாகும். இதில் உலகக் கண்ணோட்;டங்கள் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் விழிப்புணர்வினை வளர்த்துக் கொள்ள முடியும். இதனை அனைத்து பாடசாலைகளிலும், சிறுவயதில் இருந்தும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு பாடசாலைகளிலும் தனிமதத்திற்கான விசேட சலுகைகளை கிடைப்பதை தடுப்பதுடன், மதத்தை தனிப்பட்ட நிலைக்கு கொண்டுவருதல் வேண்டும். மதம் என்பது தனிப்பட்ட மனித விடயம் இவற்றை பொது இடங்களில் பிரத்தியோக அந்தஸ்தைக் கொடுப்பது தவிர்க்க முடியும். இவைகளே குறைந்தபட்ச செயல்முறைகளாகும்.

இனவாதம் என்பது நிறுவனமயப்பட்ட நிலையில் திட்டமிட்ட சிங்களமொழி, மத சின்னங்களை திட்டமிட்டுத் திணிக்கும் நிலைகள் இருக்கின்றன இவைகளும் இனம் காணப்பட வேண்டும். திட்டமிட்ட செயற்பாடுகளுக்கும், தனிமனிதர்களிடையே ஏற்படுகின்ற வக்கிர உணர்வுகளுக்கும் நிச்சயமான தொடர்பு இருக்கின்றது. ஏனெனில் இவைகள் இந்தச் சமூகத்தின் விழைவுகளே. இவைகளை போக்குவதற்கு சமூக அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.