Wed04172024

Last updateSun, 19 Apr 2020 8am

சூரிச் மேதினம் 2014

முதலாளித்துவத்தின் நெருக்கடியை அம்பலப்டுத்தி,எதிர்ப்பு தெரிவிக்க என்றும்மில்லாத மக்கள்அணி அவர்களோடு முன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம்.

சுவீஸ் நாட்டின் மக்களும், அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு நாட்டைச்சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களும் கலந்து கொண்ட மாபெரும் மேதினமாக வர்ணிக்கப்படும் இம் மேதினத்தில் தொழிற்சங்கங்கள், கலாச்சார அமைப்புகள், கட்சிகள், இடதுசாரி அமைப்புகள், முதலாளித்துவ நெருக்கடிகளைப் புரிந்து கொண்ட தனிநபர்கள் என 14 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் மீது முதலாளித்துவம் ஏற்படுத்தம் சுமைகளான சம்பள வெட்டு, வேலையின்மை, சமூகக்கொடுப்பனவுக்கொள்ளை, மொத்தத்தில் மனிதநேய கலாச்சாரத்தின் சிதைவும் எதிராக அதிகரிக்கும் மக்கள் விரோதப் போக்கும், அதையொட்டிய பாலியல் துன்புறுத்தல்கள், இனவாத வெறிச்செயல்கள், போன்றவற்றுக்கு எதிரான கோசங்கசள் எழுப்பப்பட்டன.

உலக முதலாளித்துவத்தின் யுத்த ஆக்கிரமிப்பு, அல்லது அவ்வாறான யுத்தஆக்கிரமிப்பு பற்றிய அச்சுறுத்தல் என்பது தமது செல்லரித்தப்போன தனியுடமை பொரளாதார முறை உருவாக்கி விட்டுள்ள சமூகச் சீர்கேட்டை மூடிமறைக்க தமது அரசியல் அதிகாரத்தின் சரிவை தூக்கிநிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளேயாகும். மக்கள் நலனுக்காகவே அவர்களது உரிமைகளுக்காகவே, ஐனநாயகத்தை பாதுகாக்கவே இவற்றை மேற்கொள்ளுவதாக இந்த ஏகாதிபத்தியங்கள் ஊளையிடுகின்றன.என்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.

சமவுரிமையியக்கம், முன்னிலை சோசலிச கட்சி சார்பாக அதன்உறுப்பினர்கள் இலங்கையில் மக்கள் விரோத இனவாத, இராணுவ ஆட்சியையும், அவ்வாறான அடியொற்றிய முதலாளித்தவக் கட்சிகளை அகற்றும் போராட்டத்தின் அவசியம் பற்றியும். இலங்கையில் சமாதான, சமவுரிமை வாழ்வுக்கான அடிப்படையை உருவாக்கும் பொதுவுடமை ஆட்சியின் அவசியம் பற்றியதான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். இலங்கையரசானது ஏனைய தேசிய இனங்கள் மீதான திட்டமிட்ட ஒடுக்கமுறையை பலவழிகளிலும் செயற்படுத்தி வரும் போக்கை கண்டிக்கும் கோசங்களையும் ஏந்திச்சென்றனர்.

இம்முயற்சியென்பது இனிவரும் மேதினங்களில் பலமான சக்தியாக உருவெடுக்க வேண்டும். அதனை வலுப்படுத்த பெண்கள் உரிமை அமைப்புக்கள், கல்விக்கான உதவி வழங்கும் அமைப்புக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் மனித நேயமிக்ககோர் அனைவரும் ஒன்றினையும் போதுதான். பிற்போக்கு சக்திகளின் அடாவடித்தனங்கள், மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், ஒழிக்கப்படும், மக்களின் ஒன்றிணைவே மக்கள் விரோதிகளைத் தோற்க்கடிக்கும் மாபெரும் ஆயதமாகும்.