Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகோற்சவமாகியுள்ளது தேர்தல் திருவிழா!

செய்திக் கண்ணோட்டமும் 06.03.2010

மகோற்சவமாகியுள்ளது தேர்தல் திருவிழா!

தனிப்பெரும் தலைவர் முதல் — தனிப்பெரும் தலித்துக்கள் வரை வடம் பிடிக்கின்றனர்! இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் ஓர் மகோற்சவமாகியுள்ளது. வடக்கில் அரசியல் கட்சிகள் இதை ஓர் தேர்த்திருவிழா ஆக்கியுள்ளனர். இதற்கு தனிப்பெரும் தலைவரின் பேரன் பொன்னம்பலம் முதல் தலித்துக்களின் “தனிப்பெரும் மகாசபையினர்” வரை வடம் பிடிக்கின்றனர்.

இம்முறைத் தேர்தல் திருவிழாவின்; விசேட அம்சம் “தமிழ்ஈழத்திற்கு” காங்கிரஸின் பொன்னம்பலம் வடம்பிடிப்பதே.! தனித்துவமான தேசம், இறைமை, அதிகாரம், தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை தந்துநாமே என மந்திர உச்சாடனம் செய்கின்றார். இந்த மந்திர உச்சாடனத்தை விட்டு நேராக தமிழ்ஈழம் என்றால் என்னவோ? இந்;த ஈழத்தினால்தால்தானே, புலிகளும் இல்லாமல் போனவர்கள். இத்தேர்தலிலும் தனக்கும் இந்நிலைதானே, என சுத்தி வளைத்து அப்புக்காத்து அகராதியில் விளக்கம் கொடுக்கினறார்!

கூட்டமைப்பு இவைகளை  எல்லாம் கைவிட்டு விட்டதாம், தமிழ்மக்களைப் பொறுத்தவரை சமஸ்டி தேவையில்லை, அதைநோக்கி நகர்ந்தால், இன்னொரு 35-வருடங்கள் பின்நோக்க வேண்டும் என்கின்றார். எனவே “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற என் தாத்தாவின் முதுமொழிக்கிணங்க, தந்தையின் வழிமொழிதலுடன், புலன்பெயர்ந்ததுகளின் ஆசியுடன், முன்வைக்கும் “சுத்தலான சுத்துமாத்து தமிழ்ஈழத்திற்கு” வாக்களியுங்கள் என்கின்றார்.
 

“கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுந்தம் போக முற்பட்டனாம்” என்ற கதையாகத்தான் உள்ளது, காங்கிரஸ் பொன்னம்பலத்தின் தமிழ்ஈழப் பயணமும் தேர்தலும்! தமிழ்மக்கள் கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக, தங்களின் அப்பன், அப்பனின் அப்பனின், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்! அப்போ தாங்கள் அவர்களுக்கு எம்மாத்திரம்!

தனிப்பெரும் தலித்காரர்கள்….

சிறுபான்மைத் தமிழர் மகாசபை வரும் தேர்தலை சுயேட்சையாக எதிர்கொள்ளத் தயார் என்கின்றது “தூ” என்ற தலித்கம்பனி இணையதளம்! ஓ!, தூவே,  – வேட்பாளர்களும், கட்டுக்காசும் இருந்தால் தோதலில் போட்டியிடலாம் தானே;! இதற்கு ஏதோ மாபெரும் யுத்தப்பிரகடனம் போலுள்ளது! தங்கள் எடுகோள்!தங்களின் தேர்தல் நோக்கம்தான் என்னவோ? காங்கிரஸ்போல், காங்கேயன் கணபதி பொன்னம்பலம்போல், மகாசபையும், எம்.சி. சுப்பிரமணியமும் சமகாலத்தவர்கள் என்ற சமப்பாடோ? பொன்னம்பலத்தின் பெடியன் கேட்கலாம், ஏன் எம்.சியின். மகாசபையின் வாரிசுகள் கேட்கக் கூடாதோ? என்ற சமவுர்pமைப் போராட்ட உணர்வோ? ஆதங்கமோ? நீங்கள் இத்தேர்தலுக்கு ஊடாக, ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதைச் சொல்ல வருகின்றீர்கள். எதைச் சாதிக்கப்போகின்றீர்கள்!

நாங்கள் சிலவற்றைச் சொன்னால் “வெள்ளாளப் புத்தியில்” யாரோ ஒண்டு எழுதுது என்பீர்கள். தங்கள் சோபாசக்தி சொல்வதையும்  கொஞ்சம் கவனியுங்கள்!

“சாதியொழிப்புக் குறித்து மேலும் உரையாடல்களை தொடக்கி வைப்பதற்கு அப்பால், மேலே நகரமுடியாமல் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்திருக்கின்றது. ஒரு சாதிய ஒழிப்பு முன்னணி சமூகத்தில் இருக்கக்கூடிய சாதிய ஒடுக்குமுறை வடிவங்களை மட்டும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டு உயிர் வாழ முடியாது. அது சாதி ஒழிப்பிற்கான போராட்டங்களை நோக்கி நகரவேண்டும்”

“சாதிய விடுதலை குறித்து, நாம் பேசும்போது, மற்றைய அடிமைத்தனங்கள் குறித்த, குறிப்பாக இன ஒடுக்குமுறை குறித்த கேள்விகளை நாம் எதிர்கொள்ள நேர்pடும். இக்கேள்விகளை நாம் நேர்மையுடன் அணுகாதபோது, ஓர் அரசியல் இயக்கத்தின் தேக்கம் தவிர்க்கமுடியாததே! எனது அவதானிப்பில் இலங்கை தலித் முன்னணி அரசை அனுசரித்து நின்று ஏதாவது செய்து விடலாம் என கனவு காண்கின்றது. 40-வருடங்களுக்கு முன்பு தலித்தலைவரான எம்.சி. சுப்பிரமணியம் தன்னுடைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பின்பலத்தோடு அரசோடு பேரம் பேசினார். அப்போதைய அரசின் அமைச்சரவையில் கம்யூனிஸ்ட்டுக்களும் பங்கெடுத்தவர்கள். பீட்டர் கெனமன், கொல்வின் ஆர்.டி. சில்வா, என்.எம்.பெரேரா போன்ற இடதுசார்p நடசத்திரங்கள், அரசின் போக்கை தீர்மானிக்கக்கூடியதாக இருந்த காலமது. இன்று அரசுப்பொறுப்பில் உள்ளவர்கள் அப்பட்டமான தரகு முதலாளிய கொள்கை;ககாரர்களும், இனப்படுகொலைகாரர்களுமே என்பதை தலித் முன்னணி புர்pந்துகொண்டு, தனது செயற் திட்டங்களை வகுக்காதவரை, இத்தேக்கத்தில் இருந்து அதனால் வெளியே வரமுடியாது.”

(இது கடந்தவருடம் சோபாசக்தி ஓர் நேர்காணலில், தலித்திய முன்னணி சம்பந்தமான கேள்விக்கு வழங்கிய பதில்)

உங்களைப் பொறுத்தவரை சோபாசக்தி சுகன் கூட தலித்தியச் செயற்பாட்டாளர்கள் இல்லைத்தானே! அதனால்தான் அவர்களுக்கும் உங்கள் கம்பனிகளில் இடம் இல்லை! தமிழகத்தின் தலித்தியர்கள் பிறப்பால் பிராமணனான பாரதியைக் கூட “தலித்” என்கின்றார்கள். நீங்கள் நடாத்துவது தலித்அமைப்போ அல்லது குறுகிய-இறுகிய “சாதிச் சங்கங்;களோ”? டானியல் இன்றிருந்தால் உங்களின் தலித் அரசியல் கண்டு, தானும் தலித்தில்லையோ என அஞ்சி, “நவீன பஞ்சமர்” எனும் நாவல் எழுதுவார். அவ்வளவுக்கு உங்கள் தலித்தியம் “குறுந்சாதிய வெறிக்குள்” மூழ்கியுள்ளது! இதற்குள் இருந்துகொண்டு, உங்களால், போராட்டப்பாரம்பர்pயம் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளில், இருந்து, ஓர் துரும்பைக்கூட நகர்த்த முடியாது!
தலித் என்பது ஒடுக்கலின் பாற்பட்டது. சாதிய சங்கங்களின் பாற்பட்டதல்ல!

“வன்முறையில் ஈடுபடாத நேர்மையான அரசியல்வாதிகளை மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யவேண்டும்                 –துலிப் டி சிக்கேரா பேராயர்

ஓர் நேர்மையான சாமியாரையே கண்டுபிடிக்க கஸ்டப்படுகின்ற காலநிலையில், மக்கள் நேர்மையான அரசியல்வாதிக்கு எங்கே போவார்கள்!

வெளிநாடு வாழ் தமிழ்மக்கள் இனிமேலாவது, விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை நிராகரிக்கவேண்டும்     —ஐ.சி.ஜி அமைப்பு

புலிகளின் வழிமுறையில் முழுமக்களும் இல்லையே! புலிகளின் புலன்பெயர்ந்த எச்சசொச்சங்களுக்கே இந்நிலை!

பெண்கள் நூற்றாண்டிலும் நளினிக்கு விடுதலை கிடையாதோ?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினியும் கணவனும் கடந்த 17-வருடங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவ்வழக்கை சட்டப்பிரச்சினையுடன் கூடிய மனிதாபிமானப் பிரச்சினையாக கொள்ளலாம்.

“நளினி வழக்குத் தொடர்பில், தமிழக அரசிற்கு இனியும் அவகாசம் இல்லையென” மேல் நீதிமன்றம் சொல்லியுள்ளது!

இந்த வழக்கை இழுத்தடிப்பதில், சுப்பிரமணியசுவாமியின் குறுக்கீடுகளை விட, தமிழக அரசின் தாமத இழுத்தடிப்பே பிரதான காரணியாகியுள்ளது. தமிழக அரசு தமிழ்மக்களின் அரசு. கலைஞர் உலகத்தமிழர்களின் காவலன், பெண்ணினத்திற்காக போராடுபவர்!

nஐயலலிதா ஆட்சியில் கண்ணகி சிலை அகற்றப்பட்டபோது, பதறியே போனார் கலைஞர். நீதி கேட்ட கண்ணகிக்கு இந்நிலையோ என மக்கள் மத்தியில் வழக்காடு மன்றமே நடாத்தியவர். ஆட்சிக்கு வந்ததும், கண்ணகி சிலையை உரிய இடத்திற்கு கொண்டுவந்து சேர்த்த பின்புதான் மன நிம்மதியடைந்தார். அண்மையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேனா? என சூளுரைத்தார். தற்போது நளினி வழக்கில் தாமதம் வேண்டாம், வேடிக்கை பார்க்க வேண்டாம் என்கின்றது மேல நீதிமன்றம்.

நளினி வழக்கில் சட்டப்பிரச்சினையை விட மனிதாபிமானப் பிரச்சினையே மேலோங்கி நிற்கின்றது இவ் வழக்கை 80-ம் ஆண்டுகளில் விசார்pத்து, குற்றவாளியாக கண்டு 15-வருட சிறைத்தண்டனை விதித்திருந்தால், அவர் இப்போது சிறையில் இருக்கவேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது!
கலைஞரும், தமிழக அரசம் தாமதக் காரண வேடிக்கைகள் செய்யாது, சர்வதேச பெண்கள் தினத்திலாவது, 17-வருடங்களுக்கு மேல் சிறையிருந்து வரும் நளினியின் விடுதலைக்கு உதவுமா?

இம்முறை மிக நீளமான வாக்குச்சீட்டு —தேர்தல் திணைக்களம்

196பேரை தெரிவு செய்ய 8,000 மனநோயாளிகள் போட்டியிட்டால், மக்கள் நிலை எப்படியிருக்கும்! வாக்குச்சீட்டை கையில் எடுத்தால் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த நிலையாக இருக்கும் மக்களுக்கு!

மனோ கணேசன் கண்டிக்கு வரக்கூடாது! —கெல உறுமய
அன்னம் கட்சியினர் களனிக்குள் வரக்கூடாது! –மேர்வின் சில்வா

சாத்தான்கள் தேர்தல் வேதம் ஓதுகின்றன!

பிரான்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சம்பந்தனை சுட்டுக்கொல்ல வேண்டும என ஏற்பாட்டாளர்கள் கருத்து முன்வைத்தார்களாம்! -   ஓர் இணையதளச்செய்தி

அவர்கள் பழக்கதோசத்தில் (வாய்தடுமாறி) சொல்லியிருப்பார்கள்! இதைப் போய் பெரிசாய் எடுக்கிறியள்

பாலியலும் சாமியார்களும்!

சமூக விரோதிகள், ஆசிரியர்கள், சிறுமிகளை – மாணவிகளை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துதல், முதல் சாமியார்களின் காமலீலைக் களியாட்டங்கள் வரை ஊடகங்களின் நாளாந்நத செய்திகள் ஆகின்றன.

சகல மதங்களும் சொல்கின்ற பிரமச்சார்pயம், பற்றற்ற துறவறம், கன்னியாஸ்திரிய வாழ்வு நிலை என்பவற்றை நாம் சமூக விஞ்ஞானக் கண்கொண்டு கேள்விக்குள்ளாக்க வேண்டும். இவற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்கொண்டு; பார்த்தால் பாலியலில் சோரம் போன பவவற்றைக் காணலாம். இந்துத்துவத்தின் புராண – இதிகாசம் முதல் பக்தி இலக்கியங்களுக்கு ஊடாக நாம் பலதைக் காணமுடியும்.

சிவபெருமான் முதல் தேவர்கள், முனிவர்கள், சமயக்காவலர்கள் ஈறாக இன்றைய சத்தியசாயிபாபா போன்ற “பற்றற்ற” சமகாலச் சாமியாhகள் வரை பாலியலில் சோரம் போனவர்கள் தான்! ஐயனார் என்ற தெய்வத்தின் தந்தையார் சிவனே! ஐயனாரின் பிறப்பு பற்றிய வரலாறு சிவனின் சிற்றின்ப பாலியலுக்கு ஊடாகவே சொல்லப்படுகின்றது! தேவர்கள் தலைவன் இந்திரன் கௌதம முனிவரின் மனைவியில் ஆசைப்பட்டதன் விளைவு, இன்றைய திருமணங்களின் அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், முள்முருக்கமரம் வைத்தலுக்கு ஊடாக நீடிக்கின்றது.

பற்றற்ற துறவறம் நோக்கிப் புறப்பட்ட  முனிவர்கள் பலர் தந்தையர்கள் ஆகியதையும், முனிவர்களின் தவத்தைக் குலைத்த ஊர்வசி றம்பைகளை,  இன்றும் சினிமாவில் அதே பெயர்களில,; அதே பாத்திரங்களில்தான் வருகின்றார்கள்;! இவற்றிற்கு ஊடான எம் பாலியல் பட்டறிவுதான் என்ன?

பாலியல் என்பது மனித தேவைகளின் ஓன்றே! பாலியலில் இருந்து மனித வாழ்வை பிர்pத்துப்பார்க்க முடியாது.  இதை மதங்களும், மதங்களுக்கூடான கலாச்சார விழுமியங்களும், கட்டமைப்புக்களும், எவ்வளவுதான் பற்றற்றதாக, துறவறமாக, சொன்னாலும், அவைகளால் பாலியலில், “பற்றற்ற துறவற” வாழ்வு நிலைக்கு கொண்டு செல்லமுடியாது!

இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பின், அசைவியக்கம், தொழில்நுட்ப பண்டப் பரிவர்த்தனமும், அதன் உபரியுமே! இவ்வுபரி, விளம்பரங்களுக்கு ஊடாகவே சாத்தியமாகின்றது! முதலாளித்துவம், விளம்பரங்களை, பெண்களிற்கூடாக  கவர்ச்சியாக கற்சிதமாகச் செய்கின்றது. இன்றைய முதலாளித்துவக் கணனி உலகம் பாலியல் கவர்ச்சிக்கு ஊடாக, இளம் சமுதாய உலகை மட்டுமல்ல, மதத்தையும், மதத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஆட்டங்காண வைத்துள்ளன.

இன்றைய உலகில் கனணி இல்லாத கோவில்கள், தேவாலயங்கள், மடாலாயங்களே இல்லை! கைத்தொலைபேசி இல்லாத சந்நியாசிகள் – மதத்துறவிகளே இல்லை! இவர்கள்pல் பலர்; இவைகளுக்கு ஊடாக எதைத்தான், செய்கின்றார்கள், பார்க்கின்றார்கள் -; கதைக்கின்றார்கள். இதன் விளைவு , மதத்தின் துறவிகளை, கன்னியாஸ்திரிகளை பாலியலுக்குள் சிக்கவைக்கின்றது!

பொதுவாக பாலியலின் அவலப் பிடிக்குள் சிக்கித்தவிப்பவர்கள், ஏகப்பெரும்பான்மையான பெண்ணிய சமூகமே! இவ் அவலம் மதத்துறவிகளால் மட்டுமல்ல, காமுகவெறி கொண்ட சமூகவிரோதிகளால், அரசபடைகளால், இன்னும் இன்னோரன்னவற்றாலும், தொடராய்த் தொடர்கின்றது! ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புகளுக்கூடாக தொடராக பேணப்பட்ட ஆணாதிக்க, மதக் கருத்தியல்களின்; செயற்பாடுகளே இவ் அவலத்தின் விளைநிலைமாகும்!

பெண்ணியம்- பெண்நிலைவாதம் பாலியல், போன்றவற்றின் பார்வைகள், கருத்தாடல்கள் விவாதங்கள், கிழக்கத்தைய – மேற்கத்தைய, நாடுகளின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு, கலை-கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களுக்கூடாக (நேரெதிராக), பலவற்றில் வேறுபடுகின்றன. இவைகளை நேரெதிர் என்பதைவிட, கிழக்கத்தைய-மேற்கத்தைய கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்ககளின் பொதுப்பண்பாகவே பார்க்கவேண்டும். இவற்றிற்கு பன்முகத்தன்மை கொண்ட புது வாசிப்புத் தேவை! இவை சமூக விஞ்ஞானப் பார்வைகொண்ட தளங்களிற்கு ஊடாக நகர்த்தப்படவேண்டும்