Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

நினைவுத்தூபி திறப்பிற்கு ஸ்ரீலங்கா கடும் எதிர்ப்பு !

தமிழ்செல்வனின் நினைவுத்தூபி திறப்பிற்கு ஸ்ரீலங்கா கடும் எதிர்ப்பு !

அரசோடு புலிகளும் எதிர்க்கின்றனர்!

தலைவருக்கில்லா சிலை தமிழ்செல்வனுக்கோ?

செல்வன் வந்தபின் தலைவன் வந்தவரா?

தலைவன் வந்தபின் செல்வன் வந்தவரா?

லாகூர்னெவிற்கு போகாத புலிகள் லாச்சப்பலில வாதாடுகினறனர் !

 

தமிழ்செல்வளின் நினைவுத்தூபி திறப்பிற்கு ஸ்ரீலங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரான்சில்  திறக்கப்பட்ட  சு.ப தமிழ்செல்வன்  சிலைக்கு தடைவிதிக்குமாறு பிரான்ஸ் அரசிடம் அன்னாட்டில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள லாகூர்னவ் நகர பிதாவிற்கு எழுத்து மூலமான கோரிக்கை கடிதம் ஒன்றினை அன்னாட்டின் உயர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.பா. தமிழ்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று நடைபெற்றது!

புலிகளின் வரலாற்று நினைவுச் சின்னங்களான மாவீரர் துயிலும் இல்லம் தாயகத்தில் ஸ்ரீலங்காப்படையினரால்  அழிக்கப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர் தளத்தில் உள்ள சிலர் வரலாற்றினை தங்கள் நாடுகளில் பதிந்துகொள்ளும் நோக்கில் புலிகளின்முதன்மையாளர்களுக்கு நினைவுச்சிலை அமைக்கும் நடவடிக்கையினை ஸ்ரீலங்கா அரசு முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது !

தேசியத்தலைவரின் சிந்தனையிலிருந்து…..

 

“உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன."   --தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்!

இது ஓர் புலி இணையதளத்திலுள்ள "தலைவரின் பொன்மொழி"

"தலைவர்"…சொல்லிய….

“உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன".என்ற சமூக-விஞ்ஞானக் கணிப்பு ஒருபுறமிருக்க> பிரான்சில் "தலைவருக்கில்லா சிலை தம்பி தமிழ்செல்வனுக்கு வைத்திருக்கும்" அதிசயம் நடைபெற்றுள்ளது! இதை பாரிஸ் லாச்சப்பலில் கேட்கமுடிந்தது!

லாச்சப்பல் 2-ம் இலக்க மெற்றோ மேம்பாலத்தின் கீழ்ப்பாகத்தில்> விடுமுறை நாட்களின் மாலைநேரத்தில் பட்டிமன்ற விவாதங்களை கேட்டு ரசிக்கமுடியும்! இப்போ புலிகள் எல்லாம் பலவிதம்  அதனால் விவாதங்களும் ஒவ்வொரு விதமாயிருக்கும்! சிலைத்திறப்பு நிகழ்வன்று, சிலைத் திறப்பாளிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி ஓர் வழக்காடு மன்றமே நடைபெற்றது! அதில் கேட்டவைகளே> இவைகள்

தலைவருக்கில்லா சிலை தமிழ்செல்வனுக்கோ?

செல்வன் வந்தபின் தலைவன் வந்தவரா?

தலைவன் வந்தபின் செல்வன் வந்தவரா ?

இப்போ தலைவர் சீவிக்கின்றார்! என்ற நிலையில் இருந்து விடுபட்டு, அவருக்கு அஞ்சலி சிலை தேவையென்ற யதார்த்தமான வாதங்களையும் கேட்க முடிகின்றது! இது தலைவரின் இம்மாத நிகழ்வுகளிலாவது நடக்குமா?

அருந்ததி ராயின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அருந்ததிராய் வெளியிட்டுள்ள அறிக்கை:

« வந்திருந்த கலகக் காரர்களில் பெரும்பாலானவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியின் பெண்கள் அணியைச் சேர்ந்தவர்கள் ! »

« உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பத்திரிகை விற்கும் போட்டியில் சேதிகளை  தேடுவதற்கும் செய்திகளை உறுதிப்படுத்தி செய்வதற்கும் இடையிலான கோடு அழிந்து வருகிறது. ! »

31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் 100க்கும் அதிகமான காடையர்கள் எனது வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தினர்.  காஷ்மீர் தொடர்பாக நான் கொண்டிருக்கின்ற கருத்துக்களை எதிர்த்து கோசங்களை எழுப்பியபடி எனக்குப் பாடம் படிப்பிக்கப் போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர்.  NDTV, TimesNowமற்றும் NEWS24  ஆகிய  ஊடகங்களின் நகரும் ஒளி ஒலிபரப்பு நிலையங்கள்  (Out side Broad casting Vans) ஏற்கனவே வந்து இச்செயலை நேரடியாக ஒளிபரப்பக் காத்திருந்தன.

வந்திருந்த கலகக் காரர்களில் பெரும்பாலானவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியின் பெண்கள் அணியைச் சேர்ந்தவர்கள் என ஊடகச் செய்தியாளர்கள் கூறுகின்றார்கள். கலகக்காரர்கள் சென்ற பின் காவல்துறையினர், எதிர்காலத்தில் ஒலிபரப்பு நிலையங்களை எனது சுற்றயலில்  அவதானித்தால் தமக்கு அறிவிக்கும் படி கூறினர்.

ஏனெனில் கலகக்காரர்கள் வருவதற்கான முன் அறிகுறியாக இது இருக்கலாம் என அவர்கள்  தெரிவித்தனர். இந்த வருடம் June மாதத்தில் Trust of india வெளியிட்ட பொய்யான செய்தியை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எனது வீட்டுக் கண்ணாடிகளை சேதப்படுத்தினர். அப்போதும் அவர்கள் கூடவே இரண்டு கமராக்காரர்களும் வந்திருந்ததால் இத்தகைய காடையர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையே நிலவும் ஒப்பந்தத்தின் ஊற்றுமூலம் என்ன?.  இவ்வாறான சம்பவங்கள் நடப்பதற்கு முன்னரே அந்த இடத்தில் நிலை எடுத்திருக்கும் ஊடகங்கள் இத்தகைய குழுக்களின் தாக்குதல்களும் எதிர்ப்புக் கூட்டங்களும் வன்முறையற்றவையாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை கொண்டுள்ளனவா?

இந்தக் காடையர்களின் குற்றச் செயல்களில் இன்று நடந்தது போல அல்லது இன்னும் மோசமான சம்பவங்கள் நடந்தால் ஊடகங்கள் அவற்றுக்கு துணை போனவையாக மாட்டாவா?

இந்தக் கேள்வி இங்கு முக்கியமானது. ஏனெனில் சில தொலைக்காட்சி ஊடகங்களும் பத்திரிகைகளும் காடையர்களின் கோபத்தை என் மீது திருப்பி விடுவதற்கு வெளிப்படையாகவே முயற்சி செய்துள்ளன.

உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பத்திரிகை விற்கும் போட்டியில் சேதிகளை  தேடுவதற்கும் செய்திகளை உறுதிப்படுத்தி செய்வதற்கும் இடையிலான கோடு அழிந்து வருகிறது.

தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது பிரபல்யத்தை வளர்த்துக் கொள்வதற்கும் தமது கூடுதலான தொலைக்காட்சித் தரப்படுத்தல் புள்ளிகளைப்( Television rating points)  பெறுவதற்கும் ஒரு சிலரைப் பலிக்கடாக்கள் ஆக்க வேண்டுமா?

அண்மையில் காஷ்மீர் தொடர்பாக நடந்த கருத்துக்களில் நானும் மற்றும் பலரும் பேசியவைகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என மத்திய அரசாங்கம் தெரிவித்து விட்டது. எனவே என்னுடைய கருத்துக்களுக்காக என்னைத் தண்டிக்கும் பொறுப்பை  வலதுசாரிக் குண்டர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்.

Bajrang Dal மற்றும் Rss என்பன வெளிப்படையாகவே என்னுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளப் போவதாக அறிவித்து விட்டன. நாடு முழுவதும் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை முழு நாடுமே அறிந்துள்ளது. அது மட்டுமன்றி அவர்கள் எவ்வளவு தூரமும் போவார்கள் என்பதையும் சகலரும் அறிவார்கள்.

இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் முதிர்ச்சியான நிலைப்பாட்டைக் காட்டுகின்ற அதேவேளை ஒருசில ஊடகங்களும் சில சனநாயகக் கட்டமைப்புகளும் இவ்வாறான காட்டுத்தனமான நிதியை கைக்கொள்ள முயற்சிக்கின்றன.

பாரதீய சனதாக் கட்சியின் பெண்கள் அணி இவ்வாறு மோசமாக நடந்து கொள்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும். அஜ்மீர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தக் குண்டுவெடிப்புடன் தொடர்பு பட்டதாக சுளள இன் மூத்த செயற்பாட்டாளர் ஆன இந்திரேஸ்குமார் குற்றம்  சாட்டப்பட்டுள்ளார். Rssஇன் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள இவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்த கவனத்தை திருப்புவதற்காக இவ்வாறான நடத்தைகளை பெண்கள் அணி மூலம் மேற்கொள்கின்றனர்.

ஆனால் பிரதான பல ஊடகங்களும் இவ்வாறான அநாகரிகமான செயல்களிலும் ஏன் ஈடுபடுகின்றன என எனக்குத் தெரியவில்லை.

அதிகம் பிரபல்யம் இல்லாத கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற ஒரு எழுத்தாளி அல்லது பொதுமக்களைக் கொன்ற குண்டுவெடிப்புக்கு பொறுப்பான பயங்கரமானவர்கள் ?