Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

"போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களிற்கு மரியாதை செலுத்தி வணங்கும் உரிமை பல்கலைக்கழக மாணவர்களிற்கு உண்டு" என முன்னிலை சோஷலிச கட்சி அறிக்கை.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு 24 மணிநேரம்  ஆனபோதும் அவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என முன்னிலை  சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 24 மணித்துயாலத்திற்குள் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டம் எனவும், ஆனால் இம் மாணவர்கள் இதுவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என அக்கட்சி குற்றஞ்  சுமத்தியுள்ளது.

கடந்த 26ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் விளக்கு ஏற்றியமையின் காரணமாக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரம்பிக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களிற்கு மரியாதை செலுத்தி வணங்கும் உரிமை பல்கலைக்கழக மாணவர்களிற்கு உண்டு.

சமூகத்தில் பல்வேறுபட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களிற்கான உரிமைகள்  அவர்களிற்கு வழங்கப்படவேண்டும். எனவே இங்கு மாணவர்களது உரிமை  புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இத்தகையொதொரு காலப்பகுதியில்தான் 30 வருடங்களிற்கு முன்னதாக இலங்கையில் போராட்டம் வெடித்தது.என  முன்னிலை சோஷலிச கட்சி கூறியுள்ளது. 

அந்த அறிக்கை வருமாறு,

இனவாதத்தையோ அடிப்படை வாதத்தையோ தலைக்கனத்தால் கட்டுப்படுத்த முடியாது! மு.சோ.கட்சி

வடக்கிலோ தெற்கிலோ காணப்படும் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுகளினால் மட்டுமே தோற்கடிக்க முடியுமேயல்லாது தான்தோன்றித்தனமான செயல்களினால் ஆகப்போவது ஒன்றுமில்லை, என முன்னிலை சோஷலிஸக் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் கடந்த 30ம் திகதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்ளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வற்புறுத்துகிறது.

அந்த அறிக்கை வருமாறு,

"நான்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்  நவம்பர் 30ம் திகதி இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாளங்கள் கடந்த பின்னரும் அவர்ளை நீதவான் முன்னிலை ஆஜர்படுத்தவில்லை. அவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.

பாதுகாப்புப் படையினர் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்தமையைக் கண்டித்து நடைபெற்ற மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்கள் டுமையாகத் தாக்கப்பட்டனர். நவம்பர் 27ம் திகதி பல்கலைக்கழக விடுதிக்குள்  நடந்த விளக்கேற்றும் நிகழ்வுதான் இதற்குக் காரணமென கூறப்படுகிறது. இது மாவீரர் தினத்துக்காக நடந்த விளக்கேற்றும் நிகழ்வு என அரசாங்கம் கூறுகிறது.

அன்றைய தினம் ஹிந்து மத அனுஷ்டானங்களுக்கமைய விளக்கேற்றும் தினமாக இருந்ததோடு, யுத்தத்தினால் மரணித்த தமது உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றும் உரிமை மாணவர்களுக்கு உண்டு. பொதுவாக எடுத்துக் கொண்டால், சமூகத்தில் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட மக்கள் இருக்கக் கூடும். அந்தக் கருத்துக்களை கருத்தாடல் ரீதியிலல்லாது பலவந்தமாக அடக்க முயற்சிப்பது சமூகத்தில் கிளர்ச்சிகள் தோன்றுவதற்குக் காரணமாக அமையும்.

இவ்வாறாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டமையினால் தான் 30 வருடகால யுத்தம் நாட்டில் கோரத்தாண்டவமாடியது. ஆயுதச் செயற்பாடு குறித்தோ, நடைமுறை சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் குறித்தோ எவ்வித சாட்சியும் இல்லாத நிலையில் விளக்கேற்றல் போன்ற செயல்களை  பாய்ந்து தடுப்பது, கைதுசெய்வது மற்றும் மாணவர் ஆர்ப்பாட்டத்தின் மீது மிருகத்தனமாக தாக்குவது போன்றவை சமூகத்தை மீண்டுமொரு ஆபத்தில் சிக்க வைப்பதற்கு வழிகோலும். 30 வருட யுத்தம் வரை வளர்ச்சி கண்ட அரசியல் நிலைமைகள் ஏற்படுவதற்கு காரணமாயிருந்த யுத்தத்திற்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறவேண்டும். ஆனால், மீண்டும் அப்படியான நிலைமை உருவாவதற்கான நடவடிக்கைகளலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருவது தெரிகிறது. பொதுவாக வடக்கு கிழக்கு மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையும், அந்த அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக பரப்பி வரும் இனவாதப் பிரச்சாரத்தையும் வன்மையாகக் கண்டிக்கும் நாங்கள், கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வற்புறுத்துகின்றோம். வடக்கில் அல்லது கிழக்கில் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் இல்லாதொழிக்க வேண்டுமானால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வுகள் வேண்டும். தான்தோன்றித்தனமான செயல்களால் இல்லாதொழக்க முடியாது என்று நம்பிக்கை வைத்திருக்கும் நாங்கள், தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக முன் வருமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்"