Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வித்தியாவுக்கு நீதி கேட்டு .....

சகோதரி வித்தியாவுக்கு  நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் நேற்று (26.05,2015) கொழும்பு பொரளை மயானத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போரட்டம் பெண்ணியவாதியும், சட்டத்தரணியுமான ஷாமில தளுவத்தவின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், தனியல்பாகவே மூவின மக்களும் பங்குகொண்டனர். 700 பேர் வரையில் பங்கு கொண்ட போராட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று முன்வைக்கப்பட்டது. அம் மனுவில் உள்ள கோரிக்கைகளும், பரிந்துரைகளும் கீழே வாசிக்கலாம்:  

சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் பற்றிய கோரிக்கைகள், மற்றும் பரிந்துரைகள்

1. தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். அனைத்துபாலியல் வல்லுறவு வழக்குகளுக்கும் விரைந்து தீர்ப்புகள் வழக்கப்படல் வேண்டும். இவ்வாறான வழங்குவிசாரணைகளை துரிதப்படுத்தி விசாரிக்குமாறும், சிவலோகநாதன் வித்யாவுக்கும் மற்றும் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்குமாறு கோருகிறோம்.

2. முடிக்கப்படாமல் குவிந்து கிடக்கும் பாலியல் வன்புணர்வு, குடும்ப நபர்களால் சிறுவர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளை விரைந்து முடிக்க, ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனி நீதிமன்றத்தை அமைக்ககப்படல் வேண்டும்.

3. பாலியல் வன்புணர்வாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை நிறுத்திவைக்கும் -ஒத்திவைக்கும் வழக்கத்தை நிறுத்து.

4. இலங்கை தண்டனைச் சட்டம் பிரிவு 364 (1) கீழ், பாலியல் வல்லுறவு வழக்குகளில், குறைந்தபட்ச 7 ஆண்டு- அதிகபட்ச ம் ஆண்டு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதம், மற்றும் இழப்பீடு கொடுக்க நீதிமன்றங்கள் தீர்ப்பு வளங்க வகைசெய்யப்பட்டுள்ளது. சட்டப்படி பாலியல் பருவமற்ற சிறுவர் - சிறுமியர் மீது நடாத்தப்படும் பாலியல் வன்புணர்வுக்கு (statutory rape), அதிகபட்ச தண்டனைனை 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக அதிகரிக்க வேண்டும்.

5. 16 வயதிற்கு மேற்பட்ட உடலுறவு கொள்வதனை சட்டம் அனுமதிக்கிறது. அவ் உடலுறவு மூலம் கர்பமடைந்தால், பெண்கள் எதிர்மறை விளைவுகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்ட வயது 18. எனவே, 17-18 இடையே ஒரு பெண் உடலுறவு மூலம் கர்ப்பிணியாகி விடும் போது மணக்க முடியாது. எனவே, இந்தச் சட்ட இடைவெளியை நீங்க- பிரச்சனைகளுக்கு தீர்வுகாண சட்ட மற்றம் கொண்டு வரப்படல் வேண்டும்.

6. குடும்ப நபர்களால் சிறுமியர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துஷ்பிரயோகத்தால் உண்டாகும் கரு, பாலியல் வன்புணர்வு மூலம் ஏற்படும் கரு, மற்றும் குறைபாடுகளுடனான கருவை, சட்டரீதியாக மருத்துவ உதவியுடன் கருக்கலைப்புச் செய்யும் வகையில், குற்றவியல் சட்டம் திருத்தம் செய்யப்படல் வேண்டும்.

7. மாணவர்களின் போக்குவரத்துக்கு உபயோகிக்கப்படும் அரச மற்றும் தனியார் பேரூந்துகள், வாகனங்கள் அனைத்தும் போலீஸ் மற்றும் கல்வி அமைச்சினால் பதிவுசெய்யப்படல் வேண்டும். மேலும், மாணவர்கள் போக்குவரத்துத்துறையில் உபயோகப்படுத்தப்படும் வாகனங்களில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கற் படவேண்டும்.

8. பாலினப்பிரச்சனைகள் பற்றி நன்கு பயிற்றப்பட்ட போலீஸ் அதிகாரிகளை அனைத்து மாவட்டத்திலும் நியமிப்பதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவுகள் பலப்படுத்தப்படல் வேண்டும்

9. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வழக்கு விசாரணைகளில், திட்டமிட்டமுறையில், முறையான தரவுகளைச் சேகரிக்கும் விதத்தில் தனியான கட்டமைப்பு ஒன்றை நிறுவு .

10. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் பாதுகாப்பது, நிவாரணம், உரிய இழப்பீடு உட்பட சட்டம் மற்றும் மருத்துவ உதவியை வழங்கு.

11. இலங்கையில் திருமண வயது 18 என்பதனை வரையறுக்கும் சிவில் நெறிமுறையை உருவாக்கு

12. குடும்ப நபர்களால் சிறுமியர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், மற்றும்

பாலியல் வன்புணர்வு/ வன்கொடுமை வழக்குகளில் சட்ட மற்றும் மருத்துவ நிபுணத்துவப் பங்களிப்பை உறுதிசெய்யவும், மரபணுவியல் பரிசோதனை செய்யவும் உதவும் வகையில் ஒரு விஷேட நிதியத்தை ஏற்படுத்து .

13. சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் நாட்டின் எல்லாப்பகுதியிலும் உள்ள பஸ் தரிப்புகளிலும் பாதுகாப்பு நிலையங்களை ஏற்படுத்து .

14. பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளை விரைவாக நடத்தும் வகையில், சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டல் வேண்டும் .

15. உடற்பயிற்சிக் கல்வியின் ஒரு பகுதியாக தற்காப்புக் கலைகள் பயிற்று விக்கப்படல் வேண்டும்

16. பாலியல் வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு பிரத்யேகமான பாதுகாப்புகள் வழங்கும் முகமாக, சட்டத்தை நடை முறைப்படுத்து .

*இந்தக் கோரிக்கைகள் சட்டத்தரணி ஷாமிலா தலுவத்த அவர்களால் வரையப்பட்டது . - Drafted by Shamila Daluwatte, Attorney-at-Law