Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

சிறுவர் மீதான அதிகரிக்கும் பாலியல் வன்முறை எதைக் காட்டுகின்றது

இலங்கையில் 4 வருட காலத்திற்குள் சிறுவர் துஸ்பிரயோகம் சார்ந்து 2 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

சமூகமே தன் குழந்தைளைக் குதறுகின்றது என்பதேயே இது எடுத்துக் காட்டுகின்றது. குற்றத்தில் ஈடுபடுபவர்களை மட்டும் குற்றவாளிகளாக குறுக்கிவிட முடியாது. மாறாக சமூகத் தன்மை சிதைந்து வருவதும், தன்னலம் அதிகரித்து வருவதையுயே எடுத்துக் காட்டுகின்றது.

இந்தப் பின்புலத்தில் நுகர்வைத் தூண்ட சந்தை முன்னிறுத்தும் பாலியல் அம்சம் முதன்மை பெறுகின்ற போது, தன்னலம் சார்ந்த பாலியல் வன்முறையாக மாறுகின்றது. அதேநேரம்  முன்பு ஆணாதிக்க குடும்பங்களில் ஆண் கொண்டிருந்த பாலியல் மேலாதிக்கத்துக்கு, பெண் இணங்கிய பாலியல் நடத்தைகள் தகர்கின்ற போது, பலவீனமான குழந்தைகள் மேலான பாலியல் வன்முறையாக இடம் மாறி வருகின்றது.

தனி மனிதனை முன்னிறுத்திய தன்னலம் சார்ந்த சுயநலம் சமூகத்தன்மையை அழிக்கின்ற போது, பாலியல் நடத்தை சார்ந்த குற்றங்களாகவும் பெருகி வருகின்றது.

தனிமனித நடத்தைக்கு பதில் சமூகத்தன்மையைக் கட்டியெழுப்வுவது தான் இதை தடுப்பதற்கான ஒரே தீர்வு.