Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

என்று தணியும் இந்த பேடிகளின் கைது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்ய தயக்கம் காட்டினர். இப்பேடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே பொலிசே மாணவரை பொங்க வைக்காதே பொலிசாரே பக்கச் சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா-ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ… இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகள் மற்றும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் கல்வி பயின்று வரும் 3ம் வருட மாணவர்கள் ஐந்து பேரை சந்தேகத்தின் பெயரில் கைது பொலிசார் செய்துள்ளனர். குறித்த மாணவர்கள் ஐந்து பேரும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டார்கள் என சுன்னாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் நீதி வழுவா மேன்மை கொள் லங்காபுரிக் கொற்றவனின் ஆட்சியும், அவன்தன் சேனையும், அதனுள் தர்மமே உருவான துப்பறியும் பிரிவின் சிறந்த நற்செயற்பாடும், அவர்தம் கடைக்கண் பார்வையில் தொழிற்படும் சேனைத் தலைவர்களின் வினையாற்றல்களும், எதுவுமறியா அப்பாவிகளை அதிரடியாய் கைதாக்கும் பேடித்தன துரித கதிப்பாடும் வாழிய வாழியவே!