Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் சுதந்திர பெண்கள் அமைப்பின் போராட்டம் (படங்கள்)

இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற பாலியல் வன்முறைகளுக்கு எதிராக இன- மத பேதங்களை கடந்து சகல பெண்களையும், ஆண்களையும் போராட அறைகூவல் விடுத்து இன்று கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் விழிப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.

நாங்கள் வாழும் இலங்கையில் மட்டுமல்ல அயல்நாடான இந்தியாவிலும், உலகின் பல்வேறு இடங்களிலும் பெண்கள் பலவிதமான பாலியல் வன் கொடுமைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது எமது நாட்டிலும் அயல் நாடான இந்தியாலும் எங்களுக்கு அனுபவமாக கிடைப்பது மிகவும் பயங்கரமான, சகித்துக் கொள்ள முடியாத செயல்களாகும். அதனது முடிவு கடும் கஸ்டமான மரணமாகும். இன்று வித்தியாவின் மரணத்தில் எங்களுக்கு காணக்கிடைப்பது அதில் ஒரு விடயம் மாத்திரமே.

இந்தக் காலககட்டத்தில் வடக்கில் பாலியல் வன் கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் பெண்களின் விடயத்தில் புதிய கட்டம் ஒன்று ஆரம்பமாகிறது. அதேபோலவே இதுதான் இலங்கையின் பாலியல் பலாத்கார வாழ்விற்குள் எங்கள் யாருக்கும் விளங்கிக் கொள்ள முடியாத பிரச்சினையாகும். அன்று கொடகெதன என்னுமிடத்தில் வசித்த சகோதரிகள், கிருளப்பனையில் கொலைசெய்யப்பட்ட சிறுமி, வடக்கில் சாரன்யா, கிரிசாந்தி குமாரசாமி போன்று இன்னும் பலர் உள்ளார்கள். இந்தக்கதைக்கு சிங்கள, தமிழ் பேதம் இல்லை. இவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு முகம் கொடுக்கும் உண்மை நிலைமை அது, நாளை உங்களது மகளுக்கும், சகோதரிக்கும், அம்மாவுக்கும் நடக்க முடியாது என்று எமக்கு கூற முடியாது.

வித்தியாவின் சம்பவம் வடக்கில் துக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல அனைவரினதும் எதிர்ப்புகளும் இப்பொழுது முடிவடைந்து விட்டது. அது எவ்வளவு தூரம் எங்களது இதயத்தை பாதித்தது என்ற கேள்வியை நாங்கள் எங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது கவலையடைந்த இலங்கையில் உள்ள பலர் இன்று வித்தியாவின் பிரச்சினையில் மௌனமாக இருப்பது ஏன் என்பதில் எங்களுக்கு பிரச்சினை உள்ளது. சிலநேரங்களில் ஒருவருக்கு யோசிக்க முடியும் அது வடக்கில் உள்ள இன்னொரு பிரச்சினை என்று ஆனால் நாங்கள் சொல்வது இது எல்லையற்ற நாம் பேசும் மொழிகளுக்கு அப்பால் சென்ற அனைத்து பெண்களினதும் பாலியல் வன்கொடுமை பிரச்சினை இதனால் இது எங்களுடைய பிரச்சினையாகும்.

அது போலவே இலங்கையில் உள்ள ஊடகங்களைப்போன்று தெற்கிலும் வடக்கிலும் அரசியல்வாதிகளின் செயற்பாடு பற்றி நாம் கதைக்க வேண்டும்.

மகிந்த சொல்கிறார் வடக்கில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்ததும் பொலிஸ் நிலையத்திற்கு கல் எறிந்ததும் அச்சமூட்டும் சம்பவங்கள் மீண்டும் இப்படியான ஆயத்தம் எதற்காக என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று, அது போலவே டலஸ் சொல்கின்றார் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தவர்கள் மத்தியில் பழைய விடுதலை புலி உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று, வித்தியாவின் மரணத்தின் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல சாதகமான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்று, வீரவன்சவிற்கு இது நல்லாட்சியில் உள்ள பிரச்சினையாம். அது போலவே எஸ்.பி. சொல்கிறார் இது அப்பாவி தமிழ் பெண் தமிழ் இளைஞர்கள் ஆறு பேரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளால், நல்ல வேலை அங்கு சிங்களவர்கள் யாரும் இருக்கவில்லை என்று கூறியூள்ளார். இந்த கதைகளுக்குள் எமக்கு விளங்கக் கூடியதாக இருப்பது அரசியல்வாதிகள் ஒவ்வொரு நாளும் செய்வது, நாட்டில் உள்ள எந்தவொரு பிரச்சினையையும் தங்களது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவார்கள். அதற்கு சிங்கள, தமிழ் பேதம் இருக்கவில்லை இருக்கப்போவதும் இல்லை.

ரோசி சேனாநாயக்க சுதந்திர சதுக்கத்திற்கு சென்று மெழுகுவர்த்தி கொழுத்தினாலும் இந்த பிரச்சினைக்கு விடை கிடைக்கப் போவதில்லை என்று ரோசிக்கும் ஞாபகமூட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் சொல்வது இப்பொழுது இந்தப் பிரச்சினையை இதுவரையில் பார்க்கப்படாத வேறு கோணத்தில் பாரக்க வேண்டும். இதை நாங்கள் தனிப்பட்ட நபரின் பிரச்சினை என்று எடுப்போமாயின் நாளையும் எங்களுக்கு வித்தியா, சாரன்யா, கொட்டகெதன சகோதரிகள், நிர்பயா போன்றௌர் பாலியல் வன் கொடுமைகளுக்கும், பலாத்காரத்திற்கும் ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இதுதான் அநியாயக்கார இந்த சமூகத்தின் உண்மை நிலை.

இன்று இதற்காக மேற்கொள்ளும் ஆரப்பாட்டத்தை தடுக்க நீதிமன்ற தடைஉத்தரவு பெறப்பட்டுள்ளது. அதுதான் நல்லாட்சி, ஜனநாயகம் தெற்கில் போராட்டம் நடாத்தும் மாணவர்களின் போராட்டத்தை தடை செய்து அவர்களை கைது செய்வது ஆட்சியாளர்களை பாதுகாக்கவே. வேலை செய்யும் மனிதர்களை ஆபத்தில் சிக்கவைக்கும் ஒன்றுக்கும் உதவாத நீதி இது, இன்று அவர்களின் ஜனநாயகத்திற்காக பாதிக்கப்பட் மக்களின் ஜனநாயகத்திற்கு தடை விதிக்கிறார்கள்.

ஆகவே உண்மையான ஜனநாயகத்திற்காகவும், பாதிப்பிற்குள்ளாகும் வடக்கு, தெற்கு; ஆண், பெண்கள் அனைவரும் இந்த சமூக அமைப்பிற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். அதனால் வலுவான போராட்டத்திற்கு அணிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

சுதந்திர பெண்கள் அமைப்பு

Free Women