Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

யார் யாருடைய வயிற்றிற்குள்? அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தத்தின் எதார்த்தம்

2007 மார்ச் 5ம் திகதி அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் அப்போதைய தெற்காசியா தொடர்பிலான அரசாங்க செயலாளர் ரொபட் ஓ ப்ளெக்கிற்கும் அப்போதைய இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்குமிடையில் ஒப்பமிடப்பட்டது. அவர்கள் இருவரும் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒப்பமிட்ட ஒப்பந்தம் சம்பந்தமாக ஒரு தசாப்தம் கடந்த பின்பு இப்போது கதைப்பதற்கு என்ன காரணம் என்பதில் உங்களுக்கு சந்தேகம் எழலாம். காரணம் இதுதான். இவ்வொப்பந்தம் பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் ஒப்பமிடப்பட்டதுடன், 2017 மார்ச் 5ம் திகதி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. கடந்த அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் ஒப்பமிடும்போது அதற்கு எதிராக கூப்பாடு போட்ட இன்றைய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் காலாவதியான ஒப்பந்தத்திற்கு உயிரூட்டுவதற்காக அதில் புதிதாக ஒப்பமிட தயாராகின்றனர். அது மாத்திரமல்ல, 2017 ஜூன் 21ம் திகதி பிரதமர் கூறியதற்கமைய இம்முறை காலவரையறையின்றி எப்போதும் செல்லுபடியாகும் விதத்தில் ஒப்பந்தம் தயாரிக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தம் என்ன?

இது ACSA என சுருக்கமாக அறியப்படும் சுவீகரித்தல் மற்றும் சேவைகள் பரிமாற்ற ஒப்பந்தம்,  Acquisition and Cross-Servicing Agreement வகை ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கிடையே யுத்த நடவடிக்கைகளின்போது வசதிகள் செய்து கொடுப்பது சம்பந்தமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு யுத்தத்தின்போது மிலிடரி ஒத்துழைப்பு வழங்குவதற்கான கடப்பாடு இல்லாதபோதிலும் உணவு, மருந்துகள், மருத்துவ சேவை, கப்பல் மற்றும் விமானங்களை பழுது பார்க்கும் சேவை, எரிபொருள் போன்ற அடித்தள வசதிகளை வழங்குவதற்கு கட்டுப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ஒரு வரலாறு உண்டு. ஆரம்பத்தில் நேட்டோ நாடுகளுக்கு மத்தியில் மாத்திரம் இருந்த பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தமான NATO Mutual Support Act என்ற ஒப்பந்தமே இருந்தது. அந்த ஒப்பந்தம் நேட்டோ நாடுகளுக்கிடையே இருந்ததோடு, ஒரு நாடு யுத்தத்தில் 1992, 1994 மற்றும் 2003 ஆகிய வருடங்களில் ஒவ்வொரு முறையும் திருத்தப்பட்டதோடு, அத்திருத்தங்களின் ஊடாக நேட்டோ அல்லாத நாடுகளுடனும் அடித்தள வசதிகளை பரிமாறிக் கொள்வதற்கு இடமளிக்கப்பட்டது. அதன் பின்பு இவ்வொப்பந்தம் ACSA என மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பின்பு சுமார் 78 நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்திற்கு வந்தன.

 

 

உண்மையிலேயே இவ்வொப்பந்தத்தினால் என்ன நடக்கின்றது? இதனை புரியும்படி சொல்வதாயிருந்தால், அமெரிக்காவானது இந்து சமுத்திரத்தில் அல்லது அண்டிய பிரதேசத்தில் யுத்தத்தில் விமான நிலையம் மற்றும் வைத்தியசாலைகளையும் அவற்றின் வளங்களையும் அவற்றின் அலுவலர்களையும் பயன்படுத்த இலங்கை இடமளிக்கின்றது. அதற்குப் பிரதியுபகாரமாக இலங்கை அத்திலாந்திக் சமுத்திரத்திலோ அல்லது அதற்கு சமீபமாக உள்ள பிரதேசத்திலோ யுத்தத்தில் விமான நிலையம் மற்றும் வைத்தியசாலைகளையும், அவற்றின் பௌதீக மற்றும் மனித வளங்களையும் பயன்படுத்த அமெரிக்கா இடமளிக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமான ஒப்பந்தம்தான். இரு தரப்பிற்கும் சம சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. என்றாலும், உண்மை என்ன? அமெரிக்கா சீனாவிற்கு எதிராக மேற்கொள்ளும் தலையீடுகளின் விளைவாக இந்திய கடல் பிராந்தியத்தில் யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதோடு, இலங்கை இராணுவம் அத்திலாந்திக் கடல் பிராந்தியத்தில் யுத்தத்தில் மேலோட்டமாக பார்க்கும்போது இவ்வொப்பந்தம் பரஸ்பர ஒத்துழைப்பிற்கானதென தெரிந்தாலும், இது ஒரு பக்கச் சார்பானதாகும். அமெரிக்க இராணுவத்திற்கு இலங்கை மண்ணை பயன்படுத்த இடமளிப்பதால், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தமொன்றில் இலங்கையும் பங்காளியாவதால், அந்த யுத்தத்தில் இலங்கை எதிர்த்தரப்பினரின் இலக்காக ஆகி அதனூடு இலங்கை மக்களின் வாழ்வு ஆபத்தில் தள்ளப்படும் என்பதை விளங்கிக் கொள்ள புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

 

சுருக்கமாக சொல்வதாயின், இவ்வொப்பந்தமானது அண்டை நாடொன்றிக்கு எதிராக இலங்கை மண்ணையும் வளங்களையும் பயன்படுத்த அமெரிக்காவிற்கு இடமளிப்பதுதான். அது மட்டுமல்ல, இலங்கையை ஏகாதிபத்தியவாதிகளின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப தலையாட்டும் பொம்மையாக்கி இலங்கை மக்களை யுத்த ஆபத்தில் தள்ளுவதும்தான். உலக யுத்தத்தின்போது யப்பானிய இராணுவம் இலங்கையை தாக்கியது. இதற்குக் காரணம் இலங்கை பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தமையும், பிரித்தானியா யப்பானுடன் யுத்தத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசிய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அரசியலில் ஏகாதிபத்தியத்தோடு அவ்வாறுதான் கைகோர்த்துள்ளது. மாபெரும் தேசாபிமானியாக வேடமிட்ட கோத்தபாய ராஜபக்ஷாக்களின் உண்மையான முகத்தை இவ்வாறான ஒப்பந்தங்களின் ஊடாகவே புரிந்துகொள்ள முடியும். 10 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வொப்பந்தம் எப்படிப்பட்டதென இதுவரை வெளிப்படுத்தாததோடு, இவ்வொப்பந்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பார்த்ததில்லை என்பதும் அமைச்சரவை உறுப்பினர்கள் கூட ஒப்பந்தத்தை கண்டதில்லை. பல நாடுகள் இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதோடு, அவற்றில் பெரும்பாலும் ஒரு ஒற்றுமை காணப்படுவதனால் இந்த இரகசிய ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை எம்மால் அனுமானிக்க முடியும். முந்தைய ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட அனைத்தையும் பின்தள்ளிவிடுவதாக சபதம் செய்து அதிகாரத்திற்கு வந்த இந்த அரசாங்கம் அதே வேலைத்திட்டத்தையே முன்னெடுத்துச் செல்கின்றது. அதாவது அவ் வேலைத்திட்டம் ராஜபக்ஷாக்களையும் விட வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு வேண்டியளவு உதாரணங்கள் உள்ளன. அவற்றில் இது சிறந்த உதாரணமாகும். மக்களுக்குத் தெரியாமல் ராஜபக்ஷாக்கள் திருட்டுத்தனமாக ஒப்பமிட்டு மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒப்பந்தம் 10 வருடங்கள் கடந்த நிலையில் அதனை காலவரையறையின்றி தொடர்ந்தும் செல்லுபடியாகக் கூடியவாறு ஒப்பமிடப்போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இவருடைய கூற்றின்படி உலகம் அழியும் வரையோ அல்லது குறைந்தபட்சம் அமெரிக்கக் குடியரசு சோஷலிஸ நாடாகி இவ்வாறான ஒப்பந்தங்களை இரத்துச் செய்யும் வரையோ எமது பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் யுத்தங்களின்போது இலங்கையை பயன்படுத்த முடியும். அது எந்தளவு அழிவைத் தரக்கூடியது என்பதை விளக்க வேண்டியதில்லை.

நிக்கராகுவாவின் பழைய கவிதையொன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சல்மான் ருஸ்டி அவரது நூலொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை நிகாரகுவாவின் இளம் பெண் பிள்ளையொன்று ஒரு புலியின் முதுகில் ஏறி பெருமையுடன் சிரித்துக் கொண்டு காட்டுக்குள் சென்றது. சிறிது நேரத்தில் புலி காட்டிலிருந்து வெளியே வந்தது. அதன் முதுகில் அந்த பெண் பிள்ளை இருக்கவில்லை. ஆரம்பத்தில் பெண் பிள்ளையின் முகத்திலிருந்த சிரிப்பு புலியின் முகத்தில் இருந்தது, நிகரகுவா கவிதையின் கருத்து அதுதான். ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டு, அது இலங்கைக்கு நம்மை பயக்கும் மதிப்பிற்குரிய ஒப்பந்தமெனக் கூறி, இலங்கையை அமெரிக்க புலியின் முதுகில் ஏறி சிரித்த முகத்துடன் காட்டுக்குள் நுழைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது காலத்தில் அந்த சிரிப்பு யாருடைய முகத்தில் இருக்குமெனக் கேட்பது இத்தருணத்தில் மிக முக்கியமாகும். அந்தச் சிரிப்பு புலியின் முகத்தில் மாயச் சிரிப்பாக மாறி நிலைத்திருப்பது நிச்சயம்.