Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

மாற்றத்தின் முன்மொழிவு...

ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிலிருந்து வேறுபட்டவர்கள். அவ்வேறுபாடுகள் அப்படியே இருக்க எல்லோருக்கும் தெரிந்த பொது வார்த்தையொன்று இருக்கிறது. அதுதான் எல்லோரும் மனிதர்கள் என்பது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கேயான நிலைத்தலொன்று இருக்கிறது. அதற்கு வாழ்க்கை என்று சொல்கிறோம். அந்த வாழ்க்கையில் மனிதர்கள் பலவற்றை செய்கின்றனர். சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், இனப்பெருக்கம் செய்கிறார்கள். மாத்திரமல்ல, அதற்காக அநேக வேலைகளை செய்கிறார்கள். எந்தவொரு மனிதனிடமும் தான் யாரென்று கேட்டால், தான் செய்யும் வேலையை பொறுத்தே அவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.

மனிதர்கள் வைத்தியர்கள், எஞ்சினியரகள், ஆசிரியரகள், தத்துவஞானிகள், ஊடகவியலாளர், விஞ்ஞானிகள், முகாமையாளர்கள், அரசியல்வாதிகள் என இப்படித்தான சொல்வார்கள். உதாரணத்திற்கு ஒரு ஆசிரியரை எடுத்துக் கொண்டால், ஆசிரியர் என்று ஒருவர் இருப்பது மாணவர்களால். வைத்தியர்கள் நிலைத்திருப்பது நோயாளிகளால். கலைஞர்கள் நிலைத்திருப்பது இரசிகர்களால். பொதுவாக எடுத்துக் கொண்டால் மனிதன் நிலைத்திருப்பது சமூகத்தினால்.

அதேபோன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்காக மேற்கொள்ளும் தலையீடுகளினால் மாணவர்களின் கல்வி தீர்மானிக்கப்படுகிறது. கலைஞர்களின் ஆக்கங்களினால் இரசிப்புத் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. வைத்தியர்கள் நோயாளர் விடயத்திதல் செய்யும் தலையீடுகளால் நோயாளர்களின் சுகாதாரம் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக எடுத்துக் கொண்டால் மனிதர்களால் சமூகத்திற்கு செய்யப்படும் தலையீடுகளினால் சமூகத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

நாங்கள் வாழும் சமூகத்தில் இவ்வாறாக வியாக்கியானம் செய்யப்பட்ட மனிதன்தான் கால்மாக்ஸ். நிலைமைகளினால் மனிதன் நிர்மாணிக்கப்படுவதாகவும், மனிதர்களால் நிலைமைகள் நிர்மாணிக்கப்படுவதாகவும அவர் கூறினார்.

எமது சமூகத்தின் இன்றைய நிலை என்ன? நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 321,472 ரூபா கடன்காரனாக்கப்பட்டிருக்கிறான். கடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் 18777 சிறுவர் துஸ்பிரயோகங்கள் நடந்துள்ளன. இலங்கையின் பிரதான வருமான மார்க்கமான வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்களில் இந்த வருடம் முதல் 10 மாதத்தில் 397 பேர் பிணப்பெட்டிகளில் இலங்கைக்கு திரும்பி வந்துள்ளனர். இப்படியாக, ஒருபுறம் மனிதர்கள் கடன்காரர்களாக்கப்பட்டுள்ளனர், பிள்ளைகளால் பாதையில் செல்ல முடியாது. வாழ்வதற்காக தொழிலொன்றைத் தேடிக்கொள்வதற்கு உயிரைப் பணயம் வைக்க வேண்டியுள்ளது. இவற்றுக்கு மத்தியில எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருக்கமாறுதான் எல்லோரும் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு மத்தியில மனிதர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வேண்டிய கட்டத்தைத்தான் நாங்கள் கடந்துக் கொண்டிருக்கிறோம். இனி, இந்த நிலையை எப்படி மாற்றுவது என்பது குறிந்து கருத்தாடலொன்று வரவேண்டும். உலக வரலாற்றில் இதைப் பற்றி நடந்த கருத்தாடலில் மாக்ஸ் கூறியவை, லெனின் செய்தவை, ரஸ்யப் புரட்சி, சோவியத் ஏன் வீழ்ச்சியடைந்தது, அதன் பின்னர் உலகில் அது குறித்து நடந்த உரையாடல்கள் எப்படிப்பட்டவை? குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து இந்த கருத்தாடலை ஆரம்பிக்க முடியுமென நாங்கள் நினைத்தோம். அதற்காக புரட்சிவாத மாணவர் அமைப்பு என்ற வகையில் நாங்கள் இந்த மாதம் 11ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஊளுசு மண்டபத்தில் 'மேற்கத்திய மாக்ஸியம் குறித்து ஆய்வு' என்ற பெயரில் குபரி என்டரஷன் என்ற எழுத்தாளரின் 'considerations on western marxism' என்ற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை வெளியிடவிருக்கின்றோம். இதற்கு சமாந்திரமாக புரட்சிவாத மாணவர் அமைப்பின் இணையத்தளத்தையும் (www.rsulanka.org)ஆரம்பிக்க விருக்கிறோம். அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எல்லோரையும் அழைக்கின்றோம்.

நாங்கள் வாழும் சமூகத்தைப் பற்றி புதிதாக சிந்திப்போம். இல்லாவிட்டால், இதைப் பற்றி சிந்திக்காதவர்தகளுக்கு சிந்திக்குமாறு வேண்டுவோம். சிந்திக்கும் நாங்கள் செயற்படத் துவங்குவோம். செயற்படும் நாங்கள் ஒன்றுபடுவோம். இத்தருணத்தில் எங்களது அரசியல் அதுதான். நாங்கள் நிலைமைகளுக்குள் பலியாகி ஒப்பாரி வைப்பதற்குப் பதிலாக நிலைமைகளை மாற்றும் மனிதர்களாவோம்.

-புரட்சிவாத மாணவர் அமைப்பு