Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

புலி உறுப்பினர்களை கொன்ற இராணுவ அதிகாரிகளுக்கு கௌரவிப்பு!

நெடுங்கேணி பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்பட்ட கோபிதாஸ், அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரையும் சுட்டுக் கொன்றதுடன் திறமையாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இது எதைத்தான் காட்டுகின்றது?... பயங்கரவாததச் தடைச் சட்டத்தின் மூலம் நாட்டின் சாதாரண குடிமக்களை சமூக விரோதியாக்கவும் பயங்கரவாதியாக்கவும் முடியும் என்பதையே சுட்டி நிற்கின்றது. என்கவுண்டர் முறைகொண்டு எதுவும் செய்யலாம் என்பதே சமகால "சமதர்ம" அரச நடைமுறையாகும். இத் தர்ம நோக்கில்தான் விஜித தேரருக்கும் வெள்ளைவான் கடத்தல் முயற்சியாகும்.

நாட்டில் பௌத்த தர்மத்தையும், அத்தர்மத்தின் துணை கொண்டு, நாட்டில் அமைதியையும், இனங்களுக்கிடையில் சமத்துவம் சமதர்மத்திற்காக போராடும் உண்மையான பௌத்த துறவிகள் இவ்வரசின் பார்வையில் பயங்கரவாதிகள். பொதுபல சேனா போன்ற காடைக்கூட்டங்கள் மகிந்த சிந்தனையின் சாந்த-சற்பசொரூப-சனாந்த மூர்த்திகள். அதோடல்லாமல், ஏதோ ஜேம்ஸ்பொன்ட் பாணியில் மூவரைக் கொண்ட அரசின் "காவல் தெய்வங்களுக்கு" "(வைரவர் வாகனம்) கௌரவிப்பாம்.

அரசால் கௌரவிக்கபட்டதுகள் எல்லாம், கௌரவ விருதுகள் வழங்கும் போது, தாங்கள் செய்யாத வேலை ஒன்றிற்கு, செய்ததாக இட்டுக்கட்டி பரிசு வழங்கும் உலகின் முதலாம்தர கோமாளித்தன அரசு எம் மகிந்த அரசுதானெ உள்ளுரச் சிரித்திருப்பார்கள். தவிர மிகக் கடமை உணர்வுடன் எத்தனையோ எத்தனையோ பேரைக் கட்த்திக் கொலை செய்துகொண்டிருக்கும் வெள்ளைவான் அரச கொலைக்கள அடியாட்கள் எல்லாம் கோத்தபாயவிடம் தங்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் தரவேண்டுமெனக் கேட்கப்போகின்றார்கள்.