Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய தேசத்தை நோக்கி..!?

அந்தக்காலத் ஆசிரியரில் பலர்

எதுக்கெடுத்தாலும் தடி தண்டுகளால் அடிச்சு

தங்களின் வீட்டுச் சுமைகளை

மாணவரான எங்களுக்கு எம்மீது பதித்து

தேடலற்ற கல்வியினை திணிச்சுப் படிப்பிச்சதால்..!?

அவையே சரியான கருத்தென..,

எம்மனதில் அச்சடித்த பதிவாகி

எமது எதிர்காலம் நோக்கி..,

எமை வடம்பிடிக்கச் சொல்கின்றது.

 

அப்படி ஒரு நாட்டுக்குள்

இடதுப் புரட்சி எனச்சொல்லி

தேடற் திக்கற்று முடுமுடுத்துத் தொடங்கிய

ரோகணவின் ஜேவீபி புரட்சியும்

தெற்கிருந்து வடக்குவரை

முழுமையற்றதாய் உடைஞ்சே போச்சு.

அதற்கு முன்பு தோழர். சண்

ரோகணவுக்குச் சொன்ன சேதி

எட மேனை, உனக்குது வேண்டாமடா.., என்பதாகும்.

அந்தப் பொடியனும் குழுவும்

ஏதேதோ திணிப்புகளுக்குள்

கருத்தெண்டும்.., புரட்சியெண்டும்..,

அரசுக்கு அடிக்க வெளிக்கிட்டு

மக்களை இனங்களை உலைத்து

அரைகுறையாய் அழிஞ்சுபோச்சு.

இதில் மக்களை முடங்களாக்கி

நாட்டினை ஈட்டுக்குமேல் ஈடுவைத்து

அடக்கியாள்வதே அரசாட்சியென்று

அரச போக்குகள் அம்பாளிக்க..,

 

அதைத் தடுத்து வாழ - நாங்களும்

எங்களுக்குத் தெரிஞ்ச தடிகளால்

அடிக்க வெளிக்கிட்டு..? - அந்த

அடிதடிகளை தடுக்கிறோமென

ஆராரோவெல்லாம் வந்துசேர்ந்து..!?

இப்ப எங்களிட்டை வேலியுமில்லை, காணியுமில்லை.

அட, மக்களின் சுய வாழ்வென்பது

அன்னியமாகி தொலைசே போச்சு..!?

 

ஏன்தான் இதுக்குள்ளால் விடுதலை

கிடைக்கவில்லை என்றால்..!?

அதற்காக அனைவரும் பழைய மரபுபோக்கி

புதிதாகச் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

இது நாள்வரையும் மக்களை ஆட்டிப் படைச்ச

நாடாளுமன்ற கதிரைக் கருத்துகளாலும்..,

நாடறுத்து வாழ்வோம் என்ற..?

அடிகளின் அனுபவ மூலமாகவும்..,

நாம் அனைவரும் கருத்து செயல்

வாழ்வியலில் மனிதர்களாக

எங்களுக்குள் மாற்றம் பெறவேண்டும்..!?

அவைக்கான மாற்றமென்பது

சமய - சாதி - வர்க்க - இனங்களென்ற

சகதிகளை மனதிலிருந்து களைந்த கருத்தியல்

வாழ்வுநிலை என்பதாகும்.

அதன் நோக்காக முன்னணிக்கு

கருத்துரைத்து செயலாற்ற வாருங்கள்.

அடிதடியில்லாத அடக்குமுறையற்ற சுதந்திரமான

மக்களின் தேசத்தில் வாழ்வதற்கு.

-மாணிக்கம்.