Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

விமல்வீரவன்ச ஜாதிககெல உறுமயவுடன் இணையலாம், இரண்டு கட்சிகள் எதற்கு?

விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திரமுன்னணிக்கும், ஜாதிககெல உறுமயவுக்கும் எந்தவேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் மத்தியில் இனப்பகையை வளர்ப்பதற்காகவே ஆளும் ஜக்கிய முன்னணி அரசால் தீனிபோட்டு வளர்க்கப்படும் இவர்கள்---நல்லிணக்க  ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் தீர்க்கமான முடிவு எடுக்கநேரிடும்--என  அரசாங்கத்தை எச்சரிக்கிறார்களாம். இவர்கள் அரசாங்கத்தை எச்சரிக்கவில்லை மாறாக அரச திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் பரமவிரோதிகள்.

 

ஜெனிவாவில் மகிந்தசமரசிங்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற உறுதிமொழி வழங்கிவிட்டார் என கூக்குரலிடுவது, தமிழ்மக்களிற்கு தனிநாடு பிரித்துக்குடுக்கப் போகிறார்கள் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி சிங்கள மக்களின் காவலர்களாக வேடமிடுகிறார்கள்.


இவை அன்றாட வாழ்க்கையை கொண்டு செலுத்த அல்லலுறும் மக்களிடம் இனியும்  எடுபடப்போவில்லை என்பதையே சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புறுகின்ற முற்போக்கு சக்திகளின்  எழுகை நம்பிக்கையை ஊட்டுகிறது.

-முரளி -07/03/2012