Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இவ்வார நிகழ்வுகளின் சாரம்! (6/4/14)

இறந்தவர்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது!

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. இவர்களால் தடை செய்யப்பட்டுள்ள கருணாநிதி துரைரத்தினம் எனும் நபர் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி மரணமடைந்துள்ளார் அவரது மரண அறிவித்தல் மற்றும் கண்ணீர் அஞ்சலி இணையங்களில் வந்துள்ளதை அரசின் துப்பறியும் பிரிவின் கவனத்திற்கும் சமர்ப்பணமாக்கலாம். இனிமேல் கட்டுநாயக்காவில் துரைரத்தினம் எனும் புலமபெயர் நபர் யாரேனும் பிரயாணம் செய்ய முற்பட்டால் அவர் கதி அதோ கதிதான். இவர்களால் அவசரம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கோபி புலிகள் அமைப்பு பற்றியும் முன்னுக்குப் பின் முரணனான பல கிண்டக்க முண்டக்கங்க சோடனைகளையும் காணமுடிகின்றது.

வடிவேலுவின் தெனாலிராமன் "விளம்பரத்தினை" பார்க்கும் போது மகிந்த அரசின் கோமாளித்தனங்கள்தான் ஞாபகமாக முன்வருகின்றது. எங்கும் எதிலும்… கோமாளிகளாகியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் மீது இனவாத சக்திகளின் வன்முறையே - அரசாங்கத்திற்கு வாக்குகள் குறைய காரணம்

தேர்தல் முடிவுகள் அமைச்சர் ராஜிதவுட கருத்து தெரிவிக்கையில் ""மேல் மாகாணத்தில் சிறுபான்மையினர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இது குறிப்பாக தமிழ் மக்கள் தாம் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை அரசாங்கம் இன்னமும் சரியாக இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லையென்பதை உணர்த்துவதாக நான் நினைக்கிறேன். இதேபோன்று முஸ்லிம் மக்கள் மீது கடந்த காலங்களில் சில இனவாத சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட எதிர்ப்பலைகள் தொடர்பாக அவர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதையும் காட்டுவதாக நினைக்கிறேன்."

தேர்தல் வெற்றி ஐ.நா தீர்மானத்துக்கு எதிரான மக்கள் ஆணையென புளகாங்கிதம் அடைகின்றார். எங்கள் ஜனாதிபதி. இம்மந்திரி சொல்வதையும் கணக்கில் கொள்வாரா? இவர் கிராமப்புறமொன்றில் தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் ஜெனீவாவிற்கு எதிராக பேசிக்கொண்டிருந்த வேளையில் மரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குரங்குகளும் கைகளை தட்டிக் குதூகலித்தனவாம்! இதையும் ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராகக் கொள்ளலாம்தானே?

விடுதலைப்புலிகளின் காலத்தில் பட்டினியால் யாரும் சாகவில்லை! சி.சிறிதரன் எம்.பி!

இப்புலி ரசிகர், சினிமா ரசிகர் மன்ற தலைவர்களின் றேஞ்சில் இருந்து கதை சொல்கின்றார். புலிகளின் காலம்…. "சமதர்ம தமிழ் ஈழப் பூங்காதானே"! அவர்கள் எவ்வித அரச உதவியுமற்று "தமிழனைத் தமிழன் ஆண்ட பொற்காலம்" அல்லவா? இவர்களின் பொற்காலத்தில் மக்களின் அரச மானியங்களுக்கு என்ன நடந்தென்பது பரமரகசியங்கள் அல்ல. இதை இந்த வாத்தியார் மறைப்பதில் விந்தையொன்றும் இல்லை. இவர் தலைமை ஆசிரியராக இருந்த வேளையில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் பேரினவாத அரசின் ஊதியம் வேண்டாமென, தமிழ்ஈழ அரசாங்கத்திடம் இருந்துதானே ஊதியம் பெற்று வாழ்ந்தார்.? புலிகளின் தடை தாண்டி ஓருமாதச் சமபளம், இன்னோரன்ன அரச சலுகைகள் வரத்தவறின் இவர் போன்றவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. இத்தனைக்கும் காரணம் புலிகளின் என கடியவும (பயம்) மாட்டார்கள். இந்த லட்சணத்தில் புலிகளின் "ஜனநாயக சொர்க்கம்" பற்றிய புலம்பல்கள்.!

இனம் படத்திற்கு எதிரான கொலைவெறி!

"இனம்" திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பள்ளிக்கூட காட்சி, புத்தத் துறவி தமிழ்க்குழந்தைகளுக்கு மாதுளம் பழம் கொடுக்கும் காட்சி, சிங்கள ராணுவ சிப்பாய் குழந்தையின் புகைப்படம் வைத்திருக்கும் காட்ச,இ தலைவர் கொல்லப்பட்டார் என்கிற ஒரு வசனம் கொண்ட காட்சி மற்றும் திரைப்படத்தின் இறுதியில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்கிற தகவல் பலகை காட்சி ஆகிய ஐந்தும் நீக்கப்பட்டுள்ளதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

இனம் படத்தில் குறுகிய இன உணர்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட "சிங்களத்திற்கு துணைபோகும்" எனும் காட்சிகளை இல்லாதாக்கியவுடன் முதல் பார்த்த வைரமுத்து போன்ற தமிழ்ப் பேராயர்கள் எல்லோரும் இலங்கை இனவெறியை சிறப்பாக அம்பலப்படுத்துகின்றது. எல்லோரும் பார்க்கவேண்டிய படமென சிபார்சு செய்தாலும், குறுகிய இன உணர்வுகளுக்கு மனம் பொறுக்கலையே. அம்மாவின் அரசு சிறப்புவரி சலுகையை கொடுத்துவிட்டு, அதுபற்றி கருத்து சொல்லாமல் இப்போ தேர்தல் கால சினிமாவின் இரட்டைவேட நடிப்பின் கெலிகாப்பரர் படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தை பார்க்க விட்டு மக்களின் அபிப்பிராயத்தைப் பெறுவதே சரியென எழுந்துள்ள ஏகபபெரும்பாண்மையான மக்கள் விமர்சனங்களால் அதிர்வுற்ற இனஉணர்வுப் பண்டங்கள் எல்லாம் கள்ள மௌனம் சாதிக்கின்றார்கள். குறுகிய இனவாதங்களின் சதிராட்டங்களால் கட்டிப் போடப்படும் தமிழக மக்கள், அவர்கள் தம் விழிப்புணர்வவு செயற்பாடுகள் கொண்டு இவர்களை இல்லாதாக்க வேண்டும்.

தேர்தல்கால காமடி ஸ்பெசல்கள்!

பல்வேறு சதித் திட்டங்களை முறியடித்து தேமுதிகவும், பாமகவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வருகின்றன: பிரேமலதா!

நல்ல நேரம் போவதற்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் அதுவும் வடக்கு திசை நோக்கி அமர்ந்து வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டும் என்பதால், செல்போனில் உள்ள திசை காட்டும் கருவியைக் கொண்டு வடக்கு திசையை நோக்கி அமர்ந்து வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம்.!

ஈழத்தமிழர்களுக்காகவே மத்திய அரசில் இருந்து விலகினோம்? கருணாநிதி§

இதுவே எனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம்! கலைஞர்!

நான் சாகும் வரை கறுப்பு, சிகப்பு கரை போட்ட வேட்டி தான் கட்டுவேன்: என்னை ''பிள்ளை இல்லையென்று தந்தையால் எழுதித் தர முடியுமா?'' -அழகிரி

போயஸ் தோட்டம் மாதிரி! நாடாளுமன்றம் அமைத்தால் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும்: வைகோ!

விஜயகாந்த் பேசுறதே புரியலப்பா: நடிகர் ஆனந்த்ராஜ்

காங்கிரஸ் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

ருவண்டாவின் ககாமமை மகிந்தா பின்பற்றுவாரா?

1994 இல் குற்று இன ஜனாதிபதி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஒரு சில தினங்களுக்குள் "குற்று" இன மக்களும், "ருற்சி" இனத்தவருமென எட்டு லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை உலகறிந்த அதிர்வு நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ருவண்டாவில் அப்போது ஆட்சியிலிருந்த "குற்று" இனத் தீவிரவாத அரசை கெரில்லாப்படை கவிழ்த்து அரசைக் கைப்பற்ற கெரில்லாப் படைக்குத் தலைமை தாங்கிய "ககாம" என்பவர் 2000 ஆண்டுகளிலிருந்து ருவண்டாவின் ஜனாதிபதியாக பதவியில் உள்ளார்.

இவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து, பாரபட்சமற்ற முறையில் இரு இனங்களுக்கிடையிலும் இடம் பெற்ற குற்றச் செயல்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட வழி செய்தாரென்பதும் ஓர் கணிப்பீடு. தற்போது குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களும் ஒருவரை ஒருவர் மன்னித்து இணைந்து வாழும் நிலை அங்குள்ளதை பல அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது சுகாம பற்றி (எதிர்க்கட்சிகளை அடக்கிய விதம்) பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்ற போதிலும் இப்படியொரு முன்னேற்றகரமானதொரு நிலையை ஏற்படுத்தியதை கண்க்கில் கொண்டு மகிந்த அரசின் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழு, சனாதிபதி ஆணைக்குழு போன்ற எண்ணிககையில் அடங்கா ஆணைக்குழுக்கள், திஸ்ச விதாரண-வாசுதேவ நாணயக்கார டி.யு. குணசேகர போன்ற அரச மதியுரைஞர்களின் அரசியல் வழிகாட்டல்களும் இப்படியொரு முன்னேற்ற அரசியல் கைங்கரியத்தை எட்டிப்பார்க்குமா? சர்வதேச விசாரணைதான் வேண்டாம், குறைந்தது இனங்களுக்கிடையில் ஐக்கித்தையாவது ஏற்படுத்தும் அரசியல் தீர்வையாவது முன்வைக்குமா? முடியாது செய்யவே மாட்டார்கள். இதைச் செய்தால் இவர்களின் அரசியல் இருப்பே இல்லாதாகி விடுமல்லவா?