Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தளபதி மன்னராகின்றார்!?

வரலாற்று முக்கியத்துவம் இனவழிப்பு யுத்தம் ஒன்றிற்கு தலைமை தாங்கிய இருவர், இரு துருவங்கள் ஆகியுள்ளனர். மகிந்த ராஐபக்ச தன் அண்மைக்கால அரசியலில் விட்ட மிகப்பெரிய தவறொன்று, சரத் பொன்சேகாவை ஓரம்கட்ட நினைத்தது. இதனால் அந்நிலைமை (எதிர்வரும் தேர்தலில்) தனக்கும் வந்துவிட்டதோ என தத்தளிக்கின்றார்.

இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவை அப்பதவியிலில் இருந்து நீக்கி, கூட்டுப்படைப் பிரதானியாக்கினார்;. ஆனால் பிரதானி என்ற வகையில் முப்படைகளுக்கும் ஆணையிடும் அதிகாரத்தை கொடுக்கவில்லை. அதைக் கேட்டு கொடுக்காததன் விளைவு, ராஐpனாமாவில் போய் முடிந்தது.

ராஐpனாமா செய்த தளபதி பொன்சேகாவை, அவரின் தேசிய-சர்வதேசிய கூட்டாளிகள் குறுகிய காலத்தில் ஓர் அரசியல்வாதியாக்கி, ஐனாதிபதித் தேர்தலில் மகிந்தாவிற்கு சமமான நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.

ஐனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் முக்கிய தேர்தல் பிரகடனம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையை இல்லாதாக்குதல், மகிந்தாவின் குடும்ப ஆட்சியை – அரசியலை இல்லாதொழித்தல்.

இலங்கை அரசியலின் பெரும்பாலான அரசியல்காலம், குடும்ப ஆட்சிக்கூடாகவே, கடந்து வந்துள்ளது. ஆனால் மகிந்தாவின் குடும்ப ஆட்சி போன்றதொரு – அரசியல் கட்டமைப்பு கடந்த காலங்களில் இருக்கவில்லை.

மகிந்தாவின் ஆட்சியில், நான்கில் மூன்று பங்கு  மகிந்தாவின் நேரடி நிர்வாகத்தின் கீழேயே உள்ளது. இதற்கான ஒருநாள் செலவு ஒரு கோடியே 90லட்சமாகும். எஞ்சியுள்ள ஓர் பங்கு ஏனைய சகோதரர்களின் கீழேயே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் என்பவர்கள் மகிந்தாவின் வெறும் கைப்பொம்மைகளே! பாராளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேள்விகள கேட்கப்பட்டால், மகிந்தாவிடமும் சகோதரர்களிடமும் கேட்டு; (தவணை அடிப்படையில்) பதில் சொல்கின்றார்கள்.

சரத்பொன்சேகா இத்தேர்தலில் கையில் எடுத்துள்ள இந்த நல்ல அங்சதிரத்தை (நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை) சரிவரப் பிரயோகித்தால், அது மக்கள் மத்தியில் எடுபடக்கூடிய ஒன்றுதான்.

மகிந்தாவின் கடந்தகால குடும்ப ஆட்சி, புலிகளை தோற்கடித்த பலவான் என்ற ஓர் பிரமையைத் தவிர, நாட்டு மக்களை அரசியல் பொருளாதார ரீதியில் நலிந்தவர்களாக – நசுங்குண்டுள்ளவர்களாகவே ஆக்கியுள்ளது. இந்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஓர் மாற்றத்தை நோக்கிய அன்னளவான அலையொன்றும் வீசுகின்றது.

இதை யுத்தம் உருவாக்கிவிட்ட “வீரரான” சரத் பிரதிபலிக்கின்றார். ஆனால் அவரின் கையை மக்கள் பலப்படுத்துவார்களா?

ஏதிர்வரும் ஐனவரி 26-ல் நடைபெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலில், சர்வதேச முகாம்; கடந்த காலங்கள் போலல்லாது, மிகப்  பகிரங்கமாகவே தொழிற்படுகின்றது .அமெரிக்க மேற்குலகம் ஒருபுறமாகவும், ஆசியநாடுகள் சில மறுபுறமாகவும் செயற்படுகின்றன. இதில் இருவருடைய ழூலதனம் அரசியல் ஆதிக்கம்,   போன்றன  (பலப்பரீட்சையாகி) களம் புகுந்து விளையாடுகின்றன.

இலங்கை தென்னாசியாவில் கேந்திர மையத்தில் அமைந்திருப்பது, எதிர்நிலைச் சக்திகளின் இருப்பை அதிதரிப்பதற்கான – முக்கிய காரணியாகும்.

கடந்த 400ஆண்டுகளுக்கு மேலாக, இலங்கை அமெரிக்க – மேற்குலகின் செல்லப்பிள்ளையே! மேற்குலகம் இலங்கையில் ஏகாதிபத்தியமாக, காலனித்துவமாக, நவகாலனித்துவமாகவும் செயற்பட்டது. மகிந்தாவின் அண்மைக்கால அரசியல் செயற்பாடுகளால், சில ஆசிய நாடுகளின் (சீன – இந்திய – பாகிஸ்தான்) கூட்டால் அமெரிக்க மேற்குலகத்தை ஓரம் கட்டிவிட்டது.

இவ்வோரத்தில் இருந்து மையத்திற்கு வரவும், தன் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை செயற்பட வைக்கவும், மேற்குலகம் துடியாத் துடிக்கின்றது. ஆசிய ஆதிக்கத்தை எப்படி தடுப்பது என்பதில், தன் காய்களை நகர்த்துகின்றது. இதற்கு ஐனாதிபதித் தேர்தலும் பொன்சேகாவும் காய்களாகியுளள்னர்.  உலகமயமாதலின் திட்டமிட்ட அரசியல் பொருளியல் நோக்கு, முன்றாம் உலக நாடுகளை நோக்கியே குவிமையம் கொள்ள வைத்துள்ளது. இது அந்நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்து, அந்நாட்டு மக்களை ஏழைகளாக்குகின்றது. இன-மத-மொழி-வாரியாக மக்களை மோதவைத்து, அந்நாடுகளை அமைதியற்ற சூனியப் பிரதேசங்கள் ஆக்குகின்றது. இதுவே இலங்கையிலும் நடைபெற்றுள்ளது. இதுவே தேர்தலின் பின்னாலும் தொடரும்.

இது ஓர் புறமிருக்க மறுபுறத்தில் தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலை எப்படி அணுகுவது என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இவை தேர்தல் பகிஸ்கரிப்பு, வாக்குச் சீட்டுக்களை செல்லுபடி அற்றதாக்குவது, என்பதில் இருந்து ஓர் பொது வேட்பானரை நிறுத்தவது வரை செல்கின்றது.

முன்றாவது ஓர் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ்மக்கள் வாக்குகள் ஒன்றிணைக்கப்பட்டால், முதன்மை வேட்பாளர்கள் 50வீதத்திற்கு குறைவான வாக்குகள் பெறுவர்;. இதனால் யாரும் ஐனாதிபதியாகும் வாய்ப்பு ஏற்படாது. இந்நிலை தேர்தலை இரண்டாவது வாக்கெடுப்பிற்கு இட்டுச்செல்லும். இது அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.  இது தமிழ்மக்களின் தனித்தன்மையை அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துணர்த்தும் என்கின்றனர்.

இதை தமிழ்த்தேசியவாதிகள், குறிப்பாக கூட்டமைப்பினர் கணக்கில் கொண்டதாக இல்லை. இவர்கள் வழமைபோல் சந்தர்ப்பவாத அரசியலையே தொடர்கின்றனர். கூட்டமைப்பில் இருந்து ஓர் வேட்பாளரையோ, அல்லது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டையோ, நிராகரித்N;த விட்டனர். பொத்தாம் பொதுவாக தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவிற்கே வந்துள்ளனர்.

இதில் இவர்கள் உள்நோக்குடனேயே (கெட்டித்தன அரசியல்) செயற்படுகின்றனர். இவ் உள்நோக்கம் பொன்சேகாவை வெல்லவைப்பதே. இதை பகிரங்கமாக சொன்னால், தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட வேண்டிய நிலையே வரும்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை, சிங்களப் பேரிpனவாத வெறியில், இன அடக்குமுறையில், சுயநிர்னய உரிமை மறுப்பில், மகிந்தாவும் – பொன்சேகாவும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே. இவ்வருடத்தின் மாபெரும் மனிதப் படுகொலைகளையே செய்தவர்கள், தமிழ்மக்களை பற்பல சித்திரவதை சிறைக் கூடங்களில் அடைத்தவர்;கள். சர்வதேச சட்டங்களை, மனித உரிpமைகளை மீறி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் – யுவதிகளை  (போராளிகள்) கொன்றொழித்தவர்கள். மொத்;தத்தில் இருவரும் பாசிச சர்வாதிகாரிகளே.

இந்நிலையில் கூட்டமைப்பின் தேர்தல் முடிவு இவ்விரு சர்வாதிகாரிகளில் ஒருவரையே வெல்ல வைக்கும். இதில் இவர்கள் பொன்சேகாவின் வெற்றியையே உள்ளுர விரும்புகின்றனர்;. அத்துடன் அவர்களின் சர்வதேச கூட்டாளிகளும்; பொன்சேகாவையே மையப்படுத்துகின்றனர். கடந்த காலங்களிலும் இவர்களின் அரசியல் அமெரிக்க மேற்குலகம் சார்ந்த அடிமை அரசியலே.

தமிழ்த்தேசியம் கடந்த 60வருடங்களுக்கு மேலாக, தேசியம் சர்வதேசியம், தேச-கால-வர்த்தமானம் என்பவகைளை கணக்கில் எடுத்து, அரசியல் – அரசியல் போராட்டங்களை நடாத்தவில்லை. நண்பர்களை எதிரிகளாக்கி, எதிரிகளை நண்பர்களாக்கியதில், தமிழ் மக்கள் இன்று அரசியல் தலைமையற்ற அநாதைகள் ஆகியுள்ளனர். இருந்தும்  கூட்டமைப்பினர் கடந்தகால அடிமை அரசியலையே தொடர்கின்றனர்;

எனவே இவர்களின் உள்ளார்ந்த  கெட்டித்தன அரசியல், சிலவேளை இவர்;கள் உள்ளுர விரும்பும்  பொன்சேகாவை வெல்லவைக்க உதவலாம். ஆனால் பொன்சேகா வென்றால் அது சிங்கள மக்களுகளின் இனவாத நலனுக்கும், முரண்பட்ட எகாதிபத்திய நலனுக்கு எற்ப ஒரு மாற்றாக அமையும். தமிழ்மக்களுக்கு மகிந்தாவின் பேரினவாத ஆட்சியின் தொடராகத் தொடரும்.

அகிலன்

14.12.2009