Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசாங்கத்திலிருந்து வெளியேறக் கூடியவர்களின் ஊழல் குறித்த கோப்புக்கள் வெளியிடப்படும் என அச்சுறுத்தல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தாவிற்கு எதிராக நிறுத்தப்படவுள்ள பொது வேட்பாளருக்கு ஆதரவு குறித்து எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக தொடர்பிலுள்ள அமைச்சர்கள் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜபக்ஸ அரசாங்கம்அடையாளம் கண்டுள்ளது என்று தெரியவந்ததுள்ளது. மேலும் ஆளும் மகிந்த தரப்பினர் இவர்களின் ஊழல் சம்பந்தமான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன் மூலம் பொது வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க கூடிய ஆளும் கட்சி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மறைமுகமாக மிரட்டும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்து வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பில் போட்டியிடுவதனை நிறுத்தி நாமல் ராஜபக்ஜவின் ஆதரவாளர்களளை வேட்பாளர்களாக நிறுத்தும் வேலைகள் முடுக்கி விடபட்டுள்ளன.

இவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை பகிரங்கமாக அரசு மேற்கொள்ளுமா என்பது இன்னமும் தெரியவில்லை. சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்களுடைய தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அறிய வருகிறது.