Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கனவிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுபடுவதானால்!

உலகம், நாங்கள், வாழ்க்கை இவை அனைத்தும் அடிக்கடி மாறுகிறது. இம் மாற்றங்களை கவனத்தில் கொண்டு, அதன் பின்னணியில் காணப்படும் உண்மையை விளங்கி கொள்ளாமல் வாழுகின்ற 'தார்மீகமற்ற உலகத்தில்" பெண்கள் என்ற வகையில் சாதிக்க வேண்டும் என நினைப்பதற்க்குப் பதிலாக, சாதிப்பதற்க்கான காலம் எழுந்துள்ளது. பெண்கள் என்ற வகையில் இந்த சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் உண்மையில் எமக்கு வாழ்க்கை இருந்ததா? பல நுற்றாண்டுகால வரலாற்றில், பெண்கள் என்ற வகையில் நாம் சமூகத்திற்கு சமமான சேவையை வளங்கியிருந்தாலும் இதுவரையில் அதற்க்குரிய பெறுமதி எமக்கு கிடைக்கவில்லை. இந்நிலைமையை முழுசமூகமும் சாதாரணமானதாக கருதியிருக்கலாம் ஏனெனில் நாம் பெண்கள் என்பதிலாகும்.

தற்போது நாங்கள் வாழ்வது 2014இன் ஆரம்பத்திலாகும். இன்றைய சந்தர்ப்பத்தில் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் பெண்கள் என்ற வகையில் எமது போராட்டங்கள் பல வெற்றிகளை பெற்றுள்ளது. இவற்றின் ஆரம்பம் என்பது உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் அது 1910 ஆகஸ்ட் மாதமாகும். அது ஜேர்மனியின் பெண் சோஸலிஸவாத தலைவியான 'கிளாரா செற்கின்" முன்னெடுத்த பெண்கள் உரிமைக்கான போராட்டத்தின் ஞாபகார்த்த தினம் தொடர்பில் சமர்ப்பித்த யோசனையின் பிரதிபலனாகவே மார்ச் 08ஆம் திகதி பெண்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இத்தினமானது உலகெங்கிலுமுள்ள பெண்களின் விடுதலையை குறிப்பதை விட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற பரந்த கருத்தியலை குறிப்பதாகும். தற்போது இந்தப் போராட்டம் சமூகத்தில் இருந்து தொலை தூரத்திற்க்கு போய்விட்டது. எது எவ்வாறாயினும் நாம் சிறைபட்டு வாழும் இச் சமூகத்தில் இருந்து விடுதலை பெற போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எமக்கெதிரே இரண்டு பிரதான சவால்கள் காணப்படுகின்றன.

முதலாவது தற்போதைய சமூக சிறை வாழ்க்கை முறைமை அடுத்தது முதலாளித்துவ சந்தை கனவுகள். கனவிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுபடுவதானால்!

பெண்கள் என்ற ஒரே காரணத்துக்காக பெரும் கட்டுப்பாடுகளும் அடக்கு முறைகளும் எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. விரும்பியோ விரும்பாமலோ சமூகமும் நாங்களும் இந்த நிலைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். இதனால் நாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந் நெருக்கடிகளை நாம் சகித்துக் கொண்டிருப்பதினால் இவை நெருக்கடிகளாக தெரிவதில்லை.

அடுத்ததாக பெண்களை ஆட்டிப்படைப்பது முதலாளித்துவ சந்தை கனவுகளாகும் இதனால் பெரிதும் கவரப்பட்டிருப்பவர்கள் பெண்களேயாகும். முதலாளித்துவ சந்தையில் நுகர்பொருட்கள் போலவே பெண்களும் விற்பனை பொருள்தான். நவ லிபரல்வாத முதலாளித்துவம் நுகர்பொருட்களை உற்பத்தி செய்வது போலவே நுகர்வோர்களையும் உருவாக்குகிறார்கள். இந்நிலைமையின் கீழ் பெறுமதிமிக்க பொருளாகிறார்கள். தேர்தல்கள், தொலைக்காட்சி நாடகங்கள், நுகர் பொருட்கள், ஆகியவற்றில் தான் மது வாழ்க்கை தங்கியிருப்பதாக காண்பிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இம்முறைமையின் எமக்கு வாழ்க்கை இல்லை. இவ் உண்மையை விளங்கிக்கொள்வதாயின், முதலாளித்துவ சந்தை கனவில் இருந்து விடுபட வேண்டும். இதுதான் எமது வாழ்க்கை என சமூகத்தால் காண்பிக்கப்படும் வாழ்க்கையில் உண்மையில் எமக்கு வாழ்க்கை இருக்கிறதா என ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை விடுத்து செய்வது என்ன? அடுத்தவர் வாழ்க்கையில் எமது வாழ்க்கையை தேடுகிறோம்.

இந்நிலைமையில் இருந்து நாம் விடுபடுவதானால் சமூக சிறை வாழ்க்கையில் இருந்தும் முதலாளித்துவ சந்தை கனவில் இருந்தும் நாம் விடுபடவேண்டும். நாம் முதலில் நெருக்கடிகளின் தன்மை பற்றி விளங்கிக்கொள்ள வேண்டும். உண்மையான விடுதலைக்காக உழைப்பு, உறுதி, தியாகத்துடன் போராட வேண்டும். இத்தகைய போராட்டத்தின் மூலமே உண்மையான வாழ்க்கையை வென்றெடுக்க முடியும். இந்த நோக்கத்திற்க்காக தற்போது எம்மால் துண்டுபிரசுரத்தை மட்டுமே வெளியிட முடியும். எதிர்காலத்தில் இந்த தேவையை முன்னிட்டு அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கும் போது எம் அனைவருக்கும் உண்மையான வாழ்வு கிடைக்கும். எனவே நாம் இப்போதிருந்தே சமூக அடக்குமுறையிலிருந்தும் முதலாளித்துவ சந்தை கனவில் இருந்தும் விடுபட ஆரம்பிக்க வேண்டும்.

தொடர்புகளுக்கு : இணைப்பாளர் - ஹேமாமாலினி அபேரத்ன - 071-9999896

இங்கு துண்டுப்பிரசுரத்தினை தரவிரக்கவும்