Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு! இந்நிலையில்தான் மகிந்தாவின் உளறல்!

செய்தி குறித்த கண்ணோட்டம்

சர்வதேச சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறைக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் ‐

அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாக வகையீடு செய்யப்படக் கூடாது என்பதனை உலகத்திற்கு உணர்த்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்த அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் இலங்கை என்பதனை மட்டுமன்றி பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகரமாக முறியடிக்கக் கூடிய வல்லவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை இளைய தலைமுறையினரை பாதுகாப்பதற்கு பெற்றோரும் மதத் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக இணைய பாவனை வீடியோ கேம்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றினால் இளைய சமூகம் தவறான வழியில் செல்லக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாணந்துரை ரன்கொத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பி;ட்டுள்ளார்.

சிறுவர்களை தவறான வழிகளில் பயன்படுத்திக்கொள்ள சில தரப்பினர் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மதத் தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து சிறுவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமடையச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பௌர்ணமி தினங்களில் எத்தனை பேர் விஹாரைகளுக்க சென்று வழிபாடுகளை நடத்துகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஒழுக்க நெறிகள் சீர் குலைந்திருந்தால் எவ்வளவு பொருளாதார அபிவிருத்தியை எட்டினாலும் பயனில்லை ஏன்கின்றார்.

புதிய ஜனநாயக முன்ணணியின் இச் செய்தி குறித்த கண்ணோட்டம்:

பெரும்பாலான குடிகாரர்கள் செய்கின்ற “பஞ்சமாபாதகங்கள்” எல்லாவற்றையும் செய்துவிட்டு, போதையில் தங்களை மறந்து உண்மைகளை உளறுவார்கள்! இந்நிலையில்தான் நம்நாட்டின் “நாட்டாண்மை”யின் உளறலும்:

நாட்டின் இன்றைய--இவர் சொல்லும் காரணங்களுக்கு, இவரும் இவரின் குடும்பாட்சியுமே பெரும் காரணி!

விகாரைக்குள் போக,ஞான-போதி நிலையோ? சிலநேரங்களில் சிலர் சிற்சில இடங்கள் போனால் இந்நிலைதான் வரும்! இப்படித்தான் பேசவைக்கும்! இந்நிலை விடிஞ்சால் போச்சு! நாட்டிற்கும்-மக்களுக்கும் பழைய நிலையே தொடர்நிலை!