Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சீனாவும் இந்தியாவும் முட்டிக்கொள்ளாமல்; மேயுங்கள்

மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தின் மீதான சுமைகள் அதிகரித்துச்செல்லும் அதேவேளை, அந்நிய கம்பனிகள் மக்களின் உழைப்பை சுரண்டிச்செல்வதற்கும் தாராளமாக இலங்கைத்தேசம் திறந்து விடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் கட்டளைப்படி செயலாற்றுகின்ற மக்கள் விரோத அரசினது இனவாத முகமூடி கிழித்தெறியப்பட்டு, சிங்கள மக்களின் காவலனாக காட்டியவாறு ஆட்சியை  தக்கவைப்பது மக்கள் முன் அம்மணமாக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு வெளிப்பாடகவே --"சீனாவின் பிரசன்னத்தை இந்தியா அசௌகரியாக கருதக் கூடாதெனவும் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போதியளவு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும்" ஆளும் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்திருக்கிறார்.---


அடிப்படை உரிமைகட்காக போராடும் மக்களை இராணுவபலத்தால் அடக்கமுனையும் அதேவேளை, மக்களின் வாழ்வை கொள்ளையிட போதிய சந்தர்ப்பமிருப்பதாக  அறிக்கைவிடும் அடக்குமுறையாளரின் திமிர்த்தனமான அறிவிப்பேயிது. இந்த அமைச்சரின் இலங்கையினை உலக வல்லரசுகள் கொள்ளையிட அனுமதிக்கும் கூற்று; ஓட்டுமொத்த இலங்கை மக்களும், மக்கள் போராட்ட அமைப்புகளும் அணிதிரள வேண்டிய வரலாற்றுத் தேவையினை உணர்த்தி நிற்கிறது.

-முரளி 03/03/2012