Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்! -முன்னிலை சோஷலிஸக் கட்சி

புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்!

தமது  சம்பளமுரண்பாட்டை  உடனடியாக தீர்க்குமாறு  வற்புறுத்தி புகையிரத  சேவைகள் பலவற்றில் உள்ள தொழிலாளர்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு செயற்பாட்டுக்கு அரச அடக்குமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புகையிரத சங்கங்கள் நீண்டநாட்களாக தமது சம்பள உயர்வு தொடர்பாகவும், மற்றும் சம்பள முரண்பாடு தொடர்பாகவும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால்  அது தொடர்பாக அதிகாரிகளின் எவ்வித பதிலும் கிடைக்காதனால் இன்று அது வேலைநிறுத்தம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக ஆரம்பத்திலேயே தீர்வு பெற்றுக்கொடுக்காது பிரச்சினை  வளர்க்கும் ஆட்சியாளர்கள் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வகை கூறவேண்டும்.

அந்த வகைகூறலோடு ஆட்சியாளர்கள் வேலைநிறுத்தத்தின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவை  பாதிப்படைவதைப் பாவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது  அடக்குமுறையை பாவித்து வருகின்றனர்.

புகையிரத சேவையையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தல், குறித்த நேரத்திற்குள்   சேவைக்கு திரும்பாத புகையிரத தொழிலாளர்கள் சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படுவதாக அறிவித்தல் போன்ற அச்சுறுத்தல் தற்போது அரசாங்கத்தினால் விடப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் பாரிய அடக்குமுறையாக அது அமையும்.

புகையிரதம்  உட்பட  பொதுப் போக்குவரத்துச்  சேவை அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்திற்கு தெரிவது தொழிலாளர்கள் வேலைநிறுத்த செயற்பாட்டில் ஈடுபட்ட பின்னரே.

இதற்கு முன்னர் புகையிரத திணைக்களத்தை தனியார் கம்பெனிக்கு விற்கும் தீர்மானம் எடுக்கும்போது  அல்லது அரசாங்க நிதி ஒதுக்கீட்டை வெட்டிவிடும்போது அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள்  செயற்பட்டது அத்தியாவசியதன்மையை கவனத்தில் கொள்ளாது.

தற்போது இந்த சந்தர்ப்பத்தில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தலைவர்களிடம் எமக்கு கேட்க வேண்டியிருப்பது 2015 இல் 78 பில்லியன், 2016 இல்  58 பில்லியன், 2017 இல் 51 பில்லியன் என பொதுப் போக்குவரத்து செலவுகளை குறைத்தபோதும்,  2018 வரவுசெலவு திட்டத்தில் அது 43 பில்லியன் வரை மேலும் வெட்டப்பட்டுள்ளபோதும் அது  அத்தியாவசிய சேவையாக ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இவைகளில் உள்ள சமூகமய அத்தியாவசிய பாவனை உள்ளது.  அந்த சேவைகள் தொடர்பாக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கு அல்ல அந்த சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழில் உரிமையை இல்லாதொழிக்கவே என நாங்கள் மக்களுக்கு மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்.

 

அரசாங்கம் இவ்வாறான அடக்குமுறையை முன்னெடுக்கக்கூடியதாக இருப்பது தொழிலாளர் இயக்கங்களிடம் ஒற்றுமை சிதைவடைந்து, தொழிலாளர் போராட்டங்களில் தொழில் எல்லை மற்றும் தரங்கள் இருப்பதாலேயே என்பதை தொழிலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

புகையிரத தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைத்து அரசசேவையிலும், தனியார் மற்றும் தோட்டத்துறையிலும் தொழிலார்களின் சம்பளம் அண்மையில் அதிகரிக்கப்படவில்லை என்பதோடு  அது அதிகரிக்கும் வாழ்க்கைச்செலவோடு எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. சம்பள முரண்பாடு புகையிரத சேவைக்கு மட்டுப்படுத்தப்படாத, அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் ஏற்புடையதாக தீர்க்கப்படாத பிரச்சினையாகும்.

புகையிரத சேவையை தனியார்மயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்காக அரச நிதி வழங்கல் குறைக்கப்படுத்தல், பல வருடங்களாக சேவையில் இருந்தாலும் இன்னமும் நிரந்தரப்படுத்தப்படாமல் அதிகளவான புகையிரத தொழிலாளர்கள் இருப்பது போன்ற பல்வேறு  நெருக்கடிகள் உள்ளன. 

இதனால் இந்த சகல பிரச்சினைகளுக்கும் ஏற்ப கூட்டுப் போராட்டத்தினால் அன்றி மற்றும் தொழிலாளர்  வர்க்க ஏனைய தரங்களுடன் மற்றும் துறைகளை ஒன்றிணைத்த போராட்டத்தினால் மட்டுமே அரச  அடக்குமுறைக்கு முகங்கொடுக்க முடியும். தொழிலாளர் போராட்டங்களில் அரசியல் மட்டத்தை உயர்த்தும்படி நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களிடமும்  கேட்டுக்கொள்ளுகிறோம்.

புகையிரத சேவையின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்காது அந்த சேவையை செயலிழக்கச்  செய்வது தொடர்பாகவும், மற்றும் தொழிலாளர்களின் போராட்டம் செய்யும், இயக்கமாகும்,  ஐக்கியத்தை விலைபேசும் உரிமைகளை அடக்குமுறையில் அழிக்க முற்படுவது தொடர்பாக  ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சிக்கும் நாங்கள், வேலைநிறுத்த தொழிலாளர்களின்  கோரிக்கைகளை பெற்றுக்கொடுத்து இப் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறும், புகையிரத  சேவையை வழமைக்கு கொண்டுவரும்படியும் அரசாங்கத்தை வற்புறுத்துகிறோம்.

புகையிரத தொழிலாளர்களின் பிரச்சினை அவ்வாறே இருக்கும் போது அவர்கள் மீது  அடக்குமுறையை பிரயோகிக்க அரசாங்கம் முயற்சிக்குமானால் ஏனைய துறைகளின் தொழிலாளர்களையும், புகையிரத பயணிகளையும் தொடர்புபடுத்தி போராட்டத்தை  பாதுகாக்க தலையிடுமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

அரசியல் சபை

முன்னிலை சோஷலிஸக் கட்சி

2017 டிசம்பர்  11