Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜ.நா விசாரணை குழு தொடர்பாக பா.உ அஜித்குமார ஆற்றிய உரையின் சுருக்கம்!

கௌரவ சபாநாயகர்அவர்களே!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிராயுதபாணிகளான குடிமக்கள் கொல்ப்பட்டார்களா? இல்லையா? என்பதை கண்டறிய ஜ.நா.மனிதஉரிமை கவுன்சில் விசாரணைக் குழு நியமிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் விவாதிப்பதற்க்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருக்கிறது.

கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தொடர்ந்து கொள்ளக்கூடிய உண்மைதான் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், அபிலாசைகள் மறுதலிக்கப்டும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறான யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதாகும்.

அரசாங்கம் ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தொரிவிக்கு முகமாக இந்த பிரேரணைக்கு ஆதரவு தரும்படி கேட்கிறது. ஜ.நா.வும் அவர்களுக்கு ஆதரவான பிரிவினரும் ஜனநாயகத்திற்காகவும் நியாயத்திற்காகவும் விசாரணைக்கு ஆதரவு கோரி நிற்கின்றனர். உண்மையில் இது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகரமா?

இது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை மூடிமறைப்பதற்க்குப் பயன்படுத்தும் தந்திரோபாயமாகும். இன்றைய சந்தர்ப்பத்தில் சமூகத்தில் எழுச்சி பெற்றிருக்கும் கருத்தாடல்களை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிப்பதை தோற்கடித்து அதை முன்னுக்கு கொண்டுவர பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இத்தேவைக்காவே இந்தச்சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றோம். அரசாங்கம் நெருக்கடிக்குள் சிக்கும் போதும் தேர்தல்களின் போதும் கையாழும் தேசாபிமானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனவாதம் போன்ற ஆயுதங்களை கையிலெடுக்கும். இதுவும் அதுபோன்ற தந்திரோபாயமேயாகும்.

இந்த பிரோரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கபட்டாலும் 30 வருடகால யுத்த நெருக்கடிகளுக்குள்ளான மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என நாம் நம்பவில்லை. ஜ.நா மனித உரிமை ஆணைக்குழுவும் அவர்களின் ஆதரவாளர்களும் இறுதிக்கட்ட யுத்தத்தில் நிராயுதபாணியான சிவிலியன்கள் கொல்லப்பட்டதை மட்டுமே முன்னிலைப்படுத்தி விசாரணைக்குழுவை நியமித்துள்ளார்கள்.

30 வருடகால யுத்தத்தில் மனிதத்துவத்துக்கு எதிரான கொலைகள் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. இதிலிருந்து அவர்களது உண்மையான நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது. இசைப்பியா என்ற இளம் பெண் தடுப்பு காவலில் வைத்து வன்புனர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த இளம் பெண் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தில் லெப்டினன்ட் பதவி வகித்தவர்என அரசு கூறிவருகிறது.

அது வேறு விடயம் இந்த இளம்பெண் தடுத்து வைத்திருந்த சமயத்தில் வன்புனர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். என்பதே இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல் 1989, 90களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள் வன்புனர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட பின் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்களுக்கான சாட்சியங்கள் உண்டு அவர்கள் யுத்தம் புரிந்தவர்களா?

யூ.என்.பி அரசாங்கம் யாழ் நுலகத்தை எரியூட்டியதற்க்குப் பதில் சொல்ல வேண்டியது யார்? என வாரப் பத்திரிகை ஒன்று அண்மையில் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்க்கு முன்பிருந்தே யுத்தத்தை தொடக்கியவர்கள் யார்? உதவியவர்கள் யார்? என்பவை தொடர்பாக விசாரணைகள் மேற்க்கொள்ள தேவையில்லையா? யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா? வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மாரையும் மனித வெடிகுண்டுகளாக மாற்றிய சமூக பொருளாதார அரசியல் காரணிகளை புறந்தள்ளி வெறுமனே இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றம் தொடர்பாக மட்டுப்படுத்தி விவாதிப்பது பொருத்தமானதல்ல. இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவைதான் லிபரல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலாகும்.

இந்த நிலைமைகளை விளங்கிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் குறுகிய அரசியல் தேவைகளுக்காக வெளிப்படுத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு நாம் துணை போகமாட்டோம். அதேபோல் வரலாறு பூராகவும் மனிதஉரிமை மீறல்களுக்கு துணைபோகும் நிறுவனம் தான் ஐ.நா சபை. அவர்களுக்கு இந்த பிரச்சினைக்கு உண்மையான தீர்வு தேவையில்லை. இன்று அவர்கள் முழு உலகிலும் தங்களது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி வருகிறார்கள்.

இது போன்ற நிறுவனங்கள் இலங்கையின் ஒடுக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறானவார்களுக்கு நாம் உதவத் தேவையில்லை. மறுபக்கத்தில் இந்த அரசாங்கம கூறுகிறது. ஏகாதிபத்திய வாதிகள் எமது நாட்டில் தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது எனவே எமக்கு ஆதரவு தாருங்கள் என கேட்கிறார்கள்.

இதை யார் சொல்கிறார்கள். சுதந்திரக்கல்வி மற்றும் சுதந்திர சுகாதார சேவைகளை சந்தைப் பொருளாக்கும் ஏகாதியபத்திய நிகழ்ச்சி நிரலுக்கேற்ப்ப செயல்படுத்தும் அரசாங்கம் சொல்கிறது. விவசாயிகளின் விதை உற்பத்தி உரிமையை மறுதலிக்கும், ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளை வெட்டிக் குறைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மானியங்களை வெட்டித்தள்ளும் ஏகாதிபத்தியவாதிகளின் சந்தைத் தேவைக்கேற்ப சட்டங்களை தயாரிக்கும் அரசாங்கம் சொல்கிறது.

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அணிதிரளும்படி வெலிவேரிய "றத்துபஸ்" பகுதி மக்களின் குடிநீரை நஞ்சாக்கும் நிவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாங்கம் கேட்கிறது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தமக்கு ஆதரவு தரும் படியாகும்.எனவே அரசாங்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சுத்த பொய்யாகும் இந்த நாட்டை சகல மட்டத்திலும் ஏகாதிபத்தியத்திற்கு தாரை வார்க்கின்ற அரசாங்கம் தனது பிழையான நிகழ்ச்சி நிரல்களால் நெருக்கடிக்குள்ளாகும் போது பராளுமன்றத்தில் யோசனை சமர்ப்பித்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தமக்கு ஆதரவு அழிக்கும்படி கேட்கிறார்கள்.

அரசாங்த்தின் புனரமைப்பு நடவடிக்கைகளால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தமிழ் மக்களின் புனர்வாழ்வு திட்டங்களுக்கும் இடையூறு எனவும் இந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறுகின்ற அரசாங்கம் கடந்த கால வரலாற்றை மறந்து விடும்படியும் கூறுகின்றது.

யுத்தத்தில் மரணித்தவர்கள் யாராக இருந்தாலும் மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்தாக வேண்டும். அவர்களுக்கு ஏன் இது நடந்தது? என்பதை ஆராய வேண்டும் இந்தப் பொறுப்பில் இருந்து யாரும் விலகிவிட முடியாது. இந்த யுத்தத்தில் மரணித்தவர்கள் சிங்களவரா, தமிழரா, முஸ்லிமா? என்பற்கு அப்பால் மனிதர்கள் என்ற வகையில் அவர்களின் மனித உரிமை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மனச்சாட்சி உள்ள அனைவரும் குரலொழுப்ப வேண்டும். அதை விடுத்து இன மதவாதிகளின் பொறியில் சிக்கக்கூடாது.

அதே போல் பொய்யான மனித உரிமை பற்றி குரல் எழுப்பும் ஐ.நா சபை போன்ற சர்வதேச அமைப்பபுக்களின் ஏமாற்றுகளுக்குள் சிக்கி விடாமல் அதற்குப் பதிலாக நீங்கள் தலையீடு செய்யயுங்கள். திருத்தங்கள் சமர்ப்பிப்பதன் முலம் இந்த யோசனைக்கு அங்கீகாரம் கொடுப்பதை தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே நாங்கள் அனைத்து மக்களிடம் கேட்டுக் கொள்ளவது மனிதத்ததுவத்தை பாதுகாக்க முன்வாருங்கள் என்பதாகும்.