Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரிந்த தோழர்களுடன் இணைந்து.... மாற்றத்துக்காக!

மே தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய முறையிற் பல பிரசாரங்களை முன்னிலை சோசலிசக் கட்சி அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளுகின்றது. இதன் ஒரு அங்கமாக , நேற்று (24.04.2014), இடதுசாரிய கட்சிகளுடன்- தமிழ் தளத்தில் மிக முக்கிய கட்சியான புதிய ஜனநாயக (மா- லெ) கட்சி உட்பட்ட கட்சிகளுடன் இணைந்து தலைநகர் கொழும்பில் வெற்றிகரமான கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது. இதன் தொடர்ச்சியாக, ஐக்கிய சோசலிசக் கட்சி (United Socialist Party), சோசலிசக் கட்சி (Socialist Party), சோஷலிச நடைமுறைக் கூட்டுவாழ்வு (Praxis Collective) போன்ற கட்சிகளுடன் இணைந்து, கொழும்பில் நடந்தது போல"மே தினத்தில் பச்சோந்தியும் சிவப்பாகும்" என்ற கருப் பொருளில் கருத்தரங்கும் உரையாடலும் கண்டி நகரில் ஒழுங்கு செய்துஉள்ளது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் மிக முக்கியமான விடயாமாகக் கருதப்படுவது, கோட்பாட்டு அடிப்படையைக் காரணமாகக் கொண்டு முன்னிலை சோசலிசக் கட்சியை விட்டு வெளியேறிய தோழர்கள் தம்மை (சோஷலிச) நடைமுறைக் கூட்டுவாழ்வு (Praxis Collective) என்ற குழுவாக ஒருங்கிணைத்தபடி முதல் தடவையாகத் தம்மை அரசியலரங்கில் வெளிப்படுத்துவதாகும். அவ் வெளிப்பாட்டை அவர்கள் கோட்பாட்டு அடிபடையில் வெளியேறிய முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்து செய்கின்றனர் என்பது, இடது சக்திகள் அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடையம். கருத்து வித்தியாசங்களுக்கு இடையிலும் பொது நோக்கான பொதுவுடைமைச் சமூதாயத்தை உருவாக்கும் பணியின் இணைவது இலங்கை புரட்சிகர அரசியல் வரலாறில் பதியப்பட வேண்டிய செயற்பாடாகும். இச் செயற்பாடானது தமிழ் இடதுசாரிகள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் மக்கள் போராட்டத்தை மிக விரைவாக இடதுசாரிகள் தலைமை தாங்கும் நிலை தேசத்தில் உருவாகும்.

நிகழ்ச்சி பற்றிய விபரம்:

இடம் : கண்டி

JANAMEDURA Hall

காலம் : சித்திரை 28 , மாலை 3 மணிக்கு .

நேற்றைய தினம் கொழும்பில்  நடந்த கருத்தரங்கு படங்கள்