Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

போர்க்குற்றவாளிகளும் சகாக்களும் கூடும் இராணுவ நீதிமன்றம்

2009ம் ஆண்டின் யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக இராணுவ உயரதிகாரிகள் கொண்ட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக “இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆரச்சி” குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரிப்பதற்கு என்று நியமிக்கப்பட்டவர் போர்குற்றம் புரிந்த  படையணிகளின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவே.

 

இவ்வாறு போர்குற்றம் புரிந்தவர்களையே நீதியரசர்களாக நியமித்து போர்குற்ற விசாரணை நடத்த முயற்சிப்பது என்பது முப்படைத் தளபதி மகிந்தரும், அவரின் தம்பி கோத்தபாயவையும் அவர்களின் பரிவாரங்களையும் குற்றமற்றவர்கள் என்று நிறுவுவதற்கான முயற்சியும், உலகத்தினையும் மனிதநேய அமைப்புக்களையும். ஏமாற்றும் செயலே.

இலங்கை அரசின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களையும் போர்க்குற்றம் புரிந்தவர்களையும்  விசாரணை செய்ய நியமித்ததன் மூலம் இன்னமும் ராணுவத்தில்  முன்னாள் தளபதி பொன்சேகாவிற்கு விசுவாசமாக உள்ள ராணுவ அதிகாரிகளையும் ராணுவ வீரர்களையும் குற்றவாளிகளாக்கி மகிந்த குடும்பத்தினருக்கு விசுவாசமான ராணுவத்தினரை பாதுகாக்கும் முயற்சியாகவும் இருக்கமுடியும்.

போர் குற்றம் புரித்தவனை போர்குற்றம் பற்றி விசாரணை செய்ய நியமித்துள்ளதன் மூலம் இலங்கை அரசின் உண்மை முகம் அம்பலப்பட்டு விட்டது.

சீலன் 16/02/2012