Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இது சரதியலின் வரவு செலவு திட்டமல்ல, சோரோஸின் வரவு செலவு திட்டம்

செல்வந்தர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் சரதியல் பாணியிலான வரவு செலவு திட்டமென இதனைக் கூறினாலும், ஜோர்ஜ சோரோஸ் பாணியிலான வரவு செலவுத் திட்டமே சமரப்பிக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திபின்போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

"இன்று பத்திரிகைகளை திறந்தால் நாட்டிலுள்ள பிரச்சினைகளை அறிந்துக் கொள்ள முடியும். வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பத்திரிகை கூறுகிறது. வரவு செலவு திட்டத்திற்கு நாடு முழுவது எதிர்ப்பு என இன்னொரு பத்திரிகை கூறுகிறது. நாடாளுமன்றத்தில் இருப்பது மக்கள் பிரதிநிதிகளென புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. என்றாலும் இந்த வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக மக்கள் கருத்துக்கும், நாடாளுமன்றத்தின் கருத்துக்குமிடையிலான இடைவெளியை பார்க்கும்போது நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லையென்பது நிரூபனமாகிறது. இந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுமென்று பார்த்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. வரவு செலவு திட்டத்திலுள்ள அழிவைத் தரக்கூடிய ஆலோசனைகளை போராடித்தான் தோற்கடிக்க வேண்டும். சில திட்டங்கள் மக்கள் போராட்டங்களால் திருப்பிவிடப்பட்டுள்ளன. என்றாலும், இந்த கொள்கை இருக்கும் வரை இந்தப் பிரச்சினையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே, நவ தாராளமய கொள்கைக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எதிர்ப்பை வரிசைப்படுத்த வேண்டும்.

பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் சரதியல் பாணியிலான வரவு செலவு திட்டத்தை தருவதாக அரசாங்கம் உறுதியளித்தது. நாம், இடதுசாரிகள் என்ற வகையில் சரதியல் பாணியை நம்புவதில்லை. உற்பத்தியோடு சம்பந்தப்படும் மக்களுக்கு அந்த உற்பத்திகளிலிருந்து நியாயமான பங்கை பெற்றுக் கொடுப்பதற்காகவே நாம் தோற்றி நிற்கின்றோம். செல்வந்தர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு தருவதாக அரசாங்கமே கூறியது. இப்போது அதைத் தான் செய்திருக்கின்றதா? இந்த வரவு செலவு அறிக்கையை பார்க்கும்போது சரதியல் எப்படிப்பட்டவரென்று தெரிகிறது. அதிக வருமானம் பெறுவோரிமிருந்து அறவிடப்படும் வருமான வரி 2015ல் 249 பில்லியன் ரூபா. அது 2016ல் 233 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. பணக்காரர்களிடமிருந்து அறவிடும் வரியின் அளவு மொத்த வரிகளில் 19.4% லிருந்து 14.8% வரை குறைக்கப்பட்டுள்ளது. பணக்காரர்களிடமிருந்து எடுக்கும் விதம் இதுதான்.

ஏழைகளுக்கு எப்படி கொடுக்கின்றாரகள் என்பதை பார்ப்போம். சாமானிய மக்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக வழங்கும் வரி 767 பில்லியன் ரூபாவிலிருந்து 2016ல் 993வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சரதியல் பாணி வரவு செலவுத் திட்டமல்ல. ஏழைகளிடமிருந்து பறித்து பணக்காரர்களுக்கு கொடுக்கும் வரவு செலவுத் திட்டம். இந்த உண்மையை மறைக்கவே 11 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. அந்த விலை குறைப்பிற்கு 3 பில்லியன் செலவாகுமென வரவு செலவு அறிக்கை கூறுகின்றது. எங்களிடமிருந்து 993 பில்லியன்களை பறித்து 3 பில்லியன் திருப்பிக் கொடுக்கப்படுகிறது. பொருட்களின் விலையை குறைக்க 3 பில்லியன் ஒதுக்கப்படும் அதே நேரம், தொலைபேசி கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் ஊடாக 9 பில்லியன் வருமானமாக கிடைக்கின்றது. இது சரதியலின் வரவு செலவு திட்டமல்ல. நிதி வியாபாரிகளுக்கு பொருளாதாரத்தை திறந்துவிடும் ஜோர்ஜ் சோரோஸ் பாணியிலான வரவு செலவுத் திட்டம்.

1997ல் தென்கிழக்காசிய நாடுகளை ஒரே நாளில் வீழ்ச்சியடையச் செய்த வியாபாரி ஜோர்ஜ் சோரஸ் தான் இன்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர். இலங்கையில் பொருளாதார மாநாடொன்றிற்கு ஜோர்ஜ் சோரோஸை அழைப்பிப்பதாக ரணில் நாடாளுமன்றத்தில் மார்தட்டிக் கூறினார். சில நாடுகளுக்குள் சோரோஸை நுழையவே விடமாட்டார்கள்.

வரிகளின் ஊடாக எங்களிடமிருந்து கொள்ளையடிக்கும் 993 பில்லியனை எப்படி செலவிடுகிறார்கள்? எங்களை அடிக்கவும் அடக்குமுறை செய்யவுமே அதிகம் செலவிடுகிறார்கள். 2016ல் பாதுகாப்பு அமைச்சுக்கு 306 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுதான் ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிகமான நிதி. இந்த வருடம் 294 பில்லியனாக இருந்த பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 306 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தவிரவும், பொலிஸிக்கான செலவீனமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எங்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு எங்களையே அடிக்கின்றார்கள்.  எனது சாராயம் என்னையே அடிக்கின்றது என்று கிராமப்புறங்களில்  இதைத்தான் சொல்வார்கள்.

அடிப்பதற்கு பணத்தை அதிகரித்துக் கொண்டு கல்விக்கும், சுகாதாரத்திற்கும், பொது போக்குவரத்திற்கும் என்ன செய்திருக்கின்றார்கள்? சுகாதார அமைச்சுக்கு 174 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது பொய். அதில் 17 பில்லியன் வைத்தியசாலைகளின் காணிகள், கட்டடங்களை வாடகைக்கு எடுக்கும் பட்சத்தில் செலவாகும் பணம். இப்போது வாடகை கொடுப்பதில்லையே. இவை ஒவ்வொன்றும் அரச சொத்துக்கள். வாடகை கொடுக்காமலேயே வாடகையை செலவீனமாக காட்டியுள்ளார்கள். இது மோசடி. பெரும்பாலான பிரதான வைத்தியசாலைகள் நகர மத்தியிலேயே உள்ளன. காணி மதிப்பு அதிகமாக உள்ள இடங்களில். எனவே, சுகாதாரத்திற்கான செலவீனமாக பெரியதொரு தொகையை மோசடியாக சேர்த்துள்ளனர். சுகாதார சேவைக்கான சரியான ஒதுக்கீடு 157 பில்லியன். இந்த வருடம அதிகரிக்கபட்டிருப்பதாகத் தெரிந்தாலும் அத்தனையும் மீண்டெழும் செலவீனங்கள். மூலதனச் செலவீனங்கள் 2015ல் 39 பில்லியனிலிருந்து 2016ல் 36 பில்லியன் வரை குறைக்கப்பட்டுள்ளது.

கல்விக்கு தேசிய உற்பத்தியில் 5.41% வரையில் அதிகரித்திருப்பதாக கூறுவது இன்னொரு மோசடி. கல்விக்கு 185 பில்லியன் ஒதுக்கப்பட்டதாக கூறினாலும், அதில் 121 பில்லியன் பாடசாலை காணிகள் மற்றும் கட்டடங்களை வாடகைக்கு எடுக்கும் பட்சத்தில் செலவாகும் தொகை. அவற்றிற்கு செலவிடப்பட மாட்டாது. கல்விக்கு செலவிடப்படும் உண்மையான தொகை 64 பில்லியன். 2015ல் அது 62 பில்லியன். இந்த 2 பில்லியன் என்பது கல்விக்காக அதிகரிக்கப்பட்டதல்ல. முன்பு கலாச்சார அமைச்சிற்கு சொந்தமாக இருந்த 9 நிறுவனங்கள் இப்போது கல்வி அமைச்சுடன் சேர்க்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களம், தேசிய நூலக மற்றும் சுவடுகள் சபை, தேசிய கலைகள் சபை போன்ற நிறுவனங்களின் செலவீனங்களையும் சேர்த்துத் தான் இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டால் அதற்கு ஒரு பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே கல்விக்கான செலவீனங்கள் வெட்டப்பட்டுள்ளன.

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டு தொகை 230லிருந்து 170க குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் அதிக தொகை நெடுஞ்சாலைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு சொச்ச தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 79பில்லியனிலிருந்து 59 பில்லியன் வரை 25% ல் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பவர்களும் இது குறித்து கதைப்பதில்லை. அவர்களுக்கு இவை பிரச்சினைகளல்ல. வாகனங்களின் விலை அதிகரிப்பு குறித்து கதைக்கின்றார்கள். பொது போக்குவரத்து சேவையில் ஒதுக்கீடுகள் வெட்டப்படுவது குறித்து கதைப்பதில்லை. கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து சேவை போன்றவற்றின் ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டு எங்களிடமிருந்து பெறப்படும் பணம் எங்களை அடிக்கவே செலவிடப்படுகின்றது.

இந்த வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தினால் அதை செய்ய முடியாது. இந்த வரவு செலவு திட்டத்திற்கு அடிப்படையான நவ தாராளமய கொள்கைக்கு நாடாளுமன்றித்திலுள்ள அனைவரும் இணக்கமாகவே உள்ளார்கள். வரவு செலவு திட்டத்திற்கு சார்ப்பானவர்களைப் போன்றே அதற்கு எதிரானவர்களும் நவ தாராளமயத்தை விரும்புகிறார்கள். இதனை எதிர்த்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தோற்றும் சுதந்திர கூட்டணியினரை எடுத்துக் கொள்வோம். சுதந்திர கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது இந்த கொள்கையை ஆதரித்து கையை உயர்த்தியவர்கள்தான் இவர்கள். இந்த வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கிருப்பது சில தொழில்நுட்ப பிரச்சினைகள் மட்டுமே. மக்கள் விடுதலை முன்னணியும் அப்படித்தான். 100 நாள் வேலைத்திட்டத்தின்போது கொண்டுவரப்பட்ட இந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவு திட்டத்தை ஆதரித்தவர்களும் இவர்கள்தான். இப்போது இதை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்கின்றார்கள். அதுவும் கொள்கை ரீதியான எதிர்ப்பல்ல. ஒரு சில தொழில்நுட்ப பிரச்சினைகளை தீர்த்துவிட்டால் டிசம்பர் 19ல் இதற்கு ஆதரவாக வாக்களிக்வும் தயங்க மாட்டார்கள்.

ஆகவே, நாடாளுமன்றதில் இது தோற்கடிக்கப்பட்டுவிடும் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்த வரவு செலவு திட்டத்தை கொண்டுவரும்போதே நாங்கள் கூறினோம் "கொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை போராட்டத்தினால் தோற்கடிப்போம்" என்று. இப்போதும் அதைத்தான் கூற வேண்டியுள்ளது. மக்கள் ஒன்றிணைந்து போராடி இந்த அழிவைத் தரும் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும். இடதுசாரிகள் என்ற வகையில் நாம் அந்த போராட்டத்தோடு இருப்போம். அந்த போராட்டத்தை பாதுகாப்போம். அந்த போராட்டத்தை இனவாதிகளுக்கு கொள்ளையடிக்க விடமாட்டோம். அப்போராட்டத்தை உயர்ந்த அரசியல் மட்டத்திற்கு கொண்டுவர பங்களிப்புச் செய்வோம்". என புபுது ஜயகொட மேலும் கூறினார்.

பின்குறிப்பு:

1. சரதியல்:  இலங்கையினை வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில், பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுத்த இலங்கையின் ரொபின் கூட் (Robin Hood)

Deekirikevage Saradiel widely famous as Utuwankande Sura Saradiel,translation:Saradiel the Hero of Mountain Utuwan (Sinhalese: උතුවන්කන්දේ සුර සරදියෙල්; 25 March 1832 – 7 May 1864) is a Ceylonese gang leader and bandit who became a legendary figure in Sri Lanka known as the "Robin Hood of Sri Lanka". Some Sri Lankan scholars place him in the context of regional insurgencies of against British Colonial rule rather than a manifestation of local lawlessness or economic justice.

2. George Soros ஜோர்ஜ் சோரஸ்

Currency manipulation:  A large part of Soros’ multibillion-dollar fortune has come from manipulating currencies.  During the 1997 Asian financial crisis, Malaysian Prime Minister Mahathir bin Mohamad accused him of bringing down the nation’s currency through his trading activities, and in Thailand he was called an “economic war criminal.”  Known as “The Man who Broke the Bank of England,” Soros initiated a British financial crisis by dumping 10 billion sterling, forcing the devaluation of the currency and gaining a billion-dollar profit.