Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

பன்னாட்டு நிறுவனங்களை வாழ வைப்பதே மகிந்த சிந்தனை

மரபணு விதை ஆய்வில் அடிப்படையான விஷயம் விதையில் உள்ள பாரம்பரிய உயிர்மங்களை மாற்றியமைப்பதின் மூலம் புதிய விதை வடிவம் பெறுகிறது. பசுமைப் புரட்சியின் தந்தை என்று கூறப்படும் விஞ்ஞானி நார்மன் பார்லாக் கண்டு பிடித்த குன்னரக மெக்சிகன் கோதுமையில் நார்ச்சத்து மாவுச்சத்தாக மாறிய அதிசயம் உண்டு. அதாவது வைக்கோல் குறைவாகவும் மணி அதிகமாகவும் பெறப்பட்டது. இதே ஆய்வு நெல், கம்பு ஆகியவற்றிலும் மேற்கொள்ளப்பட்டது. இதுவே மரபணு மாற்றத்தின் அடிப்படை.

மரபணு விதை ஆராய்ச்சியில் உள்ள வரம்பு - நாம் பயன்படுத்தும் உயிரிகளில் நச்சைப் பயன்படுத்தக்கூடாது என்பதுவே. நஞ்சை நஞ்சால் கொல்லும் பி.ட்டி. போன்ற நோய்க்குறி ஆய்வுகளை நல்ல பண்புள்ள விஞ்ஞானிகள் எதிர்க்கின்றனர்.!

புதிய விதைக் கண்டுபிடிப்புகளில் நஞ்சைப் பயன்படுத்தும் மரபணு மாற்ற விதைச் சோதனை வயல்களில் போதிய பாதுகாப்பு இல்லாவிட்டால் பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தும் அடுத்த தோட்டத்தில் அப்பாரம்பரிய விதை மலடாகும்.

காற்று மூலம் விஷவிதையின் மகரந்தத்தூள் பரவும் ஆபத்து நிகழ முடியாத பாதுகாப்புகளை பன்னாட்டு விதை நிறுவனங்கள் மேற்கொள்வதில்லை. இரண்டாவதாக நஞ்சைப் பயன்படுத்தினால் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டுமே கட்டுப்படுத்தலாம். ஒரு பயிருக்கு பல பூச்சிகளாலும் பூசணங்களாலும் ஆபத்து உண்டு!. எல்லை மீறிய மரபணு மாற்ற ஆய்வின் மறுதோற்றம் வழங்கும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம் இருக்கும் என்பதே சமூகப் பொறுப்புள்ள விஞ்ஞானிகளின் கூற்றாகும்.

பிரான்ஸ் நாட்டில் நஞ்சைப் பயன்படுத்தும் மரபணு ஆராய்ச்சி தடை செய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்ற விதை மூலம் தயாராகும் உணவுக்கும் தடை என்று செய்திகள் வரும்போது இது நம்நாட்டிற்கும் தேவைதானா? எனும்பொழுது ஆமென நமது அரசும் பன்னாட்டு விதை நிறுவனங்களான மான்செண்டோ பேயர்ஸ் பாஸ்ஃப் ஆகியவற்றிற்கு பச்சைகொடி காட்டியுள்ளது. மக்களையல்ல பன்னாட்டு நிறுவனங்களை வாழ வைப்பதே மகிந்த சிந்தனையாகும்.