Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

220 கிலோ தங்கம் எங்கே என்று கேட்கின்றார் சரத் பொன்சேகா

யுத்தம் நடந்த காலத்தில் வங்கி ஒன்றில் இருந்து 220 கிலோ தங்க நகைகள் எடுக்கப்பட்டதாகவும், அதை அரசிடம் ஒப்படைத்ததாகவும் கூறும் சரத்பொன்சேகா, இது எங்கே என்று கேட்கின்றார். சட்டப்படியாக மக்களால் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைளைப் பற்றியவை.

இந்த தங்கத்தை யுத்தப் பின்புலத்தில் உருவான திடீர் பணக்கார கும்பலிடமும், அரசாங்கத்தின் அதிகாரத்தை பங்கு போட்டுள்ளவர்களின் பொக்கற்றுக்குள் தேட வேண்டும்.

ஆனால் சட்டப்படி இதற்கு என்ன நடந்தது என்ற விபரம் தெரியாது. மனித உயிர்களைப் போல் சொத்துகளும் திட்டமிட்டே சூறையாடப்பட்டது.

உண்மையில் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் - பணம், இதைவிட சில ஆயிரம் கோடியாகும். புலிகள் மக்களிடம் இருந்து யுத்தத்தின் இறுதி நாள் வரை தங்கத்தை சூறையாடினர். தங்கம் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் முன் பெறுமதி இழந்திருந்த நிலையில், புலிகளும், புலி சார்ந்த குடுபம்பங்களும் தங்கத்தை வாங்கி குவித்தன.

புலிகளும் - அரசும் திட்டமிட்ட சதிப் பின்புலத்தில் புலிகள் சரணடைந்த போது, தங்கள் பணம் - தங்கத்தை புலிகள் கப்பல் மூலம் எடுத்துச்; செல்ல முற்பட்டனர். இந்தச் சதியில் புலிகள் கொல்லப்பட, சொத்துகள் யுத்தத்தை நடத்திய கும்பலின் தனிப்பட்ட கொள்ளையாக மாறியது. இந்த தங்கம்-பணம் கூட சரணடைந்த புலிகளை கொல்ல மற்றொரு காரணியாக இருந்தது.

யுத்தக் குற்றம் மட்டுமல்ல, யுத்தப் பின்புலத்தில் திட்டமிட்ட சொத்துகள் மீதான  சூறையாடல்களையும் விசாரணைக்குள்ளாக்க வேண்டும்.