Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ..? -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2

மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதிச்சது போலை, கடன்பட்டு கஸ்ட்டப்பட்டு வெளிநாட்டுக்கு வந்த எங்கட மக்களை ஏமாற்றி, பண மோசடி செய்து, வீடு மேல வீடு வாங்கி, தனக்குச் சொத்து சேர்த்து, தன்னை நம்பி வந்த மக்களை நடுறோட்டில விட்டிட்டு..! கள்ள வழியால் தப்பிவந்த ஒரு வழக்குரைஞரின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிஞ்ச விடயந்தானே பாருங்கோ..? அவரைச் சட்டம் சும்மா விடேல்லை, தண்டனை முடிஞ்சு அவர் வெளியாலை வந்தாலும் தன்ரை நிறுவனத்தை இழந்ததாலை, அவரிப்ப தனது துணைவியோட சரவணபாபாச் சாமிக்கு சாமரம் வீசுவதுடன், அந்த ஜிலேபிச் சாமியின் கால்களைக் கழுவி அந்த ஊத்தையைக் குடிக்கினம். அந்தச் சாமிக் கள்ளன் தனக்கான சொத்துக் குவிப்பதற்காக, இவர்களையும் சேர்த்துக்கொண்டதாலை ஆளாளுக்கு மாறிமாறி உதவியளைச் செய்து, அப்பாவி மக்களை பேக்காட்டி சொத்துச் சேர்க்கினம்.

 

இதிலை முக்கிய விசயம் என்னெண்டால்.., இந்தச் சாமி அடிக்கிற கொள்ளைச் சொத்திலும் இந்தக் குடும்பத்துக்கு பங்கு இருக்கிறதோ தெறியவில்லை!. உந்தக் கொள்ளைக் கும்பலின்ரை சதிராட்டத்தை, ஐ.பி.சி.றேடியோவிலை இருந்து எத்தனையோ தமிழ் ரி.விக்கள் உந்த மானங்கெட்ட பணத்துக்கு விளம்பரம் காட்டி, தமிழ்ச் செய்தி மூலமாக, மற்ற மானமுள்ள தமிழரையும் அதே மானம் கெட்ட இடத்துக்கு போகச் சொல்லுகினம் பாருங்கோ.

மற்றது என்னெண்டால், இந்தச் சாமியிட்டை அடிக்கடி போய்வரும் ஒருவரது மனைவி, தான் குளிச்சிட்டு வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தபோது..! அந்த வானில் நிலவு தெரியவில்லையாம்..? ஆங்கே குருஜி சரவணபாபாவின் முகந்தான் தெரிஞ்சுதாம், எண்டு அந்தச் சாமியின்ரை பக்தருக்கு கதை விடுகிறா எண்டால் அதுக்குள்ளை என்னென்ன அடங்கியிருக்கு எண்டு நீங்கள் சரியாச் சிந்திச்சால்த்தான் பாருங்கோ புரியும்.


உண்மையிலை இந்தப் பெண் மனநல மருத்துவத்தைப் பெறுவதுதான் நல்லது. இந்தச் சாமி பல மாதங்களாக தனது சொந்த நாடான இந்தியாவுக்குப் போகமுடியாத நிலையிலுள்ளான். இவன் விரைவில் இங்கிலாந்தை விட்டு வெளியேறவேணும் பாருங்கோ. அதாலை இவன் கனடாவுக்கு போறதுக்கு முயற்சிக்கின்றான் பாருங்கோ. அங்கே  வாழுகின்ற தமிழர்களுக்கும் தனது காமலீலைகளைக் காட்டிப் பணம் பறிக்க முயல்கின்றான் பாருங்கோ.


இவை ஒருபுறமிருக்க, இன்னுமோர் தமிழனான வழக்குரைஞன் (சட்டத்தரணி..?) தனது வாடிக்கையாளனின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்துள்ளான். ஏன்..? எதற்காக..?? இந்த மனிதன் என்ற மாற்று உருவத்திலிருக்கும் இதுகள், பணம் பணமெண்டும் .., பாலியலெண்டும் .., சாமியளெண்டும் .., பசுத்தோல் போர்த்தவாறு அலையுறதெல்லாம் எதுக்காக..?


உந்தச் சாமியளை கடவுளாக நம்புகிற மனிதர்களே..! தயவுசெய்து சிந்தியுங்கள். திருமணமாகிய பல இளம் பெண்களுக்கு அவர்களின் கணவன்மாரை விட்டு விலகுமாறும், அதன்பின்பு சாமியாகிய தானே அனைத்துக்கும் பொறுப்பு என்றும், இந்தச் சாமி சொல்லிய வகையில், இந்த ஜிலேபிச்சாமி (முன்னைநாள் மலையாள தேன்குழல் வியாபாரி) எல்லாமே செய்கின்றான்.


இந்தியாவில்.., சத்தியசாயி பாபா – நித்தியானந்தா – கல்கி குடும்பமென எத்தனையோ சாமிகளின் சுத்துமாத்துகளும், பாலியல் சமூகச் சீரழிவுகள் பற்றியெல்லாம் நீங்கள் அறியவில்லையா..? இந்தப் பாபா என்ற ஜிலேபிச்சாமி எதற்காக இந்தியாவுக்கு போகமுடியாதுள்ளான்..? அதுகும் உங்களுக்குத் தெரியாதா..? தயவு உண்மைகளைத் தேடுங்கள்.


அவனைப் புகைப்படமெடுத்து அதனை, போட்டோசொப் (PHOTOSHOP) போன்றவற்றைப் பாவித்து, கவர்ச்சி விளம்பரங்களை சிலர் வெளியிடுகின்றார்களே, அவை எதற்காக..?


எனக்கு ஆபத்து வரும்போது மட்டும் நான் அழுகின்றேன். உதவிதேடி அலைகின்றேன். மற்றவரை காப்பாற்ற எனது மானம், மரியாதை என்னை தடுக்கின்றது. ஆனால் இதில் நாம் அப்படியல்ல. இந்தச் சாமி என்ற மனிதன் எமக்குப் பிரச்சினை இல்லை, அவன்மீது நீங்கள் கொண்டுள்ள மூடத்தனமும், உந்தச் சாமிகள் உங்களை ஆட்டிப்படைத்து தான் அனைத்தையுமே கொள்ளையடிக்கின்ற நிலமைக்குள், அப்பாவிகளான மக்கள் மாட்டுப்பட்டு சீரழிவதனை தடுப்பதே எமது உண்மையான நோக்கம்.


இதனையும் மீறி நீங்கள் பாபாவிடமும் இவனைப் போன்றவரிடமும் சுகம் பெற விரும்பினால்..? உந்த மனிதர்களை அறிவியலால் பரிசோதித்துப் பாருங்கள்.
இவனது படத்தினை வீட்டில் தூக்கிவைத்து அதனால் பூ விழுகிறது என்கின்றனர் சிலர். அந்தப் பூ ஏன் கீழ் நோக்கி விழவேண்டும்..? அதேன் மேலே ஆகாயத்தை நோக்கி பறந்து போகவில்வை..?


இந்தச் சாமிக்கு ஒரு கிழமைக்கு பருப்புக் கறியும், சோறும் கொடுங்கள். எந்தக் காரணம் கொண்டும் இந்தச் சாமியானவனை ஒரு அடி நகரவிடாது மறியுங்கள். அதாவது மலசல கூடத்துக்கும், எந்த இடத்துக்கும் இவன் ஒரு அடிகூட நகரக் கூடாது. இவன் உண்மையான சாமியென்றால்.., ஒரு கிழமைக்கு மலசலம் கழிக்காமல் இருந்து காட்டட்டும்.


இவன் சாமியென்றால்..!?


இவன் எதற்காக வீசாவுக்கு அலையவேண்டும்..?
இவன் எதற்காக பாஸ்ப்போர்ட் வைத்திருக்கவேண்டும்..?
இவன் எதற்காக பணத்துக்கும் பாலியலுக்கும் அலையவேண்டும்..?
இவன் எதற்காக 160 கோடிக்கு மேல் சொத்துச் சேர்த்தான், எப்படிச் சேர்த்தான்..?

இவன் எதற்காக இந்திய ஏழை மக்களை – குழந்தைகளைக் காட்டி உங்களிடம் பணம் சேர்க்கவேண்டும்..?
இவன் எதற்காக இந்தியப் பத்திரிகைகளின் நிருபர்கள் மீது தாக்கவேண்டும்..?
இவன் எதற்காக இந்தியாவுக்குப் போவதற்கு தயங்குகின்றான்..?


இவன் இதுவரை உங்களை ஏமாற்றி உழைத்த பணம் இந்திய ரூபாவிற்கு கோடிக் கணக்கானது. அதில் ஒரு இருபத்தையாயிரம் ரூபாவை செலவழித்து ஏழைப் பிள்ளைகளுக்கு புத்தகம் குடுப்பதாக, உணவு வழங்குவதாக, அதற்காக ஏதேதோ பூசை செய்ததாக உங்களுக்குப் படம் காட்டுவான். அதாவது இந்தியாவில் என்னதான் செய்ய முடியாது..? அதுகும் இப்படியான தகிடதத்தக்காரரால் எல்லாமே முடியும். நீங்கள் கொஞ்சம் அப்பாவியாக இருந்தால்.

 

மாணிக்கம்

15/08/2011