Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ராஜரட்ட மாணவர் போராட்டம் வெற்றி! ஏழு கோரிக்கைகளுக்கு உடன்பட்டது அரசு! (படங்கள்)

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் சமூக - மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராடும் மாணவர்கள் அரசியல் மற்றும் மனித உரிமைகளைக் கோரியும், கல்வி உரிமைகள் பறிக்கப்படுவது, கல்வியைத் தனியார் மயமாக்குதல், கல்வியைத் தரம் குறைதல் போன்றவைகளை நிறுத்தும் படியும் கோரிப் போராடங்களை நடத்துகின்றனர். இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக, போராடும் மாணவர்களின் தலைவர்கள் 13 பேரது வகுப்பு தடைக்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஏனைய விரிவுரையாளர்களை, மாணவர்கள் தடுத்து வைத்திருந்தனர்.

ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் நிர்வாக கட்டடத்துக்குள் மாணவர்களால் நேற்று (26) மாலை முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சுமார் 300 வரையான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்துள்ளனர். மாணவர்களில் 7 கோரிக்கைகளையும் அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் நிறைவேற்ற சம்மதம் தெரிவித்ததன் அடிபடையிலேயே மாணவர்களின் முற்றுகையும், தடுப்பும் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் கலகம் அடக்கும் பொலிஸாரும் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர். இதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக (27) காலை அறிவிக்கப்பட்டது.