Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தனது அரசியல் நெருக்கடிகளை மூடிமறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!

நெடுங்கேணி பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் இலங்கை தலைவர் என கருதப்படும் கோபி மற்றும் அவருடன் சேர்த்து மேலும் இருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக அரசு திடீரென அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் அறிவித்திருந்தார்.

அதேபோன்று, ஜெனிவா கூட்டத் தொடரின் போது 16 தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. முதலாளித்துவ சட்டமுறைமைக்கும் மாறாக தொடர்ச்சியாக வடக்கில்; கைதுகள், தடுத்துவைப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சட்டவிரோத கொலைகளின் மூலம் அடக்குமுறை விரிவடைந்து வருவது தெரிகிறது.

இந்த சம்பவத்தை அவதானிக்கும் எவரும் புலிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாகவே கருதுவர். அதேவேளை அரசாங்கம் புலிகள் இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் தோற்கடிப்பதாகவும் தெரியும். ஆனால் உண்மை வேறுவிதமானதாகும். அதேபோல் அரசியலும் வித்தியாசமானதாகும். அரசால் விளங்கிகொள்ள முடியாத தோர்தல் முடிவுகளும் ஜெனிவா தீர்மானத்தை அடுத்து இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு தொடர்பாகவும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதுமே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. விலைவாசி ஏற்றம் மற்றும் அதற்கு சமமான ஏனைய நெருக்கடிகளுக்கும் உள்ளாகியுள்ள மக்கள் அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லும் போக்கை தடுப்பதற்காகவே அரசாங்கம் இனவாதத்தை பரப்ப தொடங்கியுள்ளது. இந்த நிலைமைகளின் முன் அரசாங்கத்திற்கு மீண்டும் புலிகள் தேவைபடுகிறார்கள்.

மறுபுறத்தில் வடக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து விடுபடமுடியாத நிலையில் இனவாத அடிப்படையில் அணிதிரள்வதற்கான நிர்பந்தம் எற்படுவதை எவராலும் மறுக்கமுடியாது. அதேவேளை வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு இனவாத அடிப்பiயில் தீர்வு காணமுடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை கிடையாது.

ஏந்தவொரு நபரும் தான் பின்பற்றும் கொள்கை தொடர்பில் செயல்படுவதை எவராலும் தடுக்க முடியாது. அது இனவாதம், தேசியவாதம், பிரிவினைவாதமாக இருக்கலாம். அதேவேளை இவ்வாறான பிழையான கொள்கைகளை தோற்கடிப்பதற்கு அடக்குமுறைகளை கையாள்வதானது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். இப்படியாக பிழையான கொள்கைகளை தோற்கடிக்க அடக்கு முறைகளை கையாண்டதன் பலனாக ஏற்ப்பட்ட பேரழிவுகளை நாம் அனுபவரீதியாக கண்டுள்ளோம். தற்போது காணப்படும் நிலைமையானது அரச இயந்திரம்; அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகும். இந்நிலையில் அரசாங்கம் தனது நெருக்கடிகளை மூடிமறைக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இனவாத அடிப்படையில் பிரிக்கும் வெட்கம் கெட்ட அரசியலை பின்பற்றுகிறது.

எனவே அனைத்து இனவாத அரசியல் சக்திகளுக்கு எதிராகவும், ஐனநாயக மறுதலிப்பு நடவடிக்கைகளை தோற்கடிக்கவும், வடக்கு, தெற்கு; இன, மத, மொழி பேதங்களை மறந்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒண்றிணையும்படி நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அரசியல் குழு

முன்னிலை சோஷலிஸக் கட்சி

2014- 04- 12