Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதிகளும் மீள்குடியேற்றமும்!

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 14-10-2010

சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டுமென ஜாதிக ஹெல  உறுமுது!!

யாழ் வந்துள்ள மக்கள் அவசரப்பட்டுள்ளார்கள் என்றே சொல்லவேண்டும்!

வாழ்வாதாரங்களுக்கான வசதிகளை ஏந்படுத்தி வந்திருக்கலாம!

சாதாரண மக்களின் இயல்பான மீள்குடியேற்றத்திற்கு தடைகள் இருக்கக்கூடாது!

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையினால் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

 

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ்-முஸ்லிம் மக்கள் குறித்தே அனைவரும் சிந்திப்பதாகவும், ஆனால் இடம்பெற்ற யுத்தத்தினால் 1 லட்சத்து 65 ஆயிரம் சிங்கள மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும்-- இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களே தற்போது யாழ். ரயில் நிலையத்திலும் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்திலும் நிலைகொண்டு தமது உரிமைகளுக்காகப் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்வநத் இம்மக்கள் சுயமான--தன்னிச்சையான முடிவுகளுடன் வந்ததாக இல்லை!

ஆகையால் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள சிங்கள மக்களை உடனடியாக அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் இதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளது

அத்துடன் இந்த நாடு சகலருக்கும் சொந்தமானது எனக் குறிப்பிட்ட அவர் சிங்கள மக்கள் எங்கும் சென்று வாழ்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமகால மீள்குடியேற்றம் சம்பந்தப்பட்ட விடயத்தில் பேரினவாதிகளும்-குறுந்தேசிய-இனவாதிகளும், இனவாத நோக்கிலிருந்தே அணுகுகின்றார்கள்! வடகிழக்கில் 3-தசாப்தங்களுக்கு மேலாக இயல்பாக குடியேறி வாழ்ந்த சிங்கள மக்கள் புலிகளின் குறுந்தேசிய இனவாத அடாவடித்தன அரசியலால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்! அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு, ஆதரவளிக்க வேண்டும்! அப்படிச் சென்ற மக்களுக்கு யாழ் மக்கள் உதவிவருகின்றனர். இதை விமர்சிக்கும் தமிழத்தேசிய வாதிகளையும் காண்கின்றோம்! ஆத்தோடு சாதாரண தமிழ்-சிங்கள மக்களின் இயல்பான குடியேற்ற வாழவிற்கும்-திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கும் வித்தியாசம் தெரியாது, தேசிய-இனப்பிரச்சினையில்-சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய பிரதேசங்கள் பற்றிய சழூக-விஞ்ஞானப் புரிதலின்றிப் பலர் புலம்புகின்றனர்! குழம்புகின்றனர்!  எனவே இந்நிலையில் இருந்தே இப்பிரச்சினையை அணுகவேண்டும்!

வட-கிழக்கு தமிழ்மக்களின் தாயகம!

சாதாரண-தமிழ்-சிங்கள மக்களின் இயல்பான குடியேற்றம் வேறு, பேரினவாத நோக்கிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் வேறு!!

இதில் முன்னையதை ஊக்குவிக்கலாம். பின்னையதை ஊக்குவிப்பதென்பது கடந் 50-வருட பேரினவாத அரசியலின் தொடர்வே! இது தேசிய இனப்பிரச்சினையின் புரிதல் தொடர்பான பிரச்சினை!

*********************************************

போருட் அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்ததரவு

தேசிய பாதுகாப்புக்கு எதிராக இரகசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை சம்பந்தமாக போருட் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவரான ஆனோ பென்சிவ் என்பவரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனம் தொடர்பான புலனாய்வு பிரிவுகள் கடந்த மாதங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் அந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

போருட் நிறுவனம் பாதுகாப்பு விடயங்களில் மாத்திரமல்லாது அரசியல் விடயங்களிலும் தலையீட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போருட் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு எதிரில் ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடி கீழ் இறக்கப்பட்டமை தொடர்பில் அந்த அமைப்பின் வதிவிடப் பணிப்பாளர் ரன்வேய் ட்வேட்ன்ஸ்டி இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அரசும், அமைச்சும் சொல்வதெல்லாம் உண்மை! ஊண்மையைத ;தவிர வேறொன்றும் இல்லை! இவர்களின் அரசசார்பற்ற நிறுவனங்கள் பற்றிய் கொள்கை கோட்பாடுகள் ஊர்-உலகறிந்நதே!