Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் அறுபது வீதத்தினர் உளநோய்க்கு ஆளாகியிருக்கினராம்!

மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அனுஷா கோகுல, இலங்கையின் சனத்தொகையில் அறுபது வீதத்தினர் ஏதோ ஒரு வகையில் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாக கூறினார். அத்துடன் அவர் “சமூகப் பிரச்சினைகள் கட்டுமட்டில்லாமல் அதிகரிப்பதாக", அதை எதிர் கொள்ள தயராகுமாறு கேட்டுக் கொண்டார், குறிப்பாக "விவாகரத்து வீதம் உயர்வதாகவும், நீரிழிவு நோயினால் கால்கள் துண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவும், வீதி விபத்துக்கள், சிறுவர் துஷ்பிரயோகம், பதின்ம வயதுக் கர்ப்பம், உளப்பாதிப்புக்குள்ளான குழந்தைகளைப் பிரசவித்தல் போன்றவற்றினால் சிதைவடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருதாக" எச்சரித்தார். இப்படி கூறியவர் இதைவிட அதிதமான உளநோய்களை இனம் காட்ட தவறியவர், இதற்கு காரணமனவர்களையும், இது ஏன் எற்படுகின்றது என்பதையும் கூட மூடிமறைத்து விடுகின்றார்.

யுத்தத்தில் காணமல் போனவர்கள், யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், மத இன ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்பவர்கள், அதிகரிக்கும் சாதிய வன் கொடுமைகள், பெண்கள் மீதான பாலியல் பொருளாதார அழுத்தங்கள், வேலை தேடிச் செல்லும் புலம்பெயர்வுகள், விதைவகளின் தேசமாக மாற்றி இருக்கும் கொலைகார ஆட்சி ... தொடர்ந்து உளநோயை உற்பத்தி செய்கின்றது.

அரசின் நவதாராளவாதக் கொள்கையும், நுகர்வாக்கமும் சமூகத்தின் இடைவெளியை அதிகரிக்க வைக்கும் அதே நேரம், இதை பாதுகாக்கும் அரசின் பாசிசக் கொள்கை மனநோயளிகளை உற்பத்தி செய்கின்றது.