Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்துலக பெண்கள் தின அறை கூவல்

ஒடுக்கப்பட்ட பெண்களே,

அடிமைப்படுத்தலும், அடிமைப்பட்டிருத்தலும் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதிகள். அடிமைப்படு, அடிமைபட்டிரு இதுவே முதலாளித்துவத்தின் தாரக மந்திரம். முதலாளித்துவத்திற்கு அடிமைப்பட்ட உழைக்கும் வர்க்க சமூகத்தில் பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்கின்றனர் ஆண்கள். பழமையான கலாசாரம் பாரம்பரியம் என்பவற்றை எல்லாம் பெண்களை பின்பற்ற நிர்பந்திக்கும் ஆண்கள் தாங்கள் மட்டும் காலத்திற்கு ஏற்ப புதியனவ்ற்றிற்கு மாறி விடுகின்றனர். ஒரு நாளில் வன்முறைக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாளும் பாலியல் சுரண்டலை மேற்கொள்ள நேர், எதிர் வழிகளில் திட்டமிடும் ஆண்களின் எண்ணிக்கையே பாரதூரமான விடயம். ஒரு சிலரை தண்டித்து ஒட்டு மொத்த சமூகத்தின் ஊனத்தை களைந்திட முடியாது. மனிதநேயம் மரணித்த மனித சமூகத்திற்கு பதிலாக அன்பு மலரும் சமூகத்தை அமைத்திடுவதே ஒரே வழியாகும்.

'இனிய பெண்கள் தின வாழ்த்துகள்" என்பது, இன்று போலவே என்றும் அடிமையாய் இரு எனக் கூறும் நயவஞ்சகமே ஆகும். இவ் நயவஞ்சக வாழ்த்துக்களை பெண்கள் புறகணிக்க வேண்டும். பெண்மை என்பதே ஒரு பேதைமை தான். இதன் அர்த்தம் அடிமையாய் இருத்தலே அழகு என்பதாகும். இந்த அடிமைத்தனம் மறுதலிக்கப்படல் வேண்டும். பெண்கள் அடிமையாய் இருப்பதினை எற்றுக்கொள்ள கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும். அந்த சம உரிமை அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட இடத்திலே சாத்தியம். ஆகவே அன்பு மலரும் சமூகத்தை உருவாக்கிட, அடிமைதனத்தை ஒழித்திட அறைகூவல் விடுப்பதே இன்றைய அனைத்துலக பெண்கள் தினத்தில் பொறுத்தமானதாக இருக்கும். அந்த போராட்டத்திற்கு எனது ஆதரவுகள் என்றும்.

-பழ .றிச்சர்ட்