Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்" லண்டன் நிகழ்வு படங்கள்

நேற்றைய தினம் லண்டன் கரோ நகரில் முன்னிலை சோசலிச கட்சியினரால் 87-89 போராட்டத்திற்கு 25 வருடங்கள் நிகழ்வு இடம்பெற்றது. போராட்டத்தில் மரணித்த போராளிகளிற்கு அகவணக்கம் செலுத்துதலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.

தோழர் சத்துர பேசும் போது மருத்துவ பீட மாணவர் ஒருவர் தனியார் கல்வி நிறுவனங்களை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக முழு நேரமாக போராடியதாகவும் அவர் 89ம் ஆண்டு யு.என்.பி ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டதனையும் இன்று அவரது தாயார் தனது மகன் எதற்கெதிராக போராடினதனே அது இலங்கையில் அதிவேகமாக உருவாகிவருதது குறித்து விசனம் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல தோழர்கள் இடதுசாரிய இயக்கத்தினது முக்கியத்தும் குறித்து உரையாற்றினர். இதனை தொடர்ந்து முன்னிலை சோசலிச கட்சியினது மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் மிக நீண்ட உரை ஒன்றிணை தமிழிலும் சிங்களத்திலும் ஆற்றினார்.

இலங்கையில் சுதந்திரத்தின் பின்னர் முதலாளித்துவம் பல்வேறு காலங்களில் எவ்வாறு மக்களது ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் மறுத்து வந்துள்ளது என்பதனையும் இனவாதம், மதவாதங்கள் மூலமாக எவ்வாறு இனஒடுக்கு முறைக் கூடாக சிறுபான்மையினங்களை ஒடுக்கி வந்துள்ளது என்பதனையும் முதலாளித்துவம் இன்று நவதாராள மயமாக்கலுக்கு துணை போயுள்ளமை, இடதுசாரியத்தின் தோல்வி, இடதுசாரியம் இலங்கையில். மீட்டெடுக்கப்பட வேண்டியதன் அவசியம், இடதுசாரிய வேலை திட்டத்தினை மக்கள் மத்தியில் கொண்டு போதல், போராட்டத்தினை முன்னெடுத்தல் என பல்வேறு விடயங்கள் குறித்து உரையாற்றினார்