Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இனப்பிரச்சனைக்கான தீர்வும் - சாத்தியப்பாடு பற்றி சமவுரிமை இயக்கம்

அரசு மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பது தொடர்பாக அதிருப்தியும், அவநம்பிக்கையும் தொடருகின்றது. மறுபக்கம் அலட்சியம், புறக்கணிப்பு, அக்கறையின்மை காணப்படுகின்றது.

தனித்தனியாக போராடுவதோ, அதிலிருந்து ஒதுங்கி இருப்பதோ தீர்வுகளை காண்பதற்கான பாதையுமில்லை.

இதிலிருந்து மீள்வதற்கும், தீர்வுகளை காண்பதற்குமான வழி என்ன? மக்கள் இனம் மொழி மதம் சாதி கடந்து தமக்கு இடையில் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலமே, தமக்கு இடையிலான இனப் பிரச்சiனைக்குத் தீர்வு காணமுடியும். இது தான் ஒரேயொரு  வழி.

மக்கள் தமக்கு இடையில் ஒன்றிணைவதற்கான தடையானவற்றை எதிர்ப்பதும், மக்களை பிளக்கின்றவற்றை எதிர்ப்பதன் மூலமே தீர்வுகளைக் காணமுடியும்.

இது தான் சமவுரிமை இயக்கத்தின் நடைமுறையாக இன்று மாறியிருக்கின்றது.