Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"இலங்கையர்" என்ற அடையாளத்தை ஏற்க மறுப்பு

சம உரிமை இயக்கதின் தலைவர்கள் மீது இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதல் மற்றும் கழிவு எண்ணெய் தாக்குதல் சம்பந்தமாக முறையிட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அதன் தலைவர் ரவீந்திர முதலிகேயின் தனித்துவ அடையாளம் குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிய வருகிறது.

சம உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே இது தொடர்பாக கூறும்போது, தனது முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர் இன அடையாளம் 'சிங்கள - பௌத்த" என குறிப்பிடப்பட்டிருந்தாகவும் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து "இலங்கையர்" என குறிப்பிடுமாறு கூறியபோது, யாழ்ப்பாண போலிஸ் நிலைய தலைமை அதிகாரி தன்னை தூஷன வார்த்தைகளால் அச்சுறுத்தியதாகக் கூறினார்.

"சிங்கள - பௌத்த" என குறிப்பிடுவதை மறுத்தால் அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர் என்ற அடிப்படையில் கைது செய்ய நேரிடுமெனவும் போலிஸ் அதிகாரி கடுமையாக எச்சரித்துள்ளார். அதன்போது அங்கிருந்த சம உரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் தமது தேசிய அடையாள அட்டையை காட்டி தாங்கள் இலங்கையர்கள் என்று கூறிய போதிலும் அதனை அடையாளமாக ஏற்றுக் கொள்வதை பொலிஸார் எதிர்த்துள்ளனர். 

"இலங்கையில் சிங்கள, தமிழ மக்களுக்கு மத்தியில் அசமத்துவத்தையும் குரோதத்தையும் வளர்ப்பதற்காக ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளில் இதுவும் ஒரு உதூரணமாகும்" என குறிப்பிட்ட சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இச்சம்பவத்தின் போது தனது சட்டையை பிடித்து அச்சுறுத்தியதாகவும்  இது குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறையிடப்போவதாகவும் கூறினார்.