Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

எங்கே சுதந்திரம்? - மக்கள் கூட்டத்திற்கு அழைப்பு

பிரித்தானிய காலனித்துவம் 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி தனது நம்பிக்கைக்குரிய உள்நாட்டு ஆளும் வர்க்கம் மற்றும் தமது விசுவாசிகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு,  இலங்கை மக்களிற்கு சுதந்திரம் வழங்கி விட்டதாக அறிவித்தது. அன்று தொடக்கம் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் இன - மத ரீதியாக மக்களை பிரித்து மோத விட்டு - இரத்த ஆற்றை ஓட விட்டவாறு, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தப் போவதாக மக்களை ஏமாற்றி மாறி மாறி ஆட்சிக்கு வருவதும், நாட்டை கொள்ளை அடித்து தாம் செல்வத்தில் திளைப்பதுமாக கதை தொடர்கின்றது.

Read more ...

குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!

ஜனநாயகம் சம்பந்தமாக ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்தே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. முந்தைய ராஜபக்ஷ ஆட்சியின் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களால் துன்பப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுத் தருவதாக இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் மேடைகள் தோறும் வாக்குறுதியளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று மீறப்பட்டுள்ளன. மக்கள் எதிர்பார்ப்புகள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல் சிறைக்கைதிகள், காணாமல்போனவர்கள், அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளானவர்கள், அடக்குமுறைக்கு ஆளானவர்கள் போன்ற யாருக்குமே நீதி கிடைக்கவில்லை. தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சம்பந்தமாக விசாரணை கேட்டு ரத்துபஸ்வல மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பிரகீத் எக்னலிகொட, லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை சம்பந்தமாகவும் இந்த அரசாங்கம் ஊமையாகவே உள்ளது. லலித் மற்றும் குகன் காணாமல்போனது குறித்து எவ்வித விசாரணையுமில்லை. அதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்படாமல் தவிர்க்கப்படுகின்றார்கள். இதற்கிடையில் தற்போதைய அரசாங்கம் தமது படுமோசமான கொள்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என அனைவருக்கும் எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது. தம்புள்ளயில், கொடகத்தனயில், யாழ்ப்பாணத்தில் மற்றும் பந்தகிரியாவிலும் சமீபத்தில் கொலன்னாவையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more ...

வரவு – செலவு மரணப்பொறி

2016க்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஏற்கனவே பாரிய மக்கள் எதிர்ப்பு எழுந்து கொண்டிருக்கின்றது. கண்ட கனவுகளெல்லாம் கானல் நீராகி விட்டன. அரச ஊழியரின் அடிப்படை சம்பளத்துடன் ரூபா. 10000 சேர்ப்பதாக சொன்னார்கள். தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 1500 ரூபாவால் அதிகரிப்பதாகச் சொன்னார்கள். சட்டைப்பையை நிரப்புவதாகச் சொன்னார்கள். நடந்து செல்பவர்கள் வாகனத்தில் செல்ல முடியும் என்றார்கள். கடைசியாக, "பிச்சை எடுத்ததாம் பெருமாளு அதை பறித்து தின்னுதாம் அனுமாரு" என்ற கதையாகிவிட்டது. கூட்டரசாங்கம் பருப்பு, கருவாடு ஆகியவற்றின் விலைகளை குறைத்துவிட்டு, வரலாறு பூராகவும் இந்நாட்டு உழைக்கும் மக்கள் அநுபவித்த உரிமைகளை கொள்ளையடிக்க முயல்கின்றது. அரச ஊழியர்களின் ஓய்வூதியம், தனியார்துறை ஊழியர்களின் சேமலாப நிதி, விவசாயிகளின் உர மானியம், பாடசாலைச் சிறார்;களின் சீருடை உட்பட மேலும் பலவற்றிற்கு 'ஆழ்ந்த அநுதாபம்" என்று கூறுமளவிற்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உள்ளன.

Read more ...

இது சரதியலின் வரவு செலவு திட்டமல்ல, சோரோஸின் வரவு செலவு திட்டம்

செல்வந்தர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் சரதியல் பாணியிலான வரவு செலவு திட்டமென இதனைக் கூறினாலும், ஜோர்ஜ சோரோஸ் பாணியிலான வரவு செலவுத் திட்டமே சமரப்பிக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திபின்போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

"இன்று பத்திரிகைகளை திறந்தால் நாட்டிலுள்ள பிரச்சினைகளை அறிந்துக் கொள்ள முடியும். வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பத்திரிகை கூறுகிறது. வரவு செலவு திட்டத்திற்கு நாடு முழுவது எதிர்ப்பு என இன்னொரு பத்திரிகை கூறுகிறது. நாடாளுமன்றத்தில் இருப்பது மக்கள் பிரதிநிதிகளென புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. என்றாலும் இந்த வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக மக்கள் கருத்துக்கும், நாடாளுமன்றத்தின் கருத்துக்குமிடையிலான இடைவெளியை பார்க்கும்போது நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லையென்பது நிரூபனமாகிறது. இந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுமென்று பார்த்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. வரவு செலவு திட்டத்திலுள்ள அழிவைத் தரக்கூடிய ஆலோசனைகளை போராடித்தான் தோற்கடிக்க வேண்டும். சில திட்டங்கள் மக்கள் போராட்டங்களால் திருப்பிவிடப்பட்டுள்ளன. என்றாலும், இந்த கொள்கை இருக்கும் வரை இந்தப் பிரச்சினையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே, நவ தாராளமய கொள்கைக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எதிர்ப்பை வரிசைப்படுத்த வேண்டும்.

Read more ...

இன்று இப்படியென்றால், நாளை?

மதிப்புக்குரிய மத குருமார்களே,

அன்புக்குரிய அன்னையரே, தந்தையரே,

தோழரே, தோழியரே.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக செயற்படும் இந்த இடைவிடாத சத்தியாக்கிரக எதிர்ப்பின் நோக்கம், தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதுதான். தோழர் குமார் குணரத்தினம் கடந்த 04ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அது மாத்திரமல்ல, அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

Read more ...