Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாசிச அரசிற்கு எதிராக போராட நாட்டின் சகல மக்களையும் அழைக்கின்றோம்! பத்திரிகையாளர் மாநாட்டில் ரவீந்திர முதலிகே அழைப்பு!

சமவுரிமை இயக்கத்தின் பத்திரிகையாளர் மநாடு பகுதி 1

தெற்கில் இருக்கும் சிங்களவர்கள் அனுபவிக்கும் உரிமைகள் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இல்லை.அது அரச பாதுகாப்பு படையினரால் பறிக்கப்பட்டுள்ளது.வடக்கில் உரிமை கேட்டு போராடுபவர்களுக்கு ஒயில் வீசப்படுகின்றது, கடத்தப்படுகின்றார்கள், கொலைசெய்யப்படுகின்றார்கள். இவை அனைத்தையும் அரச படைகளே செய்து கொண்டிருக்கின்றது. குடும்பங்களை புகைப்படம் எடுக்கும் திட்டத்தை உலகில் ஜேர்மனியில் உள்ள நாசிகளே முதலில் பாவித்தார்கள். அதே மிலேச்சத்தனமான நடவடிக்கையையே ராஜபக்ச அரசாங்கம் பயன் படுத்துகின்றது. நீங்கள் உரிமை கேட்டு பேச வேண்டாம் மீறி பேசினால் உங்களை கொலைசெய்வோம்.

 

இதுவே ராஜபக்ச அரசாங்கத்தின் பதில். அந்த அடிப்டையில் வவுனியாவில் நிமலரூபன் இடெல்ரொக்சன் ஆகியோர் சிறைச்சாலைக்குல் வைத்து பயங்கர வாதத்தை வளர்க்க ஏற்பாடு செய்கின்றார்கள் என்று கூறி வதை செய்து கொலை செய்யப்பட்டார்கள். வெலிக்கடை சிறைச்சாலையில் தமக்கு எதிரானவர்களை பிடித்து இழுத்து வந்து தலையில் சுட்டு கொலை செய்தார்கள். மேற்கண்டவாறு; கொழும்பில் இன்று நடைபெற்ற சமஉரிமை இயக்கத்தின் பத்திரிகையாளர் மாநாட்டில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறினர்.

மேலும் நாட்டின் சமகால அரசியல் நிலைபற்றி குறிப்பிடுகையில் தெற்கு மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் தமிழ் மக்களும் அனுபவிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ராஜபக்ச அரசாங்கம் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு உரிமைகளை கொடுக்காது. அதற்கு எதிராக அடக்கு முறையையே பிரயோகிக்கின்றது. இதை தீர்க்க வேண்டுமானால் பொருலாதாரம் உற்பட மற்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். தலையில் துவக்கை வைத்து பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை காண முடியாது.அரசாங்கத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும். இதற்காக தொழிலாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மீன்பிடியாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து போராடிட சம உரிமை இயக்கம் உங்கள் அனைவரையும் அழைக்கிறது.

பத்திரிகையாளர்களின் வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில்,

முப்பது வருட யுத்தத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் விசேட பிரச்சினைக்கு முகம் கொடுத்தனர். அதே போன்று நாட்டின் நான்கு பக்கங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்இஅரசாங்கம் அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொண்டு தெற்கில் பாலங்கள்இபாதைகள் மற்றும் விலையாட்டு மைதானங்களை நிர்மாணிக்கின்றது. இது அரசாங்கத்தின் போலி அபிவிருத்தி அதேபோல் மட்டக்களப்பிலும் அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு அங்கேயும் பாதைகள் அகலமாக்கப்படுகின்றன. மற்றும் ஆங்காங்கே கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.அரசாங்கம் இவைகளைச் செய்து மக்களுக்கு இதுதான் அபிவிருத்தி என்று காட்டுகின்றது.வடக்கு கிழக்கில் வசிக்கும் முஸ்லிம் தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றார்கள். அதே போன்று தென் பகுதி மக்களும் பாரிய கஸ்ட்டங்களை எதிர் நோக்குகின்றார்கள்.

லலித் குகன் போன்ற மனிதாபிமானிகள் வடக்கிள் வைத்து அரச கூலிப்படையினரால் கடத்தப்படுகின்றார்கள். வட கிழக்கில் யுத்தம் முடிவுற்றதாகக் கூறப்படும் இந்த நிலைமையிலும் விசேட சாவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தங்களது இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றிய பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவ காடையர்களால் அச்சுறுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் பத்திரிகை நிருபரும் அரச இராணுவத்தினரால். தாக்கப்ட்டுள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.கைது செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களை 40 மணித்தியாலம் தடுப்புக்காவலில் வைத்த பின்பும் அவர்களை நீதி மண்றத்தில் ஆஜர் படுத்தவில்லை. இப்போது நண்றாவே விளங்குகின்றது மகிந்தவின் பாசிச ஆட்சி. மட்டக்களப்பு கல்முனை வீதியில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினர் தமிழ் மக்களை குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து அவர்களின் வீட்டு சுவர்களில் தொங்க விட்டிருப்பதுடன் இன்னொரு பிரதியை இராணுவத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு பாதுகாப்பு படையினரால் விசேட இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக புPசுளு தொழில் நுற்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது