Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

லண்டன் இலங்கை தூதராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்!

மகிந்த பாசிச அரசால் மறுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் மக்களிற்கு உறுதி செய்வதாக கூறி அமோக ஆதரவுடன் புதிய மைத்திரி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தது. கூடவே நூறு நாள் திட்டம் ஒன்றினையும் அறிவித்திருந்தது. ஆனால் நடைமுறையில் மகிந்த அரசைப் போலவே இந்த அரசும் செயற்பட ஆரம்பித்துள்ளது தான் உண்மை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி முப்படையினரையும் தலைநகர் கொழும்பு, வடகிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்தலுக்கு எதிராக லண்டன் இலங்கை தூதராலயத்தின் முன்பாக எதிர்வரும் சனி (7/02/2015) அன்று பிற்பகல் 1:00 மணி முதல் 3: 00 மணி வரையும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழவுள்ளது. ஜனநாயகத்தை நேசிக்கின்ற அனைவரையும் இதில் கலந்து கொண்டு இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

1. அரசியல் கைதிகளை விடுதலை செய்!


2. காணாமலாக்கல்களை, கடத்தல்களை வெளிப்படுத்து!


3. குமார் குணரத்தினம் உட்பட நாடுகடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே !

4. அடக்குமுறை காரணமாக புலம் பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!

 

Date: 7th Saturday Feb 2015

Time: 1:00pm - 3:00 pm

Place: Sri Lanka High Commission

No. 13, Hyde Park Gardens

London W2 2LU


Nearest Tube Stations – Lancaster Gate