Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வு

இனவொடுக்குமுறையும் பேரினவாதமும் தலைவிரித்தாடும் எம் தேசத்தில் இனவாதிகளையும் ஒடுக்குமுறையாளர்களையும் தோற்கடிக்க இன, மத பேதமின்றி மக்களை அணித்திரட்டி போராட புறப்பட்டிருக்கும் சமவுரிமை இயக்கத்தினருடன் கைகோர்த்து சமவுரிமையை வென்றெடுக்க போராடிட விடுக்கும் அறைகூவல் இது .

எதிர்வரும் 27 ம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

சமத்துவமின்மையை நிர்மாணித்த மூலகாரணிகளை தகர்த்தெறியக் கூடிய புதிய சமூக முறையொன்றின் மூலம் மாத்திரமே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களால் தமது உரிமைகளை உண்மையாகவே பெற்றுக்கொள்ள முடியும். அப்படியான பரந்த போராட்டத்துக்குள் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு கட்டி எழுப்பப்படும் சம உரிமை இயக்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த நிகழ்வின் நேரடி இணைய ஒளிபரப்பினை www.flsocialistparty.com தளத்தில் காணவும்.


-சம உரிமை இயக்கம்-