Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

2011 ஆண்டுக்குப் பின் இந்திய மீனவர்களை இலங்கை கொல்லவில்லையாம் - அமைச்சர் அருண் ஜெட்லி

இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லியின் இக் கூற்றானது, இலங்கை அரசைப் புனிதப்படுத்தும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க கருத்தாகும். இலங்கையில் யுத்தத்தை நடத்திய இந்தியா, இன்று அதை புனிதப்படுத்தும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

2008 ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சர்வதேச கடல் எல்லையை தாண்டும் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை கடைப்பிடிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறி, இதை மீறியது தான்  மீனவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணமாகக் காட்ட முற்பட்டு இருக்கின்றது இந்தியா.

2013 ஆம் ஆண்டு 676 இந்திய மீனவர்களும் 2014 ஆம் ஆண்டில் 536 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ள இந்தியா, எல்லை தாண்டும் பிரச்சனையாக அதைக் குறுக்கிக் காட்டி இருக்கின்றது.

கொல்லலப்பட்டது எல்லை தாண்டிய பிரச்சனையல்ல. மாறாக இனவாதம் மற்றும் மேலாதிக்கம் சார்ந்த கொலைக் குற்றங்கள். எல்லை தாண்டுவதற்காக, கொல்வதானது சர்வதேச குற்றமும் கூட. இதை இந்தியா மூடிமறைக்க முற்பட்டு இருக்கின்றது.

எல்லைதாண்டி மீன்பிடிப்பது கூட பிரச்சனை கிடையாது. பிரச்சனையாக இருப்பது மீன்பிடி முறையும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையும் தான்.

இந்திய அரசு இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையை தமது மீனவர்களுக்கும் அமுலுக்கு கொண்டுவரக் கோருவதன் மூலம், எல்லையற்ற மீனவர்களின் சர்வதேசியத்தை கட்டியெழுப்ப முடியும்.