Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒன்றுபடுவோம் உரிமையை வெல்வோம் - சம உரிமை இயக்கம்

 

alt

சம உரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளார் ஜுட் பர்னாந்து புள்ளே தனது உரையில் இந்த நாட்டு குடிமக்களை சிங்களவர்தமிழர்முஸ்லீம்கள் என்று பிரித்து வைத்து ஆள்வதே இவ்வளவு காலமும் இந்த நாட்டை ஆண்ட மற்றும் ஆளும் அரசாங்கங்களின் நோக்கமாக இருக்கிறது. 

 

altஆகவே மக்களைப் பிரித்து அவர்களது உரிமைகளை மறுத்து தமதும்  தமது வர்க்கத்தினதும் உல்லாச வாழ்க்கைக்காக  மக்களின் ஒற்றுமையை இல்லாமலாக்கிய இந்த நவ தாராளமய முதலாளித்துவ கொள்கையை தோற்கடிக்க வேண்டுமாயிருந்தால் இந்த நாட்டு மக்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்று சேர வேண்டும் அதனால் மாத்திரமே சம உரிமையையும் பெற்றுக் கொள்ள முடியும்.ஆகவே இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சம உரிமை இயக்கம் தோளோடு தோள் நின்று உழைக்க தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளார்  திரு கிருபாகரன்:

இன்று இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கிய காரனம் 1948 போலி சுதந்திரத்திற்குப் பின்னர்இந்த நாட்டை ஆண்ட அனைத்து கட்சிகளும்  கையாண்ட பிரிவினைவாதம்தான் காரணம். சிங்களளர் தமிழர் முஸ்லிம் என்று மக்களை வித்தியாசமாக பார்க்கும் விதத்தில் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு கருத்தியலை உருவாக்கி தமது அரசியல் சாம்ராஜ்ஜியத்தை உறுதியாக்கிக் கொள்ள மாறி மாறி ஆட்சி செய்த முதலாளித்துவ அதிகார வர்க்கம் செயற்பட்டு வருகிறது. அவர்களது அரசியல் தந்திரம்தான் மக்களை பிரித்து ஆள்வது. அந்தத் தந்திர பொறிக்குள் நாம் சிக்கியமைதான் 30 வருடகாலம் நீடித்த altஆயிரக்கணக்கான சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை காவு கொடுத்த யுத்தம். அவன் தமிழன் அவன் சிங்களவன்  அவன் முஸ்லிம் என்று மனிதர்களை ஏன் நாங்கள் பிரிக்க வேண்டும்? இதனால் இலாபமடையப் போவது யார்? எமது உரிமைகள் பறிக்கப்பட்டது யாரால் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவே இன்று ஆரம்பிக்கப்பட்ட சம உரிமை இயக்கமானது  அனைத்து மக்களினதும் சம உரிமைகளுக்காகப் பாடுபடுவதோடு இன மத மொழி வேறுபாட்டால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களை ஒன்று சேர்த்து மக்களின் சம உரிமைக்காக நிச்சயம் போராடும் எனவும் குறிப்பிட்டார்.

இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளார் ரவீந்திர முதலிகே உரையாற்றுகையில் .....

உரிமைகள் மறுக்கப்பட்டு மக்களை இன மத மொழி மற்றும் பிரதேச பேதங்களால் பிரித்து ஒருவரையொருவர்சாகடித்துக் கொள்ளும் நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டனர். உரிமை மறுக்கப்பட்ட மக்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் போது இனவாதச் சாயம் பூசப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுவதுதான். ஆகவே இலங்கை மக்களாகிய நாம் மறுக்கப்பட்ட உரிமைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து உரிமைகளுக்காக போராட வேண்டுமென நேற்று நடைபெற்ற சம உரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில்  அதன் ஒருங்கிணைப்பாளார் ரவீந்திர முதலிகே மேற்கண்டவாறு கூறினார்.

alt

சம உரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு நூலக கேட்போர்கூடத்தில் நேற்று (27) நடை பெற்றது. இந்த நிகழ்வில் தொடாந்து உரையாற்றிய அவர்30 வருடகாலமாக இந்த நாட்டில் நீண்டிருந்த யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. ஆனாலும் உரிமை கேட்டு மக்கள் போராடும் யுத்தம் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. ஒரு புறம் இலவசக் கல்விக்கான உரிமை மறுக்கப்படுபதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதோடு வடபுல மக்களின் வாழும் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

கிழக்கு மாகாணத்தின் தேர்தல் முடிந்து விட்டபோதிலும் சலசலப்பு இன்னும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.தேர்தல் களத்தில் இனவாதம் மேடையேற்றப்பட்டு நன்றாகவே ஏலம் போடப்பட்டது. கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஷுக்கு வாக்களிக்குமாறு கேட்டு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டது. தமிழரொருவரை முதலமைச்சராக்க வேண்டும் அதற்காக தமிழர் கூட்டணியின் தமிழ் வேட்பாளருக்கே வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களிடம் கேட்டது.  சப்ரகமுவ மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் இனவாதம் நன்றாகவே வேலை செய்தது.  சப்ரகமுவ மாகாணத்திற்கு இரண்டு தமிழ் வேட்பாளர்களை பெற்றுத் தருமாறு பிரிந்திருந்த தமிழ் கட்சிகளெல்லாம் ஒன்றசேர்ந்து தனியாக இனவாதத்தை தூண்டி வாக்கு வேட்டையில் இறங்கியது. அனுராதபுரம் மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கும்இனவாதம் நன்றாகவே வேலை செய்தது. மனிதநேயத்தை படுகுழியில் தள்ளும் ஒரு ஆயுதம்தான் இனாவாதம். ஆகவே இனவாதத்தையும் அது எந்த இனவாதமா இருந்தாலும் மதவாதத்தையும் அது எந்த மதமாக இருந்தாலும்  அதனை நாம் தோற்கடிக்க வேண்டும். இன மத மொழி வேறுபாடுகளைக்காட்டி மக்களை பிரித்து அவர்களுடைய உரிமைகளை பறித்து குரோதத்தை வளர்க்கும் அரசியலுக்கு முடிவுகட்டுவதாயிருந்தால் இலங்கை மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேராட முன்வர வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டுமாயிருந்தால் நாம் போராடித்தான் ஆகவேண்டும் .அந்தப் போராட்டம் வெற்றி பெரும் நாளில் இந்த நாட்டில் இனவாதத்திற்கு வேலை இருக்காது. மதவாதத்திற்கு வேலையிருக்காது மொழிக்கு சமவுரிமை கிடைத்து விட்டால் இங்கு மொழியை வைத்து சிண்டு முடிக்கும் வேலைக்கு இடமிருக்காது எனவும் குறிப்பிட்டார்.