Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை இயக்கத்தின் நோர்வே போராட்டம் (படங்கள்)

நேற்றைய தினம் 03.12.15 அன்று ”சம உாிமை இயக்கத்தின்” நோா்வே கிளையினரால்; இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி நோர்வே பாராளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருந்தது.

நோா்வேயில் முதல் முதலாக இலங்கையின் மூவின மக்களும் கலந்து  கொண்ட அரசின் ஐனநாயக  விரோத செயற்பாடுகளுக்கு எதிரான குரலாக இது அமைந்திருந்தது. மனித உரிமையாளர்கள், ஜனநாயகவாதிகள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் அனைவரும் இலங்கை அரசின் மனித உரிமைகளிற்கு எதிரான பதாகைகளுடன் திரண்டு வந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இலங்கை ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கான தமது கண்டனத்தை ஒன்றுபட்டு தெரிவித்தனர். 

இவ் அணிவகுப்பில்..

"இலங்கை அரசே ..! தருவதாக கூறிய நல்லாட்சி இது தானா..?”

”நீதி விசாரனையின்றி நீண்டகாலமாக தடுத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்.”

”சகல காணாமலாக்கள், கடத்தல்களை வெளிப்படுத்து.”

”அரசியல் கைதிகளின் விடுதலைக்காண போராட்டத்திற்கு தலைமை தாங்கிய குமாா் குணரட்னத்தை விடுதலை செய்.”

என தமிழ், சிங்களம், ஆங்கிலம், நொா்ஸ்க் ஆகிய நான்கு மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளுடன் மிகவும் அமைதியான முறையில் இலங்கை அரசுக்கு தங்களின் எதிா்ப்பினை வெளிக்காட்டியிருந்தாா்கள்.