Fri12092022

Last updateSun, 19 Apr 2020 8am

"இயற்கைக்கு மாறான" அனர்த்தங்களின் குற்றவாளிகள்

"இயற்கை அனர்த்தங்கள்" குறித்து இந்நாட்களில் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கான சமீபத்திய காரணம் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கன மழையும், அதனால் இலட்சக்கணக்கான மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய வெள்ளமும் மற்றம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்டு மேலும் பலரை அனாதைகளாக்கிய மண்சரிவும் தான். கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவியது. பின்பு மழையால் துன்புற வேண்டிய காலம் உதயமாகியது. வெப்பநிலை காரணமாக மரணிக்க நேர்ந்த மக்கள் இப்போது மழையால் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே எமக்குள்ள கேள்வி இதுதான். நாங்கள் முகம் கொடுப்பது “இயற்கை அனர்த்தத்திற்குத்தான்” என்பது உண்மையா? அல்லது மனித செயற்பாடுகள் தான் அனர்த்தத்திற்கு காரணமா?  மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிறுவனங்கள் தேவையான அளவிலும், வினைத்திறனுடனும் செயற்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கும், இந்த பேரழிவின் முன்னால் பெரும்பாலான மக்கள் வெளிப்படுத்திய மனிதப் பண்புகளை சமூத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தேடுவதற்கு முன்பு, அது குறித்து நாம் விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும். 

பூமி வெப்பமடைதல்

இதற்கு முக்கிய காரணம் உலக வெப்பம் அல்லது பூமியின் வெப்பம் அதிகரிப்பதுதான். புள்ளிவிபரங்களுக்கேற்ப, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை கடந்த நூறு வருடங்களில், கடலின் மேல்மட்ட வெப்பம் செல்சியஸ் டிகிரி 0.8 ஆல் அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலையில் மூன்றில் இரண்டு வீத அதிகரிப்பு 1850ன் பின்னரேயே நடந்தது. பூமியின் வெப்பநிலையை முறையாக குறித்து வைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட 1850 லிருந்து இதுவரை உலக வெப்பம் கூடுதலாக அதிகரித்த தசாப்தங்களாக கடந்த 1980 – 1990, 1990 – 2000, மற்றும் 2000 – 2010 ஆகிய தசாப்தங்களை குறிப்பிடலாம். ஆனால், இப்போது நாம் கடந்துகொண்டிருக்கும் 2010 -2020 தசாப்தம் அவை அனைத்தையும் கடந்து அதிக வெப்பமான தசாப்தமாக முடிசூடவிருக்கின்றது. 1850 லிருந்து இன்றுவரை அதிகூடிய வெப்பநிலை கொண்ட வருடமாக 2015 பதிவாகியுள்ளது. ஆனால், சிலவேளை 2016 அந்த சாதனையை முறியடிக்கக் கூடிய வருடமாக இருக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது. அடுத்து வரவிருக்கும் ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தை விட வெப்பம் கூடிய வருடமாக சாதனை படைக்கப் போகின்றது. 

இவ்வாறு வெப்பம் அதிகரிப்பதனால் என்ன நடக்கும்? ஒன்று, அதிக வெப்பநிலையின்போது மாத்திரமே செயற்படும் பல்வேறு வகைப்பட்ட வைரஸ்கள் செயற்படத் தொடங்கும். அவை உலகம் பூராவும் பல்வேறு தொற்றுநோய்களை பரப்பும். சமீபத்தில் அமெரிக்க தீபகற்பம் முழுக்க கட்டுப்படுத்த முடியாதவாறு வியாபித்து மனித உயிர்களை பலியெடுத்த ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ அதற்கு சிறந்த உதாரணம் மட்டுமே. அதிக வெப்பம் காரணமாக துருவப் பிரதேசங்களிலுள்ள பனிப்படலங்கள் கரைந்து கடல் நீர்மட்டம் உயர்ந்து சிறு தீவுகளின் அரசுகள் அழியக் கூடிய ஆபத்துக்கள் உள்ளன. கடல் அரிப்பின் காரணமாக பெரும்பாலான நாடுகள் சிறிதாகின்றன. சமீபத்திய உதாரணங்களை எடுத்துக் கொண்டால், 2050 ஆகும்போது இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பம் முற்றாக மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன், பூமியின் வெப்பத்துடன் காபன் டயொக்ஸைட் கலக்கச் செய்வதன் ஊடாக மாலைதீவு போன்ற நாடுகள் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

அடுத்த விடயம் என்னவென்றால் கடந்த மாதம் எமது நாட்டில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள். வாயுமண்டல வெப்பம் அதிகரிக்கும்போது, அதிகமான நீராவியை வாயுமண்டலம் உறிஞ்சிக் கொள்வதுடன் அது மீண்டும் மழையாக கொட்டுவதனால், குறுகிய காலத்திற்குள் கூடுதலாக சேரும் நீர் நிலத்தில் அனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடிய கனமழையாக கொட்டும். இவ்வாறு குறுகிய காலத்திற்குள் கூடுதலான மழை கொட்டுவதால் நிலம் அதனை தாங்கிக் கொள்ளாத நிலையில் மண்சரிவுகளும் வெள்ளமும் ஏற்படும். இப்படியாக பெய்யும் மழை நிலத்தடி நீர்வளத்தை போஷிக்காததுடன், நிலத்தில் உறிஞ்சப்படாமல் மண்ணை அரித்துக் கொண்டு கடலுக்கு பெருக்கெடுக்கும். ஆகவே, மழை நின்றவுடன் மீண்டும் வெப்ப காலநிலையும் வரட்சியும் ஏற்படுவதுடன் மழை ஓய்ந்து சில நாட்களின் பின்பு கிணறுகள் வற்றி வரட்சியை எதிர்கொள்ள நேரிடும். மழையினாலும், வரட்சியினாலும் மாறி மாறி மக்கள் துன்பப்படுவதற்கு காரணம் மனிதன் ஈவிரக்கமின்றி சூழலை அழித்தமைதான். இந்த உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிந்தமையின் ஊடாக முதலாளிகளுக்கு இலாபத்தை குவிக்கும் நோக்கத்தில் மாத்திரம் திட்டமிட்டுள்ளதும், சூழலுக்கோ அல்லது மனித உயிர்களுக்கோ பொறுப்பேற்காத பொருளாதார உபாயத்திற்கு கொடுத்த இழப்பீடுதான் அழிவுற்ற மனித உயிர்களும் சொத்துக்களும். 

வெப்பமும் ஏகாதிபத்தியமும் 

இந்த வெப்பம் ஒருபோதும் இயற்கையானதல்ல. இந்த இயற்கைக்கு மாற்றமான வெப்பத்துக்கான காரணிகளில் பிரதான காரணியானது வளிமண்டலத்தின் வெப்பத்தை அதிகரிக்கும் பசுமை இல்லா வாயு விகிதம் அதிகரிப்பதாகும். வளிமண்டல வெப்பத்தை அதிகரிக்கும் வாயு வகைகளில் பிரதான வாயு உயசடிழn னழைஒனைந என்ற வாயுவாகும். பிரமாண்டமான தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும்  அதிகளவு உயசடிழn னழைஒனைந வாயு வளிமண்டலத்தில் கலப்பதுடன் 1990களில் போன்றே நாம் தொடர்ந்தும் சூழலை மாசுபடுத்தும் பட்சத்தில் 2025-2050 க்கு இடையேயான காலத்திற்குள் வளிமண்டலத்தில் உயசடிழn னழைஒனைந ன் விகிதம் இரட்டிப்பாகக் கூடும். அதன் விளைவாக பூமியின் வெப்பம் செல்சியஸ் 1.5-4.5 பாகைக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிக்கக் கூடும் முழுமையாக முன்னேறியவர்களென நாமமிட்டுக் கொண்டுள்ள வல்லாதிக்க பலவான்கள் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். அவர்கள் தமது இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வெறித்தனமாக செயற்படுவதுடன், ஒருவரையொருவர் முந்திக்கொண்டு சூழலை மாசடையச் செய்கின்றனர். வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் ஒட்டுமொத்த உயசடிழn னழைஒனைந அளவில் 28 விகிதத்தினை வெளியிடுவது அமெரிக்காதான். அது அமெரிக்க மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கல்ல. உலக மக்கட் தொகையில் 4 சதவிகிதம் மாத்திரமே அமெரிக்காவில் வசிக்கின்றனர். அதிகமதிகமாக இலாபத்தை விழுங்கிக் கொள்வதற்காவே இவ்வாறு சூழலை அழிக்கின்றனர். உலகில் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் உயசடிழn னழைஒனைந அளவில் மேலும் 23 விகிதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்த நாடுகள் 11 சதவிகிதத்தினையும், ரஸ்யா 9 விகிதத்தினையும் வெளியிடுகின்றது. இதன்படி, மனிதப் பேரழிவு சம்பந்தமான பிரச்சினை இலங்கையின் எல்லைக்குள் தீர்க்கப்பட முடியாத உலகப் பிரச்சினையாகும். இதற்கு நிரந்தர தீர்வை காண்பதாயிருந்தால், இலாபத்தை மட்டுமே முதற் காரியமாகக் கொண்டு சமூகத்தினையும், சூழலையும் அழிக்கும் முதலாளித்துவ பொருளாதார கொள்கையினையும் வல்லாதிக்கத்தினையும் தோற்கடிக்க வேண்டும். 

இலங்கையின் “அபிவிருத்தி”

இப்படியாக உலக மட்டத்தில் தாக்கத்தினை உண்டாக்கக் கூடிய காரணிகளினால் பேரழிவு மழை பெய்கின்றது. மழையால் ஏற்படும் பாதிப்புக்கள் இந்தளவு அதிகமாவதற்கு பொறுப்புக் கூற வேணடியவர்கள், போலி அபிவிருத்தி உபாயங்கள கையாண்டு இதுவரை இந்நாட்டை ஆட்சி செய்த, செய்துகொண்டிருக்கும் ஆட்;சியாளர்கள்தான். பல்தேசியக் கம்பனிகளின் இலாபத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் வாக்குறுதியளிக்கும் ஆட்சியாளர்கள் அவர்களது மூலதனத்தை ஆகர்சிப்பதிலேயே நாட்டம் கொண்டு செயற்படுகின்றனர். அங்கு மனித உயிர்களுக்கு, சூழலுக்கு, சமூகப் பண்பாட்டிற்கு ஏற்படும் அழிவுகளைப் பற்றி அவர்களுக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றி ஆளும் வர்க்கத்திற்கு கவலை கிடையாது. நாம் அரசியல்ரீதியில் இந்த அரசாங்கத்திற்கு எதிராளிகளாக இருப்பதனால், இது இட்டுக்கட்டப்பட்டதல்ல என்பதை கடந்த வரலாற்றை நினைவுபடுத்தி பகுப்பாய்வு செய்யும் எந்த ஒருவராலும் புரிந்து கொள்ள முடியும். 

இது குறித்த சுருக்கமான வரலாற்றை ஆய்ந்து பார்ப்போம். அப்போதுதான் மலையகத்தின் மண்சரிவுகளையும் கொழும்பை அண்டி ஏற்பட்ட வெள்ளத்திற்கும் என்ன காரணமென்பதை விளங்கிக் கொள்ள முடியும். 1980களில் அபிவிருத்தி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் முக்கிய இடம் வகித்தது பிரமாண்டமான நீர்த்தேக்கங்களை அமைப்பதுதான். இந்த நீர்த்தேக்கங்கள் மத்திய மலைநாட்டில் அமைக்கப்பட்டன. இலங்கையில் நீர்த்தேக்கங்கள் அமைக்கும் கலாச்சாரம் நீண்டகாலமாக தொடர்ந்த போதிலும், அவை அனைத்தும் வடமத்திய மாகாண சமவெளியில் மழைநீரை சேமிப்பதற்காக அமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களாகும். ஆனால், இந்த துரித திட்டங்கள் மூலம் நதிகளின் குறுக்காக, இரத்த நாளங்களை தடுப்பதைப்போன்று, இயற்கை நீர்வழிப் பாதைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நீர்த்தேக்கங்களாகும். இவற்றை மத்திய மலைநாட்டின் மேட்டுநிலங்களில் கட்டியமையால் மலையகத்தின் மண்ணும் நிலமும் உறுதியற்றவையாகின.

பிரித்தானிய காலனித்துவ காலத்தில் உயர்ந்த மலைப் பிரதேசங்களில் தேயிலை உற்பத்தி செய்தமையால் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை இதனால் மேலும் மோசமடைந்தது. 1990களில் அபிவிருத்தி என்ற பெயரில், கொழும்பு நகரை மையமாகக் கொண்டு, சுரண்டிக் கொழுக்கும் நோக்கத்திற்காக பெருமளவான தொழிலாளர்கள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டனர். அதன்படி, குடியேற்றுவதற்காகவும், கம்பனிகளுக்கு வழங்குவதற்காகவும் தாழ்நிலங்கள் நிரப்பப்பட்டன. கொழும்பு நகரில். வீழும் மழைநீர் மற்றும் களனி கங்கையில் அதிகரிக்கும் நீரும் வடிந்து செல்லும் தாழ்நிலங்கள் நிரப்பப்பட்டமையால் நீர் வழிந்தோடும் பாதைகள் அடைபட்டன. 2000 தசாப்தத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய இயற்பியல் திட்டம் பாரியளவில் சூழலை அழிக்கக் கூடிய திட்டமாகும். அதன் நோக்கமானது சுற்றுலாப் பிரயாணிகளை கொழும்பிற்கு ஈர்த்துக் கொள்ளும் இலக்கைக் கொண்ட நகர அலங்கரிப்பும், முதலீட்டாளர்களை இலக்கு வைத்து நாட்டின் ஏனைய பிரதேசங்களை மீளமைப்பதுமாகும். அதன்போது அதிவேகப் பாதைகள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை விருத்தி செய்வதற்கு முக்கிய இடமளிக்கப்படும்.

இந்த தேசிய இயற்பியல் திட்டத்தின் ஒரு அங்கமான அதிவேகப் பாதைகள் காரணமாக உலக சூழல் உரிமையாகக் கருதப்படும் சிங்கராஜ வனாந்திரம் இரு தடவைகள் இரண்டாக்கப்படுகின்றன. பாதைகள் அமைத்தல் மற்றும் “கேபல்’ இழுக்கப்படுவதால் துண்டாடப்படும் காடுகளின் எண்ணிக்கை 39 ஆகும். இத்திட்டம் செயற்படும் பட்சத்தில் 2011 ஆகும்போது 16. 8 வீதமாக காணப்படும் இலங்கை காடுகளின் விகிதம் 2030 ஆகும்போது 13.10 வீதமாக குறைந்துவிடும். இதன் காரணமாக நிலத்தடி நீர் வற்றி, தற்போது பெருக்கெடுத்து ஓடும் 103 நதிகளில் குறிப்பிட்டளவு நதிகள் செத்த ஆறுகளாக மாறும் அபாயம் தோன்றும். அடுத்ததாக, அதிவேக பாதைகள் அமைப்பதற்கு 280.7 மில்லியன் கனமீட்டர் மண் தேவைப்படும். இவ்வாறு மண் வெட்டுவதனால் நாட்டின் நிலவியல் அம்சங்கள் கூட மாற்றமடைந்து பாரிய அளவில் சூழல் அழிந்துவிடும். கட்டிட நிர்மாணிப்புகளால் நீர் வழிந்தோடும் இயற்கை வழிகள் அடைபட்டு வெள்ள அபாயம் உக்கிரமடையும். கடந்த அரசாங்கத்தினால் ஆலோசிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தினையே சிறு மாற்றங்களுடன் தற்போதைய அரசாங்கமும் முன்வைத்துள்ளது.

உதாரணமாக இன்றைய அரசாங்கத்தின் கீழ் எவ்வித மாற்றமுமின்றி செயற்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் ஏற்படும் சூழல் அழிப்பை பார்ப்போம். இங்கு கடலை மீட்டெடுக்கும் நடவடிக்கைக்காக 16 மில்லியன் கியுப் கருங்கல் தேவைப்படுகின்றது. கருங்கல் பெற்றுக் கொள்வதற்காக நாட்டிற்குள் உள்ள விசாலமான கற்பாறைகளை உடைக்க வேண்டும். இதனால் நாட்டிற்குள் நிலம் உறுதியற்றதாக மாறுவதுடன் மண்சரிவு அபாயம் உக்கிரமடையும். அதோடு, குடிநீர் ஊற்றுக்களும் வற்றிவிட காரணமாக இருக்கும். இத்திட்டத்திற்கு நாட்டிற்குள்ளிருந்து 30 மில்லியன் கனமீற்றர் மணல் பெற்றுக் கொள்ளப்டும்;, அம்மணல் மீன் இனப்பெருக்க வலயங்களுடன் கடலில் கொட்டப்படுவதனாலும் இந்த அபாயம் மேலும் உக்கிரமடையும். அது மாத்திரமல்ல, மெகா பொலிஸ் அதிநகர வேலைத்திட்டம் போன்ற பெயர்களால் மேற்கொள்ளப்படும் போலி அபிவிருத்தி திட்டங்களினால் சூழல் முற்றாக நாசமாவதுடன் முதலீட்டாளர்களின் பெயரில் வரும் பல்தேசிய மூலதனம் அதிக இலாபத்தினை குவித்துக் கொள்ளும். என்றாலும் அது மக்களுக்கு அழிவை மட்டுமே தரும். இந்த போலி அபிவிருத்தி திட்டத்தினால் ஏற்படப்போகும் அழிவிற்கு, இம்முறை அதிக மழைக்கு முகம் கொடுக்க முடியாமல் ஏற்பட்ட அழிவு மாத்திரம் போதுமானதாகும்.

ஆகவே, இந்த ஆக்கத்தை எழுதும் தருணத்தில் இந்த ‘இயற்கையானது அல்லாத” அனரத்தங்களால் 82 பேர் மடிந்துள்ளனர். 118 பேர் காணாமல் போயுள்ளனர். 3,48,476 பேர் இன்னல்களுக்கு ஆட்பட்டுள்ளனர். ஓருவேளை நீங்கள் இதனை வாசிக்கும் தருணத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கவும் கூடும். எப்படியிருந்தாலும், இந்தப் பாரிய அழிவிற்கு பொறுப்பானவர்கள் தாம் சூழலை நாசமாக்கி, இலட்சக்கணக்கான மனித வாழ்வை நெருக்கடிக்குள் தள்ளி குவித்துக் கொண்ட இலாபத்தை கணக்கிடுவதுடன், அந்த இலாபத்திற்காக தமது உழைப்பை தியாகம் செய்த மக்கள் அதற்கு ஈடு செலுத்தி வருகின்றனர். அனர்த்தங்களால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கியதுடன் நின்றுவிடாமல் அழிவிற்கான உண்மை காரணங்களுக்கு எதிராக செயற்பட வேண்டும். அனரத்தம் ஏற்படும் வரை பார்த்திருந்து அனர்த்தத்திற்கு பலியானவர்களுக்கு சோற்றுப் பார்சலை பகிர்ந்தளிக்கும் அரசியலுக்குப் பதிலாக அழிவிற்கு எதிராக மற்றும் அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நிபந்தனையின்றி போராடும் அரசியலை முன்னெடுக்க வேண்டியது அதனால்தான்.