Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கண்ணில் நிற்காது பெருகும் கண்ணீர்- வசனம் கலைஞர்

---இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒருமுறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.---வசனம் கலைஞர்

ஈழத்தழிழருக்காக எழுதிய கடிதங்களையும் தீர்மானங்களையும் உலகப்புகழ் பெற்ற சாகும்வரை உண்ணாவிரதமிருந்தது அனைத்தையும் பட்டியலிட்டே உலகத்தலைவராக வலம் வந்த தலைவருக்கு கொடூரத்தை பார்க்க இப்போது தான் காணொளி கிடைத்திருக்கிறது. வன்னியில் மக்களின் மீது இலங்கை அரசு இந்திய அரசின் துணையுடன் கொத்துக் குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கில் மாண்டபோது தேர்தலில் வெல்வதனையும் தனது குடும்ப நலன்களையும்   குறியாகக் கொண்டு மத்திய அரசின் சதித்திட்டத்திற்கமைய  செயற்ப்பட்ட உலகத்தமிழர்களின் தலைவன் இன்று எல்லாம் முடிந்து மூன்றாண்டுகளின் பின்னர்  மத்திய அரசிடம் கேட்டுக்கேட்டு களைத்துப்போனதாய் இந்தக்காட்சிகளையாவது பார்க்குமாறு கோரிக்கை விட்டுள்ளார்.


கலைஞரிடம் மக்கள் கேட்கிறார்கள் --இத்தனை அவலத்துக்கும் சொந்தமானவர்கள் இந்திய அரசும்தான் என இனியாவது ஒரு கதை வசனம் எழுதுங்கள்